Wednesday, February 3, 2010
காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்பாள் கோயில் .
500 வருடங்களுக்கு முன் காரேறு மூது¡ர் என்ற பெயர் வழக்கிலிருந்த போது ஸ்தாபிக்கப்பட்டது. இப்பெயர் திரிந்து காரைதீவாயிற்று. கதிர்காமம்செல்லும் யாத்திரிகர்கள் இக்கோயிலில் தங்கிச் செல்வது வழக்கம். கோயிலின் தலவிருட்சம் வயது முதிர்ந்த வேப்ப மரம். இப்பகுதியை அரசாண்ட வன்னிய மன்னன் நிலபுலன்களை பார்வையிட வந்த சமயம் அரசனின் யானை கீழே விழுந்து மயங்கி படுத்ததாகவும் அப்போது கோயில் மணி ஒலிக்க அங்கு வந்த ஏவலாளர்கள் கோயிலின் மகிமையை அரசனுக்கு எடுத்துச் சொன்னார்கள். கோயிலில் பூஜை செய்து கொண்டிருந்த தேவந்தி என்ற பெண் விவரம் அறிந்து வேப்பமிலை அரைத்து குளிகைசெய்து யானைக்கு கொடுத்து தீர்த்தம் பருக்கியபின் யானை எழுந்ததாகவும் ஒரு கர்ணபரம்பரை கதையுண்டு.
அதற்கு கைமாறாக அரசன் ஆலயம் அமைத்து கொடுத்தானாம். அரசனுடைய இரு மனைவியர்களில் ஒருவாரான சிறிய பூற்கோதைக்கு இழந்த கண்பார்வை அம்மனை வணங்கியதால் கிட்டியதாகவும் கதையுண்டு. ஆலயம் தொடர்பான வழக்குலை என்னும் என்ற ஏடு ஒன்றுண்டு. வருடா வருடம் 7 நாட்கள் நடக்கும் உற்சவத்தில் இது தினமும் பாடப்பெற்று நிறைவு பெறும். 1976 ல் கோயில் புனருத்தாரணம் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
இலங்கையில் கண்ணகியம்மன் வழிபாடு
கண்ணகி அம்மன் வழிபாடு கி.பி 171 முதல கி.பி 193வரை அனுராதபுரத்தில் இருந்து ஆட்சி புரிந்த கஜபாகு என்ற அரசனால் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதென இராஜவாளி என்ற சிங்கள நூல் கூறுகிறது. கஜபாகு ஆட்சி காலத்தில் சேரமன்னன் செங்குட்டுவன் தனது தலைநகராகிய வஞ்சியில் இமயமலையில் இருந்து கொண்டுவந்த கல்லில் கண்ணகிக்கு சிலை செய்து கோயில் அமைத்து பெருவிழா எடுத்தான் . கிபி 178ல் நடந்த அவ்விழாவிற்கு செங்குட்டுவனின் அழைப்பையேற்று அவன் நண்பனாகிய கஜபாகு விழாவில் கலந்து கொண்டான்.
இவ்விழாவில் பாண்டிய மன்னன் வெற்றிவேற் செழியனும், சோழ அரசன் பெருநற்கிள்ளியும், கொங்குதேச அரசன் இளங்கோ அடிகளும், மகத தேச மன்னரும் கலந்துகொண்டாதாக துரை ஜெயநாதன் ‘ஆதிதிராவிடரும் அழிந்துபோன சங்கங்களும்என்ற கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
விழாவில் கலந்த கஜபாகு கண்ணகியின் அற்பதங்களைக் கண்டு வியந்தான். கஜபாகு , கண்ணகியை செங்குட்டுவனைப் போல் நித்தியபூசை செய்து வலம் வந்து தன் நாட்டிலும் எழுந்தருளி அருள்புரிய வேண்டும் என்று அவன் கேட்டு பிரார்த்தித்தான். அவன் விரும்பியபடி எல்லாம் நடக்குமென ஆசி கேட்டு கஜபாகு உள்ளம் நெகிழ்ந்து கண்ணகி மேல் கூடிய நம்பிக்கை கொண்டான்.
இலங்கையில் கண்ணகி வழிபாட்டினை பரப்ப தன் விருப்பத்தை செங்குட்டுவனிடம் கஜபாகு தெரிவித்தான். செங்குட்டுவன் சந்தன மரத்தால் செய்த கண்ணகி சிலையையும் ஒரு காற்சிலம்பையும் சந்தனமரப் பேழையில் வைத்து கஜபாகுவிடம் கையளித்தான்.
கஜபாகு கண்ணகி விக்கிரகத்துடன் இலங்கைக்குத் திரும்பும்போது தன்னுடன் பன்னிரண்டாயிரத்துக்கு மேற்பட்ட பல்குடிமக்களையும் அழைத்துச்சென்றான். அவன் வந்திறங்கிய சிலையுடன் வந்திறங்கியது மாதகலுக்கருகேயுள்ள சம்புகோள துறைமுகம். யானை மேல் சிலையை வைத்து பல யானைகள் பின்னே வர ஊர்வலமாய் பல இடங்களுக்கு எடுத்துச்சென்றான். ஊர்வலம் நின்றயிடமெல்லாம் கண்ணகி வழிபாடு தோன்றிற்று.
யாழ்குடாநாட்டில் கண்ணகியம்மன் வழிபாடு
இம்மன்னனால் யாழ்ப்பாணத்தில் முதலாவது கண்ணகி கோயில் ஸ்தாபிக்கப்பட்ட இடம் அங்கணாகடவை எனப்படும். அங்கனா என்பது அம்மனை குறிக்கும். சிங்களநாட்டில் 'பத்தினி தெய்யோ' என கண்ணகி அம்மனை அழைத்தனர். ஒல்லாந்தர் காலத்தில் அக்கோயிலும் சிலையும் யானையால் சிதைக்கப்பட்டது.
யாழ்ப்பாண குடாநாட்டில் இருந்த பல கண்ணகி அம்மன் கோயில்கள் நாளடைவில் நாக அம்பாள் , இராஜேஸ்வரி அம்பாள் , முத்துமாரி அம்பாள் என்ற பெயரில் வணங்கப்பட்டது. இன்று இளவாலை, மண்டதீவு , பளை , வீமன்காமம், தெல்லிப்பளை , மாசியப்பிட்டி , கச்சாய் , பருத்தித்துறை , புலோலி , காரைநகர் ஆகிய இடங்களில் கண்ணகி அம்மனுக்கு கோயில்களுண்டு.
மூத்ததம்பியின் யாழ்ப்பாண சரித்திரம் என்ற புத்தகத்தில் முதற் கண்ணகி அம்மன் கோயில் நாவற்குளியில் உள்ள வேளம்பாடியில் தோன்றியதென குறிப்பிட்டுள்ளார். எங்கு முதலில் கண்ணகி அம்மனுக்கு கோயில் தோன்றியதென்பதற்கு தக்க ஆதாரங்கள் கிடையாது. முல்லைத்தீவில் உள்ள பிரசித்தம்பெற்ற வற்றாப்பளை கண்ணகியம்மன் கோயில் கஜபாகுவினால் ஸ்தாபிக்கப்பட்ட பத்தாவது கண்ணகி ஆலயம். அனுராதபுரத்தில் இசுருமுனிய விகாரகவிற்கு அருகேயுள்ள தடாகத்துக்கு முன்னால் கண்ணகி ஆலயம் அமைத்தான்.
வருடாவருடம் ஆடிமாத பூரணையில் கண்ணகிக்கு விழா எடுத்தான். இதனை சிங்களவர் 'எசல பெரஹரா' என அழைத்தனர். கண்ணகி வருகையால் இலங்கையில் மழைவளம் பொழிந்து விளைச்சல் பெருகி செழிப்புள்ள நாடாகியது.
இக்கதைக்கு மாறாக சிங்கள சரித்திர நு¡ல்கள் கஜபாகு தெனிந்தியாவுக்கு படையெடுத்துச் சென்று 24000 சிங்களவரை சிறைமீட்டி வரும்போது கண்ணகியின் விக்கிரகத்தையும் சிலம்பினையும் இலங்கைக்கு கொண்டுவந்ததாகக்கூறுகின்றன. சோழ அரசன் செங்குட்டுவன் கஸபாகுவை வரவேற்று 24.000 சிங்களவரை விடுதலை செய்யும் போது 24.000 சோழநாட்டவர்களையும் கூட்டிச்செல்ல ஒப்புதல் கொடுத்ததாக மஹாவம்சத்தில் குறிப்பிடப்படவில்லை.
கண்ணகியின் காற்சிலம்பிற்கு சின்னம்மை, பெரியம்மை , சின்னமுத்து, கூவக்கட்டு, குக்கல் போன்ற தொற்று வியாதிகளைக் குணப்படுத்தும் அதிசயமான சக்தியுண்டு என்பது மக்கள் நம்பிககை.
சிங்களப் பகுதிகளில் கண்ணகி வழிபாடு
சீதாவக்கை காலத்தில் (கி.பி 1530 - 1592) பத்தினி வழிபாடு பிரபல்யமானது. டிக்கிரி பண்டார என்ற இளவரசன் சீதாவக்கையை ஆண்ட மாயதுன்னை என்ற தன் தந்தையை நஞ்சு வைத்து கொலைசெய்து சீதாவாக்கைக்கு 1582ல் முதலாம் இராஜசிங்க என்ற நாமத்துடன் அ¡¢யாசனம் ஏறினான்.
பெளத்த தர்மத்தின்படி தகப்பனைக் கொன்ற பாவம் அவனைவிட்டு பல ஜென்மங்களுக்குப் போகாது என பெளத்த பிக்குமார் சொல்லியதைக்கேட்டு அவன் பொருமாள் என்ற பிராமணன் அல்லாத நண்பணின் உபதேசத்தின் பேரில் இந்துமதத்தை தழுவினான். கற்புக்கரசியான கண்ணகிக்கு களனி கங்கை ஓரத்தில் கொழும்பு அவிசாவலை பதையில் உள்ள கடுவலை எனும் ஊரில் கோயில் கட்டினான். இக்கோயில் போர்த்தகேயர் காலத்தில் (1505-1658) கட்டியதென கோயிலுக்கு அருகேயுள்ள கற்தூணில் உள்ள கல்வெட்டில் காணக் கூடியதாகயிருக்கிறது என காலம் சென்ற கலாநிதி செனரத் பரனவித்தாரன குறிப்பிட்டுள்ளார். மலபாரைச் சேர்ந்த நாயக்கர் பரம்பரை கண்டி இராச்சியத்தை 17ஜ9 முதல் 1815 வரை ஆண்டபோது கண்ணகி வழிபாட்டுக்கு கண்டி இராச்சியத்தில் முக்கிய இடம் கொடுக்கப்பட்டது. சமன் என அழைக்கப்கட்ட சமனலகந்த என்ற மலையின் காவல் தெய்வ வழிபாட்டுக்கு பதிலாக பத்தினி தெய்வம் வழிபாடு ஆரம்பிக்கப் பட்டது.
கஜபாகு அரசன் நடத்தி வந்த கண்ணகி அம்மன் விழாவின் தொடர்ச்சியே கண்டியில் நடக்கும் எசல பெரஹராவாகும். தலதா மாளிகை எசல பெரஹராவில் கீழ்கண்ட பெரஹராக்கள் இடம்பெறும:
தலதா மாளிகை பெரஹரா, நாத தேவாலய பெரஹரா , மஹாவிஷ்ணு தேவாலய பெரஹரா , கதிர்காம பெரஹரா , பத்தினி தேவாலய பெரஹரா.
உடகம என்ற கண்டிப்பகுதியில் இரண்டாம் இராஜசிங்கனால் (16ஜ5-1687) பத்தினி கோயில் கட்டப்பட்டது. 15 நாட்கள் இக்கோயிலில் திருவிழாக்கள் நடைபெறும். பத்தினிக்கு பதுளை, ஹங்குரன்கெட்ட என்ற சிங்களப் பகுதிகளிலும் கோயில்களுண்டு.
கதி¡காமத்திலும் பத்தினிதெய்வத்துக்கு கோயிலுண்டு. சிங்களவரிடையே பத்தினி வழிபாட்டுடன் கொம்பு விளையாட்டு , தோடம்பழம் அடிக்கும் விளையாட்டு , தேங்காய் உடைக்கும் விளையாட்டு , பூ விளையாட்டு போன்ற விளையாட்டுகளுக்கு முக்கியத்துவமுண்டு. கண்ணகியின் கணவன் கோவலனை சிங்களவர் ‘பலங்க' என்பர். 11ம் நு¡ற்றாண்டு கண்ணகி , பலங்க சிலைகள் நிக்காவெவ என்ற சிங்களப்பகுதியில் உள்ள குகையொன்றில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அந்த சிலையில கண்ணகி சாதாரண சிலம்புடனும் வேலைப்பாடுகள் நிறைந்த காப்புகளுடனும் காணப்படுகிறாள்.
கண்ணகி கோயில்களில் தீ மிதித்தல் தீயில் பழிகொடுத்தல் போன்றவை இடம்பெறும். கொம்பு விளையாட்டுக்கும் கண்ணகி கோவலன் கதைக்கும் சம்பந்தப்பட்ட கதை ஒன்றுண்டு. கண்ணகியும் கோவலனும் மரம் ஒன்றிலிருந்து பூப்பறிக்க கொழுக்கிகள் உள்ள இரு தடிளைப் பாவித்த போது கொழுக்கிகள் மாட்டிக்கொண்டன. அதனைக் கலட்ட முடியாமல் போனபோது ஆண்கள் ஒரு பக்கமும் பெண்கள் ஒரு பக்கமும் சேர்ந்து கலட்ட முயன்றபோது ஆண்கள் பக்கத்து தடி முறிந்ததாக கதையுண்டு.
கிழக்கிலங்கையில் கண்ணகி வழிபாடு
அனுராதபுர மன்னன் கஜபாகு காலத்தில் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட கண்ணகி வழிபாடு கிழக்கிழங்கைக்கும் பரவி இருக்காலம் என்பது பலர் கருத்து.
கஜபாகு விக்கிரகத்துடன் இலங்கை திரும்பிவந்து அனுராதபுரத்திலிருற்து 15 வருடகாலமே ஆட்சி புரிந்த படியால் அந்தச் சொற்ப காலத்துக்குள் கண்ணகி வழிபாட்டினை கிழக்கிழங்கையில் பரப்பியிருக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் இல்லையென்னபது ஒரு சாரார் கருத்து. கண்ணகி வழிபாடு கி.பி 16ம் நு¡ற்றாண்டில் மட்டக்களப்பு பகுதிகளில் அறிமுகமானதென மட்டகளப்பு மான்மியம் குறிப்பிட்டுள்ளது. கிழக்கு பிரதேசத்தில் வாழ்ந்த தமிழ் சிற்றரசர்களே கண்ணகி வழிபாடு பரவலுக்கு முக்கிய பங்களித்துள்ளார்கள் என்பதக்கு பல சான்றுகளுண்டு. முல்லைத்தீவில் உள்ள வற்றாப்பளை கண்ணகியம்மன் கோயில் வழிபாட்டிலிருந்து இவ்வழிபாடு கிழக்கிழங்கைக்கு பரவியிருக்கலாம் என்பதும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வாதம். போர்த்துக் கேயர் காலத்தில் யாழ்குடா நாட்டிலிருந்து மட்டக்களப்பிற்கு நாடார் குடியேற்றம் ஒன்று நிகழ்ந்தது.
கந்தப்பர் என்பவர் தலைமையில் புலம்பெயர்ந்தவர்கள் தங்களுடன் கொண்டு வந்த ஏழு கண்ணகியம்மன் சிலைகளை ஏழு கிராமங்களில் பிரதிஷ்டை செய்து கோயில் கட்டி வணங்கியதாகவும் அவர்கள் மண்முனைக்கு அருகாமையில் குடியேறி வாழ்ந்ததாக மட்டகளப்பு மான்மீயம் குறிப்பிட்டுள்ளது.
மட்டக்கிளப்பின் வெருகல் ஆற்றுக்குக் கிழக்கே உள்ள துறைமுகத்தில் மதுரையிலிருந்து செண்பகநாச்சியம்மன் , பத்திரகாளியம்மன் , கண்ணகியம்மன் சிலைகளைக் கொண்டு வந்ததாகவும் அதில் கண்ணகியம்மன் சிலையை மட்டக்கிளப்புக்கு தெற்கேயுள்ள ஊர் ஒன்றில் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக வரலாற்றுச் செய்தியுண்டு. கி.பி 2ம் நு¡ற்றாண்டில் மதுரையிலிருந்து கொண்டுவரப்பட்ட செண்பகச்செல்வி என்ற கண்ணகி விக்கிரகம் தம்பிலுவில்லைச் சேர்ந்த ஊராக்க என்ற இடத்தில் ஆலயம் அமைத்து பிரதிஷ்டைசெய்து வழிபடப்பட்டது. பெளத்த சிங்கள அரசர்களினதும் , தமிழ் அரசர்கள், சிற்றரசர்களினதும் ஆதரவில் கி.பி 2ம் நு¡ற்றாண்டு தொடக்கம் 12ம் நு¡ற்றாண்டு வரை கண்ணகி வழிபாடு செழித்து வளர்ந்தது.
திருக்கோயில் சித்திரவேலாயுதர் ஆலயத்தில் அர்ச்சகர்களாக பணிபுரிய வீரசைவககுருமார்கள் அக்காலத்தில் வரவழைக்கப்பட்டனர். இவர்கள் தம் பட்டர் என வாழ்த்தி குடியேற்றி அவ்வூருக்கு தம்பட்டை என நாமம் சூட்டப்பட்டது. மேலும் இவர்களது வழிபாட்டுக்காக மல்லிகார்ச்சுன புரத்திலிருந்து கணேஷ விக்கிரகம் ஒன்று பெறப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும் மேலும் மேகவண்ணன் தனது தாயார் தம்பதிநள்ளாள் பெயரில் வாவியொன்றையும் வெட்டுவித்து அவ்வாவிக்கு தம்பதிவில் எனப்பெயர் இட்டான். வில் என்ற சொல் வில்லைப் போன்ற குளத்தைக் குறிக்கும்.
மழைபொழிய வேண்டி கொம்பு விளையாடல் என்ற வழிபாட்டின் மூலம் கண்ணகியம்மனை வழிபடுவார்கள். தம்பிலுவில கண்ணகியம்மன் கோயிலில் இவ்விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுகிறது. பொதுவாக கண்ணகி கோயிற்கதவுகள் ஆண்டுக்கொரு முறை திறக்கப்பட்டு பதத்தி என்ற முறைப்படி 10 நாட்கள் வரை பூஜஜகள் செய்யப்பட்டு பின் கதவுகள் மூடப்படும். மக்கள்பெருதளவில் கூடி பயபக்தியுடன் வணங்குவர். கள்ளங்குடா, ஆரையம்பதி, செட்டிப்பாளையம், களுவாஞ்சிக்குடி, துறைநீலாவணை ஆகிய இடங்களில் உள்ள கண்ணகி கோயில்களில் நடைபெறும் வழிபாட்டு முறைகள், சடங்குகள், சம்பிரதாயங்களில் வேறுபாடுகளுண்டு.
ஈழத்தில் பிரசித்தம் பெற்ற கண்ணகியம்மன் கோயில்கள்
கண்ணகி அம்மன் கோயில் வலந்தலை காரைநகர்
1725ல் ஸ்தாபிக்கப்பட் ட பழம் பெருமை வாய்ந்த கோயிலிது. சந்தனமரத்திலான கண்ணகி அம்மனும் , வைரவருமுண்டு. வருடாவருடம் சித்திரை வருடப்பிறப்பை அடுத்துவரும் முதல் வெள்ளிக்கி¨மை கும்பம்வைத்து ஒன்பது நாட்களுக்கு திருவிழாநடைபெறும்.
கண்ணகியம்மன் கோயில், இத்தியடிபுலம், புங்குடுதீவு
சுமார் 130 வருடங்கள் பழமையான ஆலயமிது. பல வருடங்களுக்குமுன் இரை தேடிச்சென்ற தனது தனது கால்வடைகள் திரும்பாதறிந்த இடையன் ஒருவன் அவைற்றை தேடிச்சென்றான். தனது காலநடைகள் ஒரு பேழையைச் சுற்றி படுத்திருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டு, பேழையைத் திறந்து பார்த்த போது அதனுள் கண்ணகி விக்கிரகம் இருப்பதைக் கண்டதாக கதையொன்றுண்டு. ஆடிப்பூரம் இங்கு விசேஷமான தினமாகும். வருடாந்த உற்சவம் சித்திரை மாதத்தில் தொடர்ந்து 15 நாட்களுக்கு நடைபெற்று சித்திரைப் பெளர்ணமியன்று தேர்திருத்விழாநடைபெறும். மூலமூர்த்தி கண்ணகி. பரிவாரமூர்த்திகள் இராஜஇராஜேஸ்வரி, பிள்ளையார் , முருகன் பத்திரகாளி. நடராஜர், வைரவர் ஆகியோர் உளர். பெரிய இராஜகோபுரம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இக்கோயிலின் பெயரை இராஜஇராஜேஸ்வரி அம்மன் கோயிலென்றும் அழைப்பர்.
கண்ணகி அம்மன் கோயில், அங்கணாக்கடவை சண்டிலிப்பாய்
இலங்கை மன்னன் கஜபாகு கண்ணகி சிலைகளையும் காற்சிலம்புகளையும் சேரன் செக்குட்டுவனிடமிருந்து பெற்றுக் கொண்டு தனது பரிவாரங்களடன் யாழ்ப்பாணத்தின் மாதகலுக்கு அருகேயுள்ள சம்புகோளம் என்ற பிரசித்தம்பெற்ற துறைமுகத்தில் வந்திறங்கினான். இலங்கையில் இம்மன்னனால் ஸ்தாபிக்கப்பட்ட முதலாவது கண்ணகி ஆலயம் யாழ்ப்பாணம் திருவடிநிலைக்கு அருகாமையில் உள்ள அங்காணாக்கடவையில் அமைக்கப்பட்டது. அதன் பின்னர் அங்கிருந்து அனுராதபுரத்துக்கு பூநகரி வழியாகச் செல்லும் பாதைகளில் உள்ள ஊர்களில் கண்ணகிக்கு ஆலயங்கள் அமைத்தான் என யாழ்ப்பாணச் சா¢த்திரத்தில் முதலியார் செ இராசநாயகம் குறிப்பிட்டுள்ளார். அடையளாம் காணமுடியாத அங்காணாக்கடவை கண்ணகி கோயில் தற்போது கந்தரோடையில் உள்ளகதிரமலைக்கருகாமையில் இருந்ததாகவும் சரித்திர வல்லுனர்கள் கூற்று.
கண்னகியம்மன் கோயிலுக்கு எதிர்புறத்திலிருந்து கல்லாலான கஜபாகு மன்னனின் சிலை சில நு¡ற்றாண்டுகளுக்கு முன் யானையொன்றினால் சிதைக்கப்பட்டு பின் சிலையின் கால் பகுதியும் தலையும் கலாநிதி பீரிஸ் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டு யாழ்ப்பாண நூதனசாலையில் வைக்கப்பட்டது. இக்கோயில் இப்போது சிறுதளவில் இயங்குகிநது. வைகாசி விசாகப் பொங்கல் சிறப்பாக நடைபெறும். பக்கத்து ஊர்களான நவாலி , மாதகல் ஆகிய கிராமங்களிலும் கண்ணகிக்கு கோயில்கள் உண்டு. மாதகல் என்ற பெயர் மாதா என அழைக்கப்படும் கண்ணகியம்மனின் கல்லினாலான விக்கிரகம் வந்திறங்கியபடியால் வந்ததென ஒரு கதையுண்டு.
வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோயில் , முல்லைத்தீவு
தமிழ்நாட்டில் கண்ணகி அம்மனுக்கு கோயில் அமைத்த காலம் தொடக்கம் இத்தலம் இருந்து வருகிறது. கஜபாகு அரசனால் இலங்கையில் ஸ்தாபிக்கப்பட்ட பழமைவாய்ந்த பத்தாவது கண்ணகியம்மாள் கோயிலிது எனகருதப்படுகிறது.
கண்ணகியம்மாள் வந்தமர்ந்த இடமாகிய பத்தாம்பளை. என்பது மருவி வற்றாப்பளையாயிற்று என்பது வரலாறு. மூலமூர்த்தியாக கண்ணகியம்பாள் வீற்றிருக்க , விநாயகர் , நாகதம்பிரான் , ஆகிய மூர்த்திகள் பரிவாரத்தில் உள்ளனர். கடல் நீரில் கோயில் விளக்கு எற்றுவதாக மக்கள் கருத்து. கொக்கிளாயிலும் கண்ணகி அம்மனுக்கு கோயிலுண்டு.
யாழ்குடாநாட்டிலும் வன்னிப்பகுதிகளிலும் மற்றைய கண்ணகி கோயில்கள் :
- கண்ணகியம்மன் கோயில் , மண்டைதீவு - 1942ல் ஸ்தாபிக்கப்பட்டகோயிலிது.
- கண்ணகியம்மன் கோயில் ஏழாலை
- கண்ணகியம்மன் கோயில் மேளாய் , நல்லு¡ர் , பூநகரி
- கண்ணகியம்மன் கோயில் , காங்கேசன்துறை
- துர்துலிடைக்க கண்ணகியம்மன் கோயில் , தையிட்டி, காங்கேசன்துறை. 182 இல் ஸ்தாபிக்கப்பட்டது.
- கண்ணகியம்மன் கோயில் , வீரமாணிக்கதேவன் துறை, மயிலிட்டி.
- கண்கியம்மன் கோயில் நாகர்கோயில் - இது மிகப்புராதன ஆலயம்.
- தலவிருட்சம் ஆல். பழமைவாய்ந்த கோவலன் கண்ணகி கதை ஏடு ஒன்றுண்டு. 1978ல் கோயில் கல்லினால் கட்டப்பட்டது.
- கண்ணகியம்மன் கோயில் , புத்தூர்.
- கண்ணகியம்மன் கோயில் , கோப்பாய் வடக்கு.
- கண்ணகியம்மன் கோயில் , அச்செழு , நீர்வேலி.
- கண்ணகியம்மன் கோயில் , கைதடி.
தீவகத்தில் சில கண்ணகி கோயில்கள் இராஜஇராஜேஸ்வரி கோயிலாக பெயர் மாற்றம் செய்யப்பட்டன. இத்தியடிப்புல கண்ணகியம்மன் கோயில் இதற்கு சான்று. மண்டைதீவில் உள்ள கண்ணகியம்மன் கோயில் பூசாரிகள் பிராமணரல்லாதோர்.
ஸ்ரீ கண்ணகி அம்பாள் கோயில் காரைதீவு .
500 வருடங்களுக்கு முன் காரேறு மூது¡ர் என்ற பெயர் வழக்கிலிருந்த போது ஸ்தாபிக்கப்பட்டது. இப்பெயர் திரிந்து காரைதீவாயிற்று. கதிர்காமம்செல்லும் யாத்திரிகர்கள் இக்கோயிலில் தங்கிச் செல்வது வழக்கம். கோயிலின் தலவிருட்சம் வயது முதிர்ந்த வேப்ப மரம். இப்பகுதியை அரசாண்ட வன்னிய மன்னன் நிலபுலன்களை பார்வையிட வந்த சமயம் அரசனின் யானை கீழே விழுந்து மயங்கி படுத்ததாகவும் அப்போது கோயில் மணி ஒலிக்க அங்கு வந்த ஏவலாளர்கள் கோயிலின் மகிமையை அரசனுக்கு எடுத்துச் சொன்னார்கள். கோயிலில் பூஜை செய்து கொண்டிருந்த தேவந்தி என்ற பெண் விவரம் அறிந்து வேப்பமிலை அரைத்து குளிகைசெய்து யானைக்கு கொடுத்து தீர்த்தம் பருக்கியபின் யானை எழுந்ததாகவும் ஒரு கர்ணபரம்பரை கதையுண்டு.
அதற்கு கைமாறாக அரசன் ஆலயம் அமைத்து கொடுத்தானாம். அரசனுடைய இரு மனைவியர்களில் ஒருவாரான சிறிய பூற்கோதைக்கு இழந்த கண்பார்வை அம்மனை வணங்கியதால் கிட்டியதாகவும் கதையுண்டு. ஆலயம் தொடர்பான வழக்குலை என்னும் என்ற ஏடு ஒன்றுண்டு. வருடா வருடம் 7 நாட்கள் நடக்கும் உற்சவத்தில் இது தினமும் பாடப்பெற்று நிறைவு பெறும். 1976 ல் கோயில் புனருத்தாரணம் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
தம்பிலுவில் கண்ணகி அம்மன் கோயில்
கி.மு 5ம் நு¡ற்றாண்டில், விஜயன் காலத்தில் திருக்கோவில் தம்பிலுவில் பிரதேசத்தில் வாழ்ந்தவர்கள் ஆதித்திராவிடர்களான நாகர் குடி மக்கள். கி,மு 600ம் நு¡ற்றாண் டில் இப்பிரதேசம் நாகர் முனை எனப்பெயர் பெற்றதாக மட்டகிளப்பு மானமீயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கி.மு 1ம் 2ம் நூற்றாண்டில் திருக்கோயில் துறைமுகம் பிரபல்யமடைந்திருந்தது.
இத்துறையினூடாக தமிழ்நாட்டின் கிழக்குக் கரையிலிருந்த காவிரிப்பூம்பட்டணத்துடன் வர்த்தகத் தொடர்பு இருந்ததாக ‘கண்ணகி வழக்குரை' என்ற கிராமீய இலக்கியம் குறிப்பிட்டுள்ளது.
கஜபாகு மன்னன் அனுராதபுரத்தை ஆட்சி செய்த காலத்தில் (கி.பி 171 -193) மட்டக்கிளப்பு பகுதிகளுக்கு கண்ணகி வழிபாடுவந்ததாகவும் அதன் பின் கதங்கள்¢ழக்கு இலங்கையின் வெவ்வேறு ஊர்களை ஆட்சிசெய்த சிற்றரசர்கள் ஆட்சி பிரதேசங்களில் கண்ணகி வழிபாட்டினை பரப்பியதாக வரலாற்று குறிப்புகளுண்டு. மேலும் இவ்வழிபாடு முல்லைத்தீவிலிருந்து கடல்மார்க்கமாக மட்டக்கிளப்பு பகுதிகளுக்கு வந்திருக்கக் கூடிய சாத்தியக் கூறுகளுண்டு.
கி.பி 1626ல் கண்டி மன்னன் செனரதன மலேய வீரர்களின் உதவியுடன் போர்த்துக்கேயரை மட்டக்கிளப்பில் இருந்து அகற்றி மலாய வீரர்களை காவலுக்கு வைத்தான். அக்காலப்பகுதியில் மட்டக்கிளப்பில் நாடார் குடியேற்றம் நடந்தது. யாழ்குடாநாட்டிலிருந்து கந்தப்பர் என்பவரது தலைமையில் புலம் பெயர்ந்து வந்த குடும்பங்கள் ஏழு கண்ணகி விக்கிரகங்களையும் தங்களுடன் எடுத்து வந்து பிரதிஷ்டை செய்து வணங்கத் தொடங்கினரென மட்டகிளப்பு மான்மியம் கூறுகின்றது.
கி.பி 159ஜ -180ஜ வரையுள்ள கண்டி மன்னர்களினது காலத்தில் தம்பிலுவில் பிரதேசத்தில் கண்ணகி வழிபாடு சிறப்புற்றிருந்ததுக்கு இலக்கிய தொல்லியல் சான்றுகள் உண்டு. சிங்கள அரசர்களும் நாயக்கர் வம்ச கண்டி மன்னர்களும் கண்ணகி வழிபாட்டனை ஆதரித்து மானியங்கள் பல வழங்கிவந்துள்ளனர்.
கிழக்குப் பகுதி கிராமங்களில் பின் வரும் கண்ணகியம்மன் கோயில்கள் குறிப்பிடப்படவேண்டியவை:
- பட்டிநகர் ஸ்ரீ கண்ணகி அம்மன் கோயில் , பனங்காடு , அக்கரைப்பற்று.
- கண்ணகி அம்மன் கோயில் சம்மாந்துறை.
- கண்ணகி அம்மன் கோயில் , வீரமுனை, சம்மாந்துறை.
- கண்ணகி அம்பாள் கோயில் களுவாஞ்சிக்குடி. இது 200 வருடங்களுக்கு முற்பட்ட புராதான ஆலயம். வைகாசி பெளர்ணமிக்கு மன் 7 றாட்களுக்கு கதவு திறக்கப்பட்டு விசேட வழிபாடு நடைபெறும்.
- கடற்கரை கண்ணகி அம்பாள் கோயில் , கல்முனை.
- கண்ணகி அம்மன் கோயில், துறைநீலாவணை. மட்டக்கிளப்பு மான்மியத்தில் இக்கோயிலைப்பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
- கண்ணகி அம்மன் கோயில் விடத்தல்முனை , புளியந்தீவு.
- கண்ணகி அம்மன் கோயில் தாளங்குடா , காத்தான்குடி.
- கண்ணகி அம்மன் கோயில் புன்னைச்சோலை , அமிர்தகழி , மட்டக்கிளப்பு.
- கண்ணகி அம்மன் கோயில் , சத்துருக்கொண்டான், மட்டக்கிளப்பு . 100 வருடங்களுக்கு முற்பட்ட கோயிலிது.
- கண்ணகி அம்மன் கோயில், கல்குடா , வாளைச்சேனை.
- கண்ணகி அம்மன் கோயில், கல்குடா , சித்தாண்டி
- கண்ணகி அம்மன் கோயில், கல்குடா , கிரான்.
- கண்ணகி அம்மன் கோயில், கல்குடா , முறக்கொட்டாஞ்சேனை
கண்ணகியம்மன் கோயில்களின் எண்ணிக்கையிலிருந்து யாழ்குடா நாட்டை விட கிழக்கு ஈழத்தில் எவ்வளவு து¡ரத்திற்கு கண்ணகியம்மன் வழிபாடு கிராமங்களில் இயல் இசை நாடகங்களுடன் ஒன்று கலந்து பரவியிருந்ததை அறியக் கூடியதாகயிருக்கிறது.
அடிக்குறிப்புகள்:
- யாழ்ப்பாண சரித்திரம் - முதலியார் செ இராசநாயகம்.
- மட்டக்களப்பு மான்மீயம் - F X C நடராஜா
- தம்பிலுவில் கண்ணகி வழிபாடு -நா நவநாயகமூ¡த்தி
- பத்தினி வழிபாடு - தொகுப்பாசிரியர் தீரு சி கணபதிப்பிள்ளை
- மட்டக்களப்பு தமிழகம் - வித்துவான் பண்டிதர் வி.சி.கந்தையா.
சீரணி ஸ்ரீ நாகபூஷணியம்மை, சண்டிலிப்பாய்
முத்துமாரியம்மன், ஆவரம்பிட்டி, அராலி கிழக்கு
உலகின் சிவன் கோவில்கள்
சைவசமயம் மிகத் தொன்மை வாய்ந்த்து ஹரப்பா, மொகஞ்சதாரோ என்னும் இடங்களில் அகழ்வு ஆராய்ச்சிகள் நிகழ்த்திய சர்ஜான் மார்ஷல் போன்ற பேரறிஞர்கள் சைவசமயமானது உலகத்திலேயே மிகவும் பழைமையான உயிர்ப்பாற்றல் மிக்க சமயமாக இருந்து வருகின்றது என்று ஆராய்ந்து கூறியுள்ளனர்
ஆராய்ச்சியாளர்கள் மனித வரலாற்றைப் பல காலங்களாகப் பிரித்துள்ளனர். அவை பழைய கற்காலம், புதிய கற்காலம், இரும்புக் காலம், வெண்காலம் எனப் பலவகைப்படும். "பழைய கற்காலம்" என வழங்கப்பெறும் அக்காலத்திலேயே சிவலிங்க வழிபாடு இருத்திருக்கிறது.
வட அமெரிக்காவில் கொலரடோ என்னும் இடத்தில் உள்ள ஒரு குன்றின் மீது ஒரு சிவன் கோயிலும் அதில் ஒரு சிவன்கோயிலும் அதில் ஒரு பெரும் சிவலிங்கமுக் 1937 ஆம் ஆண்டில் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த கோயில் 10,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று ஆராய்ச்சியாளர்கள் நிருபித்துள்ளனர்.
ஜாவாத்தீவில் உள்ள கோயில்களில் இன்றும் திருவாசகம் ஓதப்படுகிறது. அங்கிருப்பவர்க்குத் தமிழ்மொழி தெரியாதபடியால் ஏதோ மந்திரம் போல் உச்சரித்து வருகிறார்கள். மேலும் ஜாவாவில் உள்ள பெரம்பாணம் என்ற இடத்தில் உள்ள சிவன்கோயில் சிவதாண்டவத்தின் 32 முத்திரைகளைக் குறிக்கும் சிற்பங்கள் உள்ளன.
போர்னியாவில் ஒரு மலைக்குகையில் சிவன், விநாயகர் சிலை உள்ளன.
சியாம் நாட்டிலும் கம்போடியாலும் சிவலிங்கத்தின் உருவங்கள் கிடைத்துள்ளன. சியாமில் பழைய சிவன் கோயில் இருக்கிறது. இக்கோயில் உள்ள இடத்தில் இப்போதும் பொங்கல் விழா கொண்டாடப் படுகிறது.
பாபிலோனியர் தம் கடவுளுக்கு இட்டு வழங்கும் பெயர்களில் எல்சடை என்று ஒரு பெயர் காணப்படுகிறது. இச்சொல் சூரியனைப் போன்ற சிவந்த சடையுடையவன் என்று பொருள் தருவதாக இருக்கிறது. இங்கே கிடைத்த சிவபெருமானின் சிலை காளையின் மீது நிற்பதாகவும் கையில் மழுவும், இருபுறமும் முத்தலையுடைய சூலமும் ஏந்தியதாகவும் காட்சியளிக்கிறது. பாபிலோனியரின் "மாதப் பெயர்களில் ஒன்று சிவன்" பெயர் கொண்டிருக்கிறது.
எகிப்தில் உள்ள "பாலைவனம் ஒன்றுக்கு சிவன்" என்று பெயர் வழங்கி வருகிறது. இங்கு வாழும் மக்கள் அமன்யூ என்ற கடவுளை வணங்குகின்றனர். அக்கடவுளுக்கு இடபம் வாகனமாக இருக்கிறது.
பெளத்த மதத்தில் ஒரு பிரிவான ஷிண்டோயிசம் என்பதில் சிவலிங்கத் திருவுத்திற்குப் பெருமதிப்புத் தரப் பெற்று வருகின்றது.
இவை அணைத்திற்கும் மேல் வடக்கே இமயமலைக்கு அருகேயுள்ள அமர்நாத் என்னும் புனிதத் தலத்தில் இயற்கையாகவே பனிக்கட்டியினால் ஆன சிவலிங்கத் திருவுருவம் ஆறு மாதத்திற்கு ஒரு முறை உருவாகிக் கரைந்து வருகின்றது.
Tuesday, February 2, 2010
ஏசு வந்தது வரமா? அல்லது மனிதகுலத்திற்கு சாபமா?
Wednesday, 11 November 2009 at 22:16
யூதமதத்தின் விதை கிருஸ்துவ சமயத்தில் எப்படி? பல புதியபரிமாணங்களை சேர்த்துக் கொண்டு, மேலும் ஆழ்த்தை நோக்கி, அதே சமயம் தன் பழைய முகசுருக்கங்களை நீக்கி, இளமையான தோற்றம் தரும் புதிய திடமான செயல்பாடுகளின் துனண்யோடு ஒரு மனித முகத்தை தருகிறது கிருஸ்துவ மதம்.
புதிய ஏற்பாடு - கிருஸ்துவ விவிலியத்தின் இரண்டாம் பாகம். இந்தபுதிய ஏற்பாட்டில் காணப்படும் கிருஸ்துவின் போதனைகள் புதிய சுவிசேஷம் எனப்படும். முதல் சுவிசேஷத்தை எழுதிய திருத்தூதர் புனித மேத்யூ. மூன்றாம் சுவிசேஷத்தை எழுதிய சமயதிருப்பணியாளர் (?) புனித லூக். தாமஸ் சுவிசேஷம் ஏசுவின் ரகசிய கூற்றுக்கள் அடங்கியது. இது புனித தாமஸால் பதிவு செய்யப்பட்டது. (The myth of St. Thomas)இதன் மூல வடிவம் பண்டைய எகிப்திய மொழியாகிய காப்டிய மொழியில் உள்ளது. இது 1946-ல் தான் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் கிருஸ்துவ விவிலியத்தொகுப்பில் இதை இணைக்க முடியாமல் போயிருக்கலாம்.
" உலகளாவிய சகோதரத்துவம் பற்றி கிருஸ்துவர்கள் பேசுகிறார்கள் ஆனால் கிருஸ்துவன் அல்லாத ஒருவன் நரகத்திற்குத்தான் செல்லவேண்டும். மிருகங்களை போல் அங்கு நிரந்தரமாக வருக்கப்படவேண்டும். இதுவே கிருஸ்துவர்களின் மனநிலை"- சுவாமி விவேகானந்தர்.
தன்னோடு ஒத்துப்போகாதவர்களுக்கு மீளமுடியா நரகம் என்று ஒன்று உண்டு. அவர்கள் அங்கு தான் செல்ல வேண்டும் என வெறுக்கத்தக்க துவேசத்தை விதைத்த முதல் சமய போதகர் ஏசுதான். பரந்த சமய உலகிற்கு இவர் அளித்த முதல் கருத்தும், மூலக்கருத்தும் இதுவே. 2000 ஆண்டுகளில் இது பல்வேறு நாட்டு மக்களையும், அவர்களது கலாச்சாரங்களையும் முழுமையாக அழித்து விட்டது. (The myth of St.Thomas - Eswar Saran)
பூமியில் அமைதியை கொண்டு வந்தேன் என்று நினைக்கிறாயா? இல்லை என்று சொல்கிறேன். மனித இனத்திற்குள் பிரிவினையை ஏற்படுத்தவே வந்துள்ளேன். உலகில் சமாதானத்தை கொண்டு வர நான் வந்து இருப்பதாக நினைக்க வேண்டாம். நான் சமாதானத்தை கொண்டுவருவதற்காக அல்லாமல் போருக்கான வாளையே கொண்டுவந்தேன் என்கிறார் ஏசு. குடும்பங்களை பிரிக்க, தந்தையும் மகனும், தாயும் மகளும், மருமகளும் மாமியாரும் என ஒருவருக்கொருவரை எதிராளிகளாக்க, பெற்றோரும் பிள்ளைகளும், சகோதர சகோதரிகளும், ஒருவரை ஒருவர் வெறுக்குமாறு செய்யவே வந்துள்ளேன். குடும்பங்களை கந்தல்களாக கிழிக்க, அவற்றை துண்டு துண்டுகளாக பிரிக்க, குடும்பம் என்ற அமைப்பை எப்போதும் அழியச் செய்யவே நான் வந்துள்ளேன். ஓரு மனிதன் தன் வாழ்க்கையை வெறுக்குமாறு செய்ய விரும்புகிறேன். எங்கும் எதிலும் வெறுப்பு, வன்மம் தவிர வேறெதுவும் இருக்ககூடாது. இவை அனைத்தும் ஏசுபிரான் உதிர்த்த முத்துக்கள். இதை அவரது சீடர்களும் மூன்று சுவிசேஷங்களில் உறுதி செய்துள்ளனர்.
உண்மை இப்படி இருக்க ஏசுவின் உருவத்தை அன்பும் அமைதியும் தவழ்வது போல் ஏன் அவர்கள் விளம்பரப்படுத்துகிறார்கள்? இந்த அன்பு உருவத்தின் மூலம் சந்தையில் அவர்கள் கிருஸ்துவ மதம் எனும் பொருளை விற்கப்பார்க்கிறார்கள். அதற்கான வெளி வேஷமே இது. இந்த போலியான முகத்தை காட்டும் சில வாக்கியங்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன.
விவிலியம் மாத்யூ 10:34- பூமியின் மேல் சமாதானத்தை அனுப்ப வந்தேன் என எண்ணாதீர்கள். சமாதானத்தை அல்ல, பட்டயத்தையே அனுப்ப வந்தேன்.
விவிலியம்லூக் 12:51 - நான் பூமியில் சமாதானத்தை உண்டாக்க வந்தேன் என நினைக்கிறீர்களா? சமாதானத்தையல்ல, பிரிவினையையே உண்டாக்க வந்தேன் என்று உங்களுக்கு சொல்கிறேன்.
தாம்ஸ் சுவிசேஷம் 16 - ஏசு சொன்னார்: உலகில் சமாதானத்தை உண்டாக்க நான் வந்தேன் என்று அநேகமான மனிதர்கள் எண்ணுகிறார்கள். பூமியில் பிரிவினையை, தீயை, பட்டயத்தை, போரை உண்டாக்கவே நான் வந்ததை அவர்கள் அறியவில்லை. குடும்பத்தில் உள்ள ஐந்து பேரையும் ஒருவருக்கொருவர் எதிராளியாக மாற்றுவேன் அவர்கள் தனித்தனி ஆட்களாகிவிடுவார்கள்.
விவிலியம் மாத்யூ 10:35,36 -எப்படி எனில் மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமியாருக்கும் பிரிவினை உண்டாக்கவே வந்தேன். ஒருமனிதனுக்கு எதிரிகள் அவன் வீட்டாரே. இதையே புனித லூக் விவிலியம் லூக் 12:52,53ல் உறுதி செய்கிறார்.
தாமஸ் சுவிசேஷம் 56 - ஏசு சொன்னார்: தன் தகப்பனையும், தாயையும் வெறுக்காதவன் என் சீடனாக இருக்க முடியாது. தன் சகோதரர்களையும், சகோதரிகளையும் வெறுக்காதவன், என்னைப்போல் தன் சிலுவையை சுமக்காதவன் எனக்கு உண்மையானவனாக இருக்க மாட்டான். இதையும் புனித லூக் விவிலியம் லூக் 14:26ல் உறுதி செய்கிறார்.
இவை எல்லாம் உண்மையாக இருக்க முடியுமா? இதில் ஏதேனும் திரித்து கூறப்பட்டிருக்குமா? என்று உங்களுக்கு சந்தேகம் வரலாம். பகுத்தறிவுள்ள சுயமாக சிந்திக்க்கூடிய ஒவ்வொரு மனிதனுக்கும் வர வேண்டிய சந்தேகம்தான் இது. விவிலியத்தை ஒருமுறை முழுமையாக படித்துப் பார்த்தால் உங்களது சந்தேகம் நீங்கும். அப்போது என் கருத்தை நீங்கள் இன்னும் அழுத்தமாக உறுதி செய்வீர்கள். ஆனால் எத்தனை பேர் விவிலியத்தை படித்துள்ளனர் என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும். மதம் மாறிய நமது சகோதரர்களிடம் இதனை கேட்டுப்பாருங்கள்.செம்மறி ஆட்டு கூட்டங்களை போல் நல்ல மேய்ப்பர் என்று நம்பி ஒன்றன் பின் ஒன்றாகப்போய் சேர்ந்தவர்கள் அவர்கள். அவர்க்களுக்கு எதுவும் தெரியாது. இப்படி எல்லாம் இருக்குமா? என்று உங்களிடமே அப்பாவித்தனமாக கேட்பார்கள். விவிலியத்தை கையில் மட்டுமே வைக்க பழக்கப்பட்டவர்கள். அதன் உள்ளிருக்கும் விஷத்தை அறியாதவர்கள்.
பிற கிருஸ்துவர்களுக்கு பயிற்சி அளிப்போர் இந்த போதனைகளை கொண்டே வாழ்கிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா? புனிதர்கள், போப், தலைமை ஆயர்கள், பேராயர்கள், ஆயர்கள் என்ற பதவிகளில் இருந்தவர்களும், இருப்பவர்களும் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தவர்கள் என்பதை அவர்களது உண்மையான வரலாற்றை புரட்டிப் பார்த்தால் தெரியும்.
ஏசு அன்பை போதிக்க வந்தாரா? வன்மத்தை பரப்ப வந்தாரா? என்பதை கிருஸ்துவ மதம் 2000 ஆண்டுகளில் கடந்து வந்த பாதையை ஒரு பார்வை பார்த்தாலே தெரியும். விவிலியத்தில் கூறப்பட்ட ஏசுவும், உண்மையான ஏசுவும் வேறுவேறானவர்கள் என புதுக்கதை பரப்பப்படுகிறது. உலகின் பார்வையில், அவர்கள் ஒருவரா அல்லது இருவரா என்பதைப்பற்றி கவலையில்லை. கிருஸ்துவ விவிலியத்தின் ஏசுவை உலகம் நம்புகிறது. இங்கு உலகம் நம்புவதுதான் முக்கியம். காரணம் நம்புகிற தன்மை ந்ம்புவோரின் நிஜவாழக்கையை வடிவமைக்கிறது. அவர்களின் செயல் பாடுகளை தீர்மானிக்கிறது. கடந்த 2000 ஆண்டுகளில் மதத்தின் பெயரால் உலகில் சிந்திய ரத்தம் அதிகம். அது உண்மையாகவே மதத்திற்காகவா என்றால் இல்லை. மதத்தின் பெயரால் தன் சொந்த நலத்திற்காக, உலக இன்பங்களை அனுபவிப்பதற்காகத்தான். எல்லாம் தனக்கே கிடைக்க வேண்டும் என்ற வெறி பிடித்த பேராசைக்காரர்களால்தான் இந்த உலகம் கடந்த 2000 ஆண்டுகளாக ரத்தத்தில் மிதக்கிறது.
சில காலங்களில் கிருஸ்துவர்கள், சில காலங்களில் யூதர்கள், சில காலங்களில் முஸ்லீம்கள் என போட்டி போட்டுக்கொண்டு இந்த உலகை ரத்தக்காடாக மாற்றிக் காட்டியவர்கள் இவர்கள். சிலுவைப்போர்கள், ஜிகாத்துக்கள், புனிதப்போர்கள் என இவர்கள் தொடர்பான ரத்தம் தோய்ந்த வரலாற்றை புரட்டிப்பாருங்கள். ரத்தத்தை உறைய வைக்கும் உண்மை சம்பவங்களை அதில் காண்பீர்கள். பல ஆண்டுகளாக பெய்ரூட்டில் நடந்தது என்ன? பாலஸ்தீனத்திற்கும், இஸ்ரேலுக்கும் இடையே நடப்பது என்ன?
ஏசுவின் கனவு நனவாயிற்று. உண்மையில் இன்று எங்கும் ச்ண்டை சச்சரவுகளை காண்கிறோம். எங்கும் சிதறிவிட்ட குடும்பங்களை காண்கிறோம் இந்த பூமிக்கு ஏசு வந்ததிலிருந்து 2000 வருடங்களில் உலகிற்கு நேர்ந்தது என்ன? விளம்பரப்படுத்துவது போல் ஏசு வந்தது வரமா? அல்லது மனிதகுலத்திற்கு சாபமா? விடையை தேடவேண்டியது நீங்கள்தான். நான் ஒரு வழிகாட்டி மட்டுமே...
திருவள்ளுவரின் திருநெறி மேன்மைமிகு சைவநீதி
சிலவர் புலவர் எனச் செப்பல் - -நிலவு
பிறங்கொளிமா லைக்கும் பெயர்மாலை மற்றும்
கறங்குஇருள்மா லைக்கும் பெயர்" - மதுரைத் தமிழாசிரியர் செங்குன்றூர் கிழார்
"Tirukkural is the life, Tiruvasagam is the heart, and Tirumandiram is the soul of Tamil culture..." - Swami Shivanada -On the Tirukkural
நம் செந்தமிழ்ச் சைவ நூலாகவும் உலகப் பொதுநூலாகவும் விளங்கும் திருக்குறள் இதுவரை 80 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, உலகில் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்களில் மூன்றாம் இடத்தில் உள்ள மேன்மையைக் கொண்டது.
தமிழ்மறை,பொதுமறை,பொய்யாமொழி,வாயுறை வாழ்த்து, தெய்வ நூல்,முப்பால் நூல், உத்தர வேதம் என்று பலவாறு அழைக்கப்படும் திருக்குறளை சமணநூல் என சிலர் சொல்வார்கள். நாத்தீகவாத அரசியலின் ஆற்றாமையில் உருவாகிய கதையே இது. இன்று ஒருசில கிருஷ்தவ போதகர்கள் திருவள்ளுவர் தொட்டு ஔவையார்வரை கிருஷ்தவர் என்றும் சைவ சித்தாந்த நூல்கள் யாவும் ஆதிக் கிருஷ்தவத்துள் ஆரியம் கலந்ததால் விளைந்தவை என்றும் கதைகட்டித் திரிகின்றார்கள். பணபலம் கொண்ட இவர்கள் நாத்தீகவாதப் பீடங்களை தமக்கு தலையசைக்க வைத்துமுள்ளனர். எனவே இத்தருணத்தில் திருக்குறள் சித்தாந்த சைவநூலே என்பதை தெளியவைக்க வேண்டியது காலக்கடமை!
"அணுவைத் துளைத்துஏழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்" என்கிறார் ஔவையார்.
"வள்ளுவர்செய் திருக்குறளை
மறுவறநன் குணர்ந்தோர்கள்
உள்ளுவரோ மநுவாதி
ஒருகுலத்துக் கொருநீதி " என்கிறார் மனோன்மணியம்
நாத்தீகவாத அரசியல்வாதிகள், திருக்குறளுக்கு ஏற்பட்ட மதிப்பை உணர்ந்து, திருக்குறளை எதிர்க்க முடியாது போகவே சமண சமயநூல் என புரளியைப் பரவவிட்டு அரசியல்மேடைகளில் அப்புரளியை அடிக்கடி ஆயிரம் தடவைகள் உண்மையென கூவி தமது ஆற்றாமையை சோற்றுக்குள் மறைத்த முழுப்பூசணிக்காயாக்கிவிட்டனர். திருக்குறளை ஆரியக் கருத்துக் கொண்ட நூல் என்றும் பகுத்தறிவுபற்றிக் கவலைப்படாமல் எழுதிய நூல் என்றும் பெரியார் எனப்படும் ஈ.வே.ராமசாமியார் தனது குடியரசு இதழில் குறிப்பிட்டுள்ளமையை அறியக்கூடியதாகவுள்ளது. ‘‘அவரது குறளில் இந்திரன், பிரம்மா, விஷ்ணு முதலிய தெய்வங்களையும், மறுபிறப்பு, சுவர்க்கம், நரகம், மேலோகம், பிதுர், தேவர்கள் முதலிய ஆரிய மத சம்பிரதாயங்களையும், மூட நம்பிக்கைகளையும் கொண்ட விஷயங்களைப் பரக்கக் காணலாம்" -20.01.1929 குடியரசு இதழ். ஆனாலும் பின்னர் திருக்குறளின் மகத்துவத்தை உணர்ந்த நாத்தீகவாத பெரியாரிசத்தால் அதை சைவநூல் என்பதை ஏற்றுக்கொள்ளும் திறனில்லாது போய்விடவே, சமண நூல் என்பதுபோலவும், பொதுநூல் ஆதலால் கிருஷ்தவர்களுக்கும் இஸ்லாமியருக்கும் எதிராக எதுவுமே இந்நூலில் இல்லை என்றும் இது இந்துமதக் கண்டன நூல் என்றும் கதைகட்டி விட்டனர். 14.03.1948, மூன்றாவது திருவள்ளுவர் மாநாட்டில் ‘‘(திருக்குறளில்) எத்தகைய பகுத்தறிவுக்கு புறம்பான ஆபாசக் கருத்துக்களுக்கும் அதில் இடமில்லை" என்றும் ‘‘திருக்குறள் ஆரிய தர்மத்தை - மனு தர்மத்தை அடியோடு கண்டிப்பதற்காகவே ஏற்பட்ட நூல் என்பதை நீங்கள் உணர வேண்டும்" என்றும் பெரியார் கூறியுள்ளார்.
23,24.10.1948 திராவிடர் கழக 19-வது மாநாட்டில், ‘‘குறள் ஹிந்து மதக் கண்டன புத்தகம் என்பதையும், அது சர்வ மதத்திலுள்ள சத்துக்களை எல்லாம் சேர்த்து எழுதப்பட்டுள்ள மனித தர்ம நூல் என்பதையும் எல்லோரும் உணர வேண்டும்" "குறளை முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் உள்பட யாரும் ஆட்சேபிக்க மாட்டார்கள். நீங்களும் (கிறிஸ்தவர்கள்) குறள் மதக்காரர்கள். பைபிளுக்கு விரோதமாகக் குறளில் ஒன்றும் கிடையாது" என்றும் பெரியார் கூறியுள்ளார்.
ஆரம்பத்தில் திருக்குறளை எதிர்த்த பெரியார் பின்னர் திருக்குறளை கிருஷ்தவர்க்கும் இஸ்லாமியருக்கும் ஏற்றநூல் என்றும் ஆரிய எதிர்ப்பு நூல் என்றும் தனது கருத்தை மாற்றியமை திருக்குறள் உள்ளவரை வேதநெறியை எதிர்க்கமுடியாது என்று உணர்ந்தமையை புலனாக்கிறது. இந்துமதம் என்பதும் இந்துத்துவா என்பதுவும் அழகுத் திருநெறிச் சைவத்துக்கு நன்மையை ஊட்டாதவை என்பதை ஏலவே பல கட்டுரைகளில் சுட்டிக்காட்டியுள்ளேன். இந்துமதம் என்னும் பெயரில் இன்று அறிமுகப்படுத்தப்படுகின்ற ஸ்மார்த்தம் வேறு. தென்னாட்டுச் சைவநெறி வேறு. இந்த வேறுபாடுகளை உணரக்கூடிய தெளிவு பெரியாரிடம் இருந்திருக்க வாய்ப்பில்லை. தனித்தமிழ் இயக்கத்தை தோற்றுவித்த மறைமலையடிகள் தொட்டு, தனித் தமிழ் இயக்கத்துக்காய் உழைத்தவர்கள் சைவச் சான்றோர்களே என்ற உண்மையை புரிந்துகொள்ளும் ஆற்றல் பெரியாரிடத்தில் இருக்கவில்லை. தமிழரிடம் இலக்கியம் எதுவுமே இல்லை என்ற மனநிலையில் இருந்த பெரியாருக்கு இந்த அருமையை உணர முடியாமல் போனதில் வியப்பெதுவும் இல்லை. ஆனால் அரசியல் பலத்துடன் இருந்த நாத்தீகவாதம் தனது ஆற்றாமையில் உருவாக்கிய "சமணநூல்" என்னும் பதத்தை அற்புதமாக தமிழரிடம் பரவச்செய்திட்டு!
இஸ்லாமியர் திருக்குரானுக்கு இணையாக கருதும் திறன் திருக்குறளுக்கு இல்லை எனவும் பொதுமறையாகக் கருதமுடியாது எனவும் வெளிப்படுத்தியுள்ளனர். இதுபற்றி பெரியார் எந்தவித கருத்தையும் வெளியிடவில்லை. கிருஷ்தவரில் திருவிவிலியத்தை ஆழமாய் நம்புகிறவர்கள் மறுத்துவிட்டனர். பொதுமறையாகக்கூட ஏற்கவில்லை.எனினும் கிருஷ்தவ மதத்தை ஒழுகும் தமிழ் இலக்கியப் பற்றாளர்கள் திருக்குறளை பொதுமறை என்பர். ஆனால் சில் விசமப் பிரச்சாரத் தரகுக்கூட்டத்தார் கிருஷ்துவின் அருளால் திருவள்ளுவர் எழுதிய நூல் என்று பிதற்றுகின்றனர்.ஆக; சைவரின்மேல் மட்டும் பெரியாரிசம் திணித்த ஒன்றே திருக்குறள் சைவநூல் அல்ல என்க.
திருக்குறளை சொந்தம் கொண்டாடினால் தமிழில் நிலைத்திருக்கலாம் என கனவுகாணும் கிருஷ்வ விசமிகள் சிலர், தோமஸிடம் அருள்பெற்று வள்ளுவர் எழுதிய நூல் என்று நகைச்சுவை நாடகத்தை தமிழகத்தில் அரங்கேற்றியவண்ணம் உள்ளனர். தோமஸ் என்பவர் தமிழகத்துக்கு வந்தார் என்பதை கத்தோலிக்கபீடம் ஏற்கவில்லை. ஏனெனில் ஆதாரம் ஏதுமில்லை. தோமஸ் தமிழகத்துக்கு வந்தார் என்றும் அவர் திருவள்ளுவருக்கு போதித்தார் என்றும் கதையைக்கட்டிவிட்டனர் ஆங்கிலேய காலத்தில் தமிழ்கற்று கிருஷ்தவம் பரப்பிய பாதிரிகள். வரலாற்றுரீதியில் வராத ஒருவருக்கு வந்ததாக வைத்து படம்கூட எடுக்க இருந்தமையும் அதுபற்றிய விழாவில் கருணாநிதி தமிழக முதலமைச்சர் பதவியோடு பங்குபற்றி அவ்விழாவுக்கு அங்கீகாரம் அளித்தமையும் வெட்கக்கேடு! வராத ஒருவரை வந்தார் என நம்புவதுக்குப் பெயர்தான் மூடநம்பிக்கை! கருணாநிதியும் மூடநம்பிக்கைகளை விரட்ட முனைகிற கழகங்களும் இந்த மூடநம்பிக்கையை நம்புவது அவர்களது கொள்கையின் இழிநிலை என்க. இதற்கு கருணையில்லாத நிதியாகிய கருணாநிதி விலைபோனதில் வியப்பில்லை.
ஜீ.யூ.போப் தனது திருவாசக மொழிபெயர்ப்பு முன்னுரையில் சேர்ச்சில் மாணிக்கவாசகர் தன்னுடன் நிற்பதுபோலவும் முழந்தாளிட்டு வழிபடுவது போலவும் யேசுநாதரின் அடிச்சுவட்டைக் கண்டு மாணிக்கவாசகர் பின்பற்றியிருப்பார் என்றும் இல்லாவிட்டால் அவருக்கு எவ்வண்ணம் இத்தகு உருக்கம் இருக்கமுடியும் என்றும் அத்துடன் இவருடன் மயிலாப்பூரில் வாழ்ந்த நெசவாளி(திருவள்ளுவர்)யும் நாலடியார் இயற்றிய நாடோடிஞானிகள் ஆகியோர் யேசுநாதரின் சரிதத்தை அறிந்துதான் இருப்பார்கள் என்றும் குறிப்பிடுகின்றார். அதாவது கிருஷ்தவாசத்தாலேயே மெய்யுணர்வு பெற்றதாக சுட்டுகிறார். தமிழின் சிகரங்களாகவுள்ள திருவாசகம், திருக்குறள் மற்றும் நாலடியார் என யாவற்றையும் கிருஷ்தவ தொடர்பின் விளைவு என்று ஜீ.யூ.போப் சொல்லியது "திருவாசகமும் திருக்குறளும் "சைவநெறியோடு பிணைந்துள்ளவரை கிருஷ்தவத்தை முழுமையாகப் பரப்ப முடியாது என்பதை உணர்ந்தே!
திருக்குறளை சைவநெறியில் இருந்து பிரித்து சமணநூல் என்று ஆரம்பத்தில் கதைபரப்ப பெரியாருக்கு உழைத்தது இக்கிருஷ்தவ விசம தரகுக்கூட்டம் எனலாம்.இரண்டாவதாக இப்போது வந்திராத தோமஸுடன் திருவள்ளுவருக்கு உறவுப்பாலத்தை ஊட்டுகின்றது தனது பணபலம் கொண்டு!
பெரியார் "திருக்குறளின் முதலாவது அதிகாரமாகிய கடவுள் வாழ்த்து என்பதை மாற்றி மனித இனத்தின் குறிக்கோள் என்று அதற்குத் தலைப்புத் தரவேண்டும்" என்று வேண்டியதாக க.அப்பாத்துரையார் குறிப்பிட்டுள்ளமை கடவுள் வாழ்த்தை ஏற்றுக் கொள்ளமுடியாத மனநிலையில் பெரியார் இருந்துள்ளார் என்பதைப் புலனாகின்றது. ஆரியர் இடையில் கலப்படம் செய்துவிட்டனர் என்று கதறுகின்ற பெரியார்வாதிகள் பெரியார் செய்யமுயன்ற கலப்படத்தை என்னவென்று சொல்வார்கள்? இன்னொருவரிடம் இவ்வண்ணம் வேண்டியவர் "தனது கொள்கைக்காக எவ்வளவு கலப்படம் செய்து பொருளை திரிவுபடுத்தி பேசியிருப்பார், எழுதியிருப்பார்" என்பதையும் உய்த்துணரலாம்.
பாரதிதாசன், சைவ சித்தாந்தத்தைப் பகுத்தறிவுக் கண்ணோட்டத்தோடு படித்தால், திருவள்ளுவருடைய கருத்துக்குப் போகலாம் "என்று குறிப்பிட்டார் என க.அப்பாத்துரையார் குறிப்பிடுகின்றார். இதிலிருந்து பாரதிதாசனும் சைவ சித்தாந்த நூலே திருக்குறள் என்று ஒப்புக்கொண்டமையை உணரமுடிகின்றது.
"அம்மையப்பரே உலகுக்கு அம்மையப்பர் என்று அறிக
அம்மையப்பர் அப்பரிசே வந்தளிப்பர் - அம்மையப்பர்
எல்லா உலகுக்கும் அப்புறத்தார் இப்புறத்தும்
அல்லார்போல் நிற்பார் அவர்" என்பது திருக்களிற்றுப்படியாரில் (சைவ சித்தாந்த சாத்திர நூல்) கடவுள் வாழ்த்து பாடலாகும். உமையம்மை உடனாய அப்பனாகிய சிவமே உலகத்தாருக்கு அம்மையப்பர். அம்மையப்பராக வந்தே துணை செய்வர். எல்லா உலகத்துக்கும் அப்பாலும் இவ்வுலகில் இல்லாததுபோலும் தோன்றுவர். "ஆதி பகவன் முதற்றே உலகு" என வள்ளுவர் கடவுள் வாழ்த்தில் ஏலவே இதே சைவ சித்தாந்த கருத்தை முன்வைத்துள்ளார். ஆனால் நாத்தீகவாதபீடங்கள் பகவன் என்பது சமணச் சொல் என்றும் தனது அம்மாவாகிய ஆதியையும் தனது அப்பாவாகிய பகவனையும் பாடுகின்றார் என்றும் பிதற்றுவர்.
உலகப் பொதுமறையை இயற்ற விளைந்தவர் தனது சொந்த தாயையும் தந்தையையும் கடவுள் வாழ்த்தில் சுட்டுவார் என்பது எவ்வளவு அறியாமை! கடவுள் வாழ்த்தில் தமிழிலக்கியங்களில் எந்தவொரு ஆசிரியரும் இவ்வண்ணம் சுட்டியது இல்லை. ஆனால் திருவள்ளுவர் வழமைக்கு மாறாக உலகப் பொதுமறையாக இயற்றுகின்ற நூலில் சுட்டினார் என்பது நாத்தீகவாத கதைகட்டலில் ஏற்பட்ட பெரிய ஓட்டை என்க.
அந்நிய பண்பாட்டுச் சொற்கள் ஏராளமாக இன்று தமிழுக்குள் வாழுவது கண்கூடு. பகவன் எனும் சொல் சமணத்துடன் தொடர்பானதாயின் அது சமண நூல் ஆகிவிடுமா என்ன? இன்று வேதம்,வேதாகமம்,வீபூதித் திருநாள் என்பன கிருஷ்தவத்துள் புழக்கத்தில் இருப்பது கண்கூடு! சமண சமய அறிமுகத்தால் தமிழில் அச்சொல் புழக்கத்தில் இருந்தமையால் வள்ளுவர் பயன்படுத்தியிருக்க வாய்ப்புண்டல்லவா? ஏனெனில் சமணநூலே திருக்குறள் என்பதற்கு எந்தவித சிந்தனையும் இன்றி இதையே சுட்டுகின்றனர்.
திருக்குறளுக்கு சமண நூல் எனும் மாயை சூட்டியவர்கள் மறுபிறப்புக் கொள்கையை மறந்துபோனது ஏனென்று விளங்கவே இல்லை. எண் குணத்தான் என கடவுளை திருக்குறள் கூறுகின்றது. நக்கீரர்,ஔவையார்,இடைக்காடர் எனப் பல சைவப் புலவர்களால் போற்றி புகழப்பட்ட நூலே திருக்குறள். சமண, பௌத்தப் புலவர்கள் திருவள்ளுவரையோ அன்றி திருக்குறளையோ போற்றிப் புகழ்ந்ததாக இட்டுக்கட்டிக்கூட காட்டமுடியாது.
அறம்,பொருள்,இன்பம்,வீடு எனும் கோட்பாட்டில் முதல் மூன்றையும் விளக்கியுள்ளார் வள்ளுவர், எல்லா சமண நூல்களும் காமத்தை துறந்து துறவை நாடுவதில் முடிகின்றன.திருக்குறள் காமத்துப்பாலுடன் அல்லவா முடிகின்றது! வீடு பேற்றை விளக்கினால் சமய பொதுத்தன்மைக்கு இடைஞ்சல் ஆகிவிடும் என கருதியிருக்க வாய்ப்புண்டு.ஆனால் சைவ சித்தாந்தக் கருத்துகளை தவிர்க்காமல் எழுதமுடியவில்லை. சைவத்தை திணிக்கும் எண்ணம் சைவரிடம் இருந்ததில்லை. இதனாலேயே இந்தோனேசியாவிலும் கிழக்காசிய நாடுகளிலும் சைவம் தழைக்கவில்லை. பொதுநூலாக எழுத வெளிக்கிட்டபிறகு சிவன் எனும் பெயரை தவிர்த்திருப்பார் வள்ளுவர்.
சமணத்தின் உட்பிரிவுகள், பௌத்தத்தின் உட்பிரிவுகள் எவற்றோடும் திருக்குறளுக்கு சம்பந்தம் இல்லை என்பதையும் திருவள்ளுவர் சித்தாந்த சைவர் எனப்தையும் திருவாவடுதுறை ஆதீனம் தெளிவாக விளக்கியிருந்தும் அரசியல் பலம், பணபலமாகியன அற்றதனால் மக்களை சென்றடையாமல் அக்கருத்துகள் உள்ளன.
"தேருங்கால்
உன்னை ஒழிய உறவு இல்லை என்னும் அது
தன்னை அறிவைத் தனிஅறிவை - முன்னம்
தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை அவர் என்று - நிலைத் தமிழின்
தெய்வப் புலமைத் திருவள்ளுவர் உரைத்த
மெய் வைத்த சொல்லை விரும்பாமல் - ஐவர்க்கும் ஆவதுவே
செய்து அங்கு அவர்வழியைத் தப்பாமல்
பாவம் எனும் பௌவப் பரப்பு அழுந்திப்"
ஆராய்ந்து பார்க்கும்போது கடவுளாகிய உன்னைத்தவிர எனக்கு யாரும் உறவில்லை என்னும் கருத்தை, பசு ஞானம் எனப்படும் ஆன்மாவின் அறிவையும், பதி ஞானம் எனப்படும் பரம்பொருளின் மேலான மெய்யறிவையும் முன்பு எய்தியவர்கள் கூறினர்.இவ்வுடலையும் இவ்வுலக வாழ்வையும் முற்றாகத் துறந்தவர்களான அவர்கள் கூறிய இத்தகைய உண்மைகளை உணராதவர், மயங்கி மாயைகளின் வலையில் பட்டவர் என்று கூறிய தெய்வப் புலமைத் திருவள்ளுவரின் மெய்யான கருத்தையும் அறிந்து கொள்ள விரும்பாமல், ஐந்து புலன்களுக்கு விருப்பமானதையே செய்து, அவை காட்டும் வழியில் மட்டும் தவறாது நடந்து பாவக்கடலில் மூழ்கி வருந்துவார் என சைவ சித்தாந்த சாத்திர நூல்களில் ஒன்றாகப் போற்றப்படும் நெஞ்சுவிடு தூதுவில் உமாபதி சிவாச்சாரியார் திருவள்ளுவரையும் "தலைப்பட்டார் தீரத்து றந்தார் மயங்கி வலைப்பட்டார் மற்றை யவர்" என்னும் குறளையும் பயன்படுத்தி திருக்குறளை சைவநெறியுடன் சமபந்தஞ் செய்துள்ளார்.
சைவ சித்தாந்த சாத்திர நூல்களின் ஒன்றாகிய திருக்களிற்றுப்படியாரில்;
"அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பறிப்பீனும் விந்து"
"வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்" என்னும் குறள்களை;
"வேண்டும்கால் வேண்டும் பிறவாமை என்றமையால்
வேண்டின் அஃது ஒன்றுமே வேண்டுவது - வேண்டினது
வேண்டாமை வேண்ட வரும் என்றமையால்
வேண்டிடுக வேண்டாமை வேண்டும் அவன்பால்"
என்னும் பாடலில் மேற்கோள்களாக காட்டப்பட்டிருப்பதும் திருக்குறள் சைவ சித்தாந்த நூலே என்பதை எளிதாகப் புலனாக்கின்றது.
"சாவிபோம் மற்றைச் சமயங்கள் புக்குநின்று
ஆவி அறாதே என்று உந்தீபற
அவ்வுரை கேளாதே உந்தீபற" என்கிறது சைவ சித்தாந்த சாத்திர நூல்களில் ஒன்றாகிய திருவுந்தியார். உள்ளீடு இல்லாத பிறசமயங்களில் சென்று ஆவியை இழந்து மீண்டும் பிறப்பை ஏற்கக்கூடாது. அவற்றின் உரைகளைக் கேட்டுக் காலம் கடத்தல் கூடாது என்கின்றது. எனவே உள்ளீடு இல்லாத சமயங்களின் உரைகளை அச்சமயங்களின் நூல்களை படித்து கேட்டு காலத்தை வீணாக்குவது தவறு என்கின்ற சைவ சித்தாந்த மரபில் திருக்குறளை எடுத்துக்காட்டுகளாக நேரடியாக பயன்படுத்தியிருப்பதில் இருந்து திருக்குறள் சமணநூல் அல்ல என்பதும் சைவநூலே என்பதும் தெளிவாகிறது.
"நீறில்லா நெற்றி பாழ்" என்றும் "சிவாயநம என்று சிந்தித்து இருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை" என்றும் உரைக்கின்ற நல்வழி நூலின் கடைசிப் பாடலாக ஔவையார்,
"தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகம் என்று உணர்" என்கிறார்.
திருவள்ளுவரின் திருக்குறளும் உயர்ந்த நான்கு வேதங்கள் உணர்த்தும் முடிவான பொருளும், தேவார முதலிகளாகிய திருஞான சம்பந்தர்,சுந்தர மூர்த்தி நாயனார், அப்பர் பெருமான் ஆகியோரின் தேவாரங்களும் மாணிக்கவாசகப் பெருமான் பாடியருளிய திருவாசகமும் திருக்கோவையாரும் திருமூலநாயனாரின் தமிழாகமம் எனப்படும் திருமந்திரமும் ஒரே பொருளை உணர்த்தும் நூல்கள் என உணர்வாயாக" என்று பாடுகின்றார்.
அதாவது திருநெறிச் சைவ சித்தாந்தந்த தோத்திர நூல்களான தேவாரங்கள், திருவாசகம், திருக்கோவையார்,திருமந்திரம் போன்றவற்றுடன் திருக்குறளையும் இணைத்து ஔவையார் சுட்டுவது, அவருக்கு ஏலவே இருந்திருந்த "முற்காலம்" உணருகின்ற யோகசித்தியையே காட்டுகின்றது எனலாம்.
"உணர்வாயாக" என்று ஔவையார் யாரையோ சுட்டிச் சொல்வது போல் உள்ளமையை இங்கு கவனிப்பீர்களானால் அது யாரை என்பது தெளிவாகப் புலனாகும். நாத்தீக அரசியலில் திருக்குறளை சைவநூல் அல்ல என்று கூசாது பொய்யுரைத்த பெரியார் தொட்டு அவரது பிள்ளைகள் என துடிக்கின்ற கருணையில்லா நிதி மற்றும் வீரமணி அடங்கலாக மதம்பரப்புதல் என்ற ஒரே குறிக்கோளுக்காய் தமது மதத்தையே விற்கத் துணிந்த ஒருசில கிருஷ்தவ விசமிகள் வரைக்கும் உள்ள அறிவற்ற அரசியல் மதபோதை பிடித்தவர்களுக்கே என்க.
சைவ சித்தாந்த புறச் சந்தான குரவர்களுக்கும் சரி, ஔவையாருக்கும் சரி, மற்றும் ஏனைய புலவர் பெருமக்களுக்கும் சரி, திருக்குறள் சமணநூல் என்றால் அதை சைவநூலாக்க வேண்டிய தேவை இருந்திருக்கவில்லை. அதேவேளையில் அத்தகைய இழிவான பண்பாடு அன்றைய தமிழ்ப் புலவர்களிடம் இருந்திருக்கவில்லை. பெரியாரின் வழியில் உருவாகிய அரசியல் பண்பாடே இத்தகு இழிநிலையை தமிழில் அறிமுகப்படுத்தியது.சில கிருஷ்தவ தரகர்கள் தொடருகின்றனர்.
"ஓதுசம யங்கள்பொருள் உணரு நூல்கள்
ஒன்றோடுஒன்று ஒவ்வாமல் உளபலவும் - இவற்றுள்
யாதுசம யம்பொருள்நூல் யாதிங்கு என்னின் இதுவாகும்
அதுஅல்லது எனும்பிணக்கம் இன்றி நீதியினால்
இவைஎல்லாம் ஓரிடத்தே காண நின்றதுயாதொருசமயம்
அதுசமயம் பொருள்நூல் ஆதலினான் இவைஎல்லாம்
அருமறைஆ கமத்தே அடங்கியிடும்
இவைஇரண்டும் அரனடிக்கீழ் அடங்கும்"
உலகில் உள்ள சமயங்களும் அவற்றின் கொள்கைகளை விளக்கும் நூல்களும் தமக்குள் முரண்பட்டனவாக உள்ளன. இவற்றுள் சிறந்த சமயம் எது? சிறந்த நூல் எது? என வினவினால், விடையாக இது அது ஆகும் அது இது ஆகும் என்று குழம்பாமல், எல்லாக் கொள்கைகளும் உரியமுறையில் உரிய இடத்தில் இருப்பதைக் கூறுவதே சரியானதாகும்.அவ்வாறான சமயம் சிறப்பான சமயம்.அத்தகு நூல் சிறப்பு வாய்ந்த நூல்.எனவே இத்தகைய சைவ சமயக் கொள்கைகளே அரிய வேதத்திலும் ஆகமங்களிலும் அடக்கம்.இவை இரண்டும் இறைவன் திருவடிகளை விளக்கி அங்கு அடங்கும். சித்தாந்த சாத்திர நூல்களில் ஒன்றாகிய சிவஞானசித்தியார் அழகாக அருமையாக உலகில் உள்ள எல்லா சமயங்களின் கருத்தையும் தன்னகத்தே கொண்ட ஒருநெறி எனின் அது சைவநெறி என விளக்கியுள்ளார். எனவே இத்தகு நெறியில் பூக்கும் எந்த நூலிலும் பிறசமயத்தவர் தமது சமயக் கருத்துகளை மட்டும் சுட்டிக்காட்டி, தமது சமயக் கருத்தைக் கொண்ட நூல் என வாதிட இடமுண்டு. தற்போது இது கண்கண்ட காட்சி! கிருஷ்தவ விவிலியக் கல்லூரிகள் தொட்டு கிருஷ்தவ பள்ளிவரை தமிழகத்தில் திருக்குறள், சைவ சித்தாந்த நூல்கள்,நாலடியார், ஆத்திசூடி என்பன கிருஷ்துவின் அருளைப் பெற்று எழுதிய நூல்கள் என நச்சுக் கருத்தை விதைக்கின்றனர். ஜீ.யூ.போப் ஏலவே திருவாசகத்தை கிருஷ்துவின் அருளையுணர்ந்து எழுதிய நூலென சுட்டியுள்ளார். இவற்றுக்கெல்லாம் சைவ நூல்கள் பொதுநூல்களாக விளங்கும் உன்னத உயர்ந்த தன்மையே காரணம்.
எனவே உலகப் பொதுமறையாக சைவநெறி வழங்கிய திருக்குறளை எளிதாக இந்த விசமிகள் திரிவுபடுத்தி சமணநூல், பௌத்த நூல், கிருஷ்தவ நூலென எளிதாக கதைபரப்பக் கூடியதாகவுள்ளது. சமண, பௌத்த,கிருஷ்தவத்தவர்களுக்கு உலகில் உள்ள எல்லா சமயங்களையும் சமயங்கள் என ஏற்கின்ற உணர்வுநிலை இருந்தமைக்கான அல்லது இருக்கின்றமைக்கான சான்றுகள் எதுவும் இல்லை. எனவே இத்தகு சமய உணர்வுடன் நூல்யாக்க முனைபவர் நேரடியாகவே தமது சமயநிலையை உயர்த்தி எழுதியிருப்பர். ஆனால் திருவள்ளுவர் பெருமானார் சைவநெறி ஒழுகி,அதன் பயனாக உலகுக்கு பொதுமறையாக நூல்யாக்க விளைந்து யாத்தநூலே திருக்குறள் என்பது திண்ணம்.
சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோவடிகள் கூட சைவநெறியைச் சார்ந்தவரே என்ற கருத்து வலிமைபெற்றுள்ளது. சிலப்பதிகாரத்தில் காணப்படுகின்ற சமயசார்பற்ற தன்மை கொண்டு இதை உறுதிசெய்வர். தமிழ் தாத்தாவும் இதனை ஒப்புக் கொண்டுள்ளமையை அறியக்கூடியதாகவுள்ளது. எனவே சமயசார்பற்ற இலக்கியங்கள் படைப்பதற்கு சைவநெறி வாழ்வே பக்குவத்தை வழங்கியுள்ளதை உய்த்துணரலாம்.
இன்று மதசார்பற்ற நாடக இந்தியா விளங்குகின்றதெனில், நாத்தீகம் பேசி;வேதநெறி,சைவ நெறி என்பவற்றை உணராது அரசியலுக்காய் எள்ளி நகையாடுகின்ற கருணையில்லா நிதி அரியணையை மீண்டும் மீண்டும் சுகிக்க ஏதுவாயிருப்பதும் சமயசகிப்புணர்வுச் சால்பை சைவப் பெருமக்களும் வேதப் பண்பாட்டு மக்களும் பெற்றுள்ள ஒரேயொரு காரணத்தால் என்பது வெள்ளிடைமலை!
"தானே முழுதுணர்ந்து தண்தமிழின் வெண்குறளால்
ஆனா அறமுதலா அந் நான்கும் - ஏனோருக்(கு)
ஊழின் உரைத்தாற்கும் ஒண்ணீர் முகிலுக்கும்
வாழிஉலகு என் ஆற்று மற்று"
- நக்கீரனார்
புளுகு பலநாளுக்கு தாக்குப்பிடிக்காது என்பர். எத்தனை காலத்துக்கு நாத்தீவ வாதப் புளுகுகள் தாக்குப்பிடிக்கின்றது என்று பார்ப்போம்!!!!!!
குறிப்பு:- திருக்குறள் ஏனைய சமயங்களுக்கு ஒவ்வாத கருத்துகளைக் கொண்டது என்பதையும் சைவ சித்தாந்த நூலே என்பதையும் திருக்குறளை ஆராய்வுசெய்து வாலையானந்த அடிகள் 1926- 27களில் வெளிவந்த செந்தமிழ்ச் செல்வி பத்திரிகையில் எழுதிய கட்டுரைகளை சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் தொகுத்து நூலாக வெளியிட்டிருந்த திருவள்ளுவர் சித்தாந்த சைவர் என்னும் நூல் மெய்கண்டதேவரின் குருபூசையன்று மறுபதிப்பாக வெளியிடப்பட்டிருந்தது. இந்நூலை இணையத்தில் திருவாவடுதுறை ஆதீனப் புலவர் தமது இணைய முகவரியில் ஏற்றியிருந்தார். எனினும் இன்று யாகூ தற்காலிகமாக தமது இலவச சேவையை நிறுத்திக் கொண்டதனால் அவ்விணைய முகவரி செயலிழந்துவிட்டது. எனினும் பிரிதொரு இணையவசதியூடாக ஆறுமுகநாவலர் என்னும் பெயரில் அன்பர் ஒருவர் வெளியிட்டுள்ளார்.குறித்த வலைத்தளத்திற்கு சென்று இந்நூலைப் படித்துப் பயனடையலாம். திருவள்ளுவர் சித்தாந்த சைவர் நன்றி.
"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்"
"தென்னாடுடைய சிவனே போற்றிஎந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி"
வேளாள குல உருவாக்கமும் அதிகாரத்துவமும்
யாழ்ப்பாண சமூகம் பற்றிய புறவயமான சமூகவியல் பார்வை கொண்ட ஆய்வுகள் மிகவும் குறைவு. இருப்பவைகளும் சமூக அமைப்பை விவரிக்கின்றதேயன்றி சமூக, பொருளாதார, வரலாற்று வழி நின்று சமூக உருவாக்கம் பற்றியவையோ அதன் அசைவியக்கம் பற்றியவையோ அல்ல. யாழ்ப்பாண சமூகத்தின் மையமாக கொள்ளப்படுபவர்கள் வேளாளர் என்பது ஆய்வாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்து. இந்த வேளாளர் என்பவர்கள் யார்? இவர்கள்தான் எப்போதும் மேலாதிக்க சக்தியாக இருந்தவர்களா? இவர்களின் உருவாக்கம் எப்படி நிகழ்ந்தது? தமது அதிகாரத்தைக் காலமாற்றங்களுக்கு ஏற்ப பேணுவதற்கு இவர்களுக்கு உதவும் கட்டுமானங்கள் எவை?
யாழ்ப்பாண வேளாளர் சமூகம் ஒரு சாதியா? இதனை மறுக்கின்றார், 1957இல் யாழ்ப்பாண சமூகத்தை ஆய்வு செய்த பேங்ஸ். வேளாளர் பகுதி என்றே இவர் குறிப்பிடுகின்றார். யாழ்ப்பாண சமூகத்தை ஆய்வு செய்கிற எவரும் இதனை ஒப்புக் கொள்ளுவார்கள். வேளாளர் ஒரு சாதியல்ல. யாழ்ப்பாண அரசர் காலத்தில் இருந்து ஐரோப்பியர் காலத்தினூடு விவசாய நிலத்தை மையமாகக் கொண்டு உருவான குழுமம். இதில் பல சாதிகள் பங்குபற்றியுள்ளன.
வேளாளர்-வெள்ளாளர்:
தமிழக-ஈழ சூழலில் வேளாளர், வெள்ளாளர் என்ற இரு சொற்களும் வழக்கில் உண்டு. இவை இரண்டும் ஒன்றுபோல் கருதப்பட்டாலும் இரண்டு சொற்களின் தோற்றுவாயும் வெவ்வேறு மூலங்கள் கொண்டது.
வேளாளர்:
இச்சொல்லின் மூலம் ‘வேள்’ என்பதாகும். இச் சொல்லுக்கு மூலத் திராவிட மொழியில் விருப்பம், தலைமை, ஒளிவிடு என்ற பொருள் உண்டு. யாழ்ப்பாண பேரகராதி ‘வேள்’ என்ற சொல்லுக்கு மண், தலைவன் என்று பொருள் தருகின்றது.
வேள் என்பது மன்னனுக்கும் வேந்தனுக்கும் இடையிலான அதிகாரப் படிநிலைச் சொல். வேள்கள் ஐந்திணைகளில் இருந்தும் தோன்றிய குடித் தலைவர்கள் என நிறுவுகின்றார், பழந் தமிழகத்தில் அரசுருவாக்கம் பற்றி ஆய்வு செய்த சு. பூங்குன்றன் (தொல்குடிகள்). கால் நடையுத்தத்தில் வணிக மையங்களைக் கைப்பற்றும் பூசல்களில் வெற்றி பெற்றவர்கள் ‘வேள்கள்’ ஆனார்கள். ‘வேள்’ என்பது குறிப்பிட்ட அதிகாரப் படிநிலைக் குரிய சொல்லாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. வேளாளருக்கும் விவசாயத்துக்கும் ஆரம்பத்தில் எதுவிதத் தொடர்பும் இல்லை என நிறுவுகின்றார் நெல்லை நெடுமாறன். தமிழகத்தைப் போல் ஈழத்திலும் இச்சொல் சமகாலத்தில் பாவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பிராமிக் கல்வெட்டுகளிலும் மட்பாண்ட சாசனங்களிலும் இச்சொல் பாவிக்கப்பட்டுள்ளது. இச்சொல் இலங்கையில் பாவிக்கப்படுவதற்கு இலங்கை பெருங்கற்கால மக்கள் திராவிடராக இருந்ததே காரணம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். அத்துடன் தமிழக வாணிபத் தொடர்பும் காரணமாகச் சொல்லப் படுகின்றது.
இலங்கையில் ‘வேள்’ என்ற சொல் வாணிபத் தலைவர் களுக்கு அதிகம் பாவிக்கப்பட்டாலும் அரச அதிகாரச் சொல்லா கவும் வழக்கில் இருந்துள்ளது. அரசு நிலைபெற்று வேந்தர்கள் தோன்றிய பின்பு வேள்கள் படைத்தலைவர்களாக, சமாந்தகர்களாக, வன்னிபங்கனாக மாறினார்கள். இவர்கள் போர்களில் அரசர்களுக்கு வெற்றி ஈட்டிக் கொடுத்தார்கள். வெற்றி பெற்ற புதிய நிலங்கள் இவர்களுக்கு மானியங்களாகக் கொடுக்கப் பட்டது.
வெள்ளாளர்:
தமிழ் இலக்கிய சமூகப் பார்வை நிலங்களை ஐந்திணை களாகப் பார்த்தது. இவை குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம், பாலை எனக் குறிக்கப்படும். முல்லை நிலத்திலேயே பயிர்ச் செய்கை தொடங்கியபோதும் செம்மைப்படுத்தப்பட்ட விவசாயம் மருத நிலத்திலேயே உருவானது. பெருங்கற்காலத்தில் இரும் பின் அறிமுகத்துடனும் குளநீர்ப்பாசன வசதியுடனும் ஆரம்பிக்கப்பட்ட இவ்விவசாயம் செய்த மக்களை உழவர் என இலக்கியங்கள் குறிக்கும். இவர்களின் தலைமக்களை ஊரன், மகிழன், கிழான் எனக் குறிப்பர். மழைநீரை நம்பிய இவ்விவசாய மக்களை காராளர் எனவும் குறிப்பர். கி.பி. 4ம், 5ம் நுhற்றாண்டில் ஏரி, ஆறு, நதி நீர்ப்பாசன முறைகள் பெருவளர்ச்சி கண்டது. வாய்க்கால்களில் ஓடி வரும் வெள்ளத்தை (நீர்) தேக்கி வைத்து விவசாயம் செய்தவர்கள் வெள்ளாளர்கள் ஆனார்கள். இவ்வெள்ளாளர் மருதநிலத்து தலைமாந்தரில் இருந்து தோன்றினார்கள் என்பதே யதார்த்தம். நீர்ப்பாசனத்தை அவர்களே கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார்கள். பின்பு நீர்ப்பாசன அதிகாரம் முற்றுமுழுதாக அரச நிர்வாகத்துக்குள் சென்றது.
ஈழத்திலும் நீர்ப்பாசனமுறை சமகாலத்தில் வளர்ச்சி அடைந்தது. ஆயினும் யாழ்ப்பாணக் குடாநாட்டில் அல்லது இலங்கையின் வடபகுதியில் இது விருத்தியடையவில்லை. அதற்கான ஆறுகள், நதிகள், யாழ்ப்பாணக் குடாநாட்டில் இல்லை. உண்மையில் யாழ்ப்பாணத்தில் வெள்ளாளர் என்ற சாதியே தோன்ற வில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
ஈழத் தமிழரும் வேள்களும்:
தமிழ்நாட்டுக்கு வெளியே தமிழர்களது அரசுருவாக்கம் நடந் தேறிய பிரதேசமாக யாழ்ப்பாணமே உள்ளது. பல்வேறு குறுநில வன்னிபத் தமைமைகள் இலங்கையில் வன்னி, கிழக்கு பிரதேசங்களில் உருவாகி இருந்தாலும் ஓரளவு வலிமையான அரசுரு வாக்கம் யாழ்ப்பாண அரசுருவாக்கமே.
யாழ்ப்பாண இராச்சியம் கி. பி. 13ம் நுhற்றாண்டில் உருவானது எனக்கொள்ளப்பட்டாலும், அதற்கு முன்னோடியாக ஆட்சி அதிகார மையங்கள் இலங்கையின் வடபகுதியில் இருந்துள்ளன. நாகதீபம் எனும் ஆட்சிப் பிரதேசம்பற்றி பாளி நுhல்கள் தகவல் தருகின்றன. அது உண்மையென ‘வல்லிபுர பொன் ஏடு’ நிரூபிக் கின்றது. தொல்லியல் சாசன சான்றுகளின்படி ஆனைக்கோட் டையில் கிடைத்த ‘கோவேத’ முத்திரை, பூநகரி வேளான் சாசனம், வல்லிபுர ஏட்டில் உள்ள ‘ராய’ என்ற குறிப்பு, இவைகள் ஆட்சி அதிகாரத்துடன் தொடர்புடைய சொற்கள் ஆகும். வன்னிப் பிரதேசத்திலும் வேள் ஓட்டைக் கொண்ட சாசனங்கள் மகாவம்சம் குறிப்பிடும் வேள்நாடு, வேள்கம, வடபகுதி தலைவர் பற்றிய குறிப்புகள் ஆட்சி அதிகார மையங்கள் இருந்ததற்கான சான்றுகள் ஆகும். இதனுடன் வெடி அரசன் பற்றிய ஐதீகமும் கவனிக்கப்படவேண்டியது.
யாழ்ப்பாண இராச்சியமும் - வேளாந்தலைவர்களும்
யாழ்ப்பாண இராச்சியம் என்று குறிக்கப்படும் அரசு 13ம் நுhற்றாண்டில் பாண்டியர் சார்பாக படை எடுத்து வந்த ஆரியச் சக்கர வர்த்தி தலைமையில் உருவானது என்பது ஆய்வாளர்கள் நிறுவிய ஒன்று. எனினும் இதற்கு முன்னோடியாக நாகதீப அரசு, சோழர் அரசு, கலிங்க மகான் அரசு, சாவகன் அரசு ஆகியன இருந்தன. சோழர்கள் இலங்கையில் ஆட்சியை நிறுவியபோது முன்பிருந்த ஆட்சி அலகுகளை நிலமானிய கட்டுமானங்கள் மூலம் பலப்படுத்தினார்கள். ஊர், பற்று, நாடு, வாணிபம், வளநாடு போன்ற ஆட்சிக் கட்டுமானங்கள் ஈழத்திலும் உருவானது.
யாழ்ப்பாண அரசு உருவானபோது ஆரியச் சக்கரவர்த்தியின் படைத் தளபதிகள், பிரதானிகள், வடஇலங்கை நிர்வாகிகளாக, முதலிகளாக, வன்னிபன்களா, உடையார்களாக பதவி பெற்றார்கள் என்கிறார் வரலாற்றாய்வாளர் சி. பத்மநாதன். இவர்களே வேளாந் தலைவர்கள் எனவும் வன்னியர்கள் எனவும் அழைக்கப்பட்டவர்கள். இப்படைத் தளபதிகள் பல்வேறு குல, சாதிகளில் இருந்து உருவாகி வந்தவர்கள். இதற்கு கைலாய மாலையும் யாழ்ப்பாண வைபவமாலையும் வையா பாடலும் சான்று தருகின்றது.
இலக்கியங்கள் குறிக்கும் 24 வேளாளர் தலைவர்களில், மழவர்-9, தேவர்-2, பாணர்-2, உடையார்-1, செட்டியார்-1, முதலிகள்-2, மீதி 6 வேளாந்தலைவர்களின் சாதி தெரியவில்லை என்கிறார் முத்துக்குமாரசாமிப் பிள்ளை (யாழ்ப்பாணக் குடி யேற்றம்).
முதலி, பிள்ளை:
முதலி, பிள்ளை என்பனவும் பதவிநிலைப் பெயர்களே. இவை ஊர், பிரதேசத் தலைவர்களைக் குறிக்க தமிழகத்தில் வழக்கில் இருந்தது. தமிழ்நாட்டின் வடக்குப் பகுதியில் (சோழநாடு, தொண்டைநாடு) முதலி என்ற பெயரும், தெற்குப் பகுதியில் (பாண்டிநாடு) பிள்ளை என்ற பெயரும் வழக்கில் இருந்தது. ஈழத்தில் சோழர் வழக்கான முதலி என்ற பெயரே வழக்குக்கு வந்தது. எனினும் பிள்ளை என்பது சாதிப்பெயராக வழக்கில் உண்டு.
தமிழக வேளாளரும் - ஈழ வேளாளரும்:
தமிழகத்தில் சாதிய வடிவம் காலகட்டங்களுக்கு ஏற்ப மாற்றம் பெற்றே வந்துள்ளது. தொழில்வழிக் குழுக்களாக இருந் தவை, அகமணம் மூலம் சாதியாக நிறுவனப்படுத்தப்பட்டதும் ஏறுவரிசையில் சமூகத்தில் அவை கட்டமைக்கப்பட்டதும் நெடுங்கால சமூக இயக்கத்தில் நடந்தேறியது. சாதியத்தின் உச்ச வடிவம் விஜயநகர சாம்ராஜ்ய காலத்திலேயே நிகழ்ந்தது. ஆட்சிமொழி வேறுபாடு, பார்ப்பனிய செல்வாக்கு அதிகரிப்பு, வைணவமதம் அரசமதமாக மாறியது போன்றவை நிகழ்ந்த இக்காலத்தில் பூர்வீக வேளாளர் (பூர்வீக குறுநிலத் தலைவர்கள் + வெள்ளாளர்) சைவத் தமிழ் இறுக்கத்தைக் கொண்டு வந்ததும் மடங்கள் அமைத்து செயற்படத் தொடங்கியதும் நடந்தது. இக்காலத்தில்தான் வேளாளர் + வெள்ளாளர் இணைப்பு அல்லது கலப்பு தமிழகத்திலே முழுமை பெற்றது.
ஈழத்தில் வேறுமாதிரியான இயக்கம் நிகழ்ந்தது. யாழ்ப்பாண இராச்சியம் விஜயநகர மேலாதிக்கத்தை ஏற்றுக் கொண்டாலும் தனது தனித்துவத்தைப் பேணியது. போர்த்துக்கேயர் வந்து தலையிடும்வரை சுதந்திர அரசாகவே யாழ்ப்பாண அரசு இயங்கியது. அதன் அரசர்களாக ஆரியச் சக்கரவர்த்தி பரம்பரை திகழ்ந்தாலும் அதன் தூண்களாக இருந்தவர்கள் வேளான் முதலிகளே. இவ் வேளான் முதலிகள் பல்வேறு சாதிகளில் இருந்து வந்திருந்தாலும் தங்கள் அதிகாரத்தைப் பேணுவதற்கு தங்களுக்குள் திருமண உறவுகளைப் பேணிக் கொண்டார்கள். அத்துடன் யாழ்ப்பாண அரச குடும்பத்துடன் திருமணம் செய்து தங்கள் அந்தஸ்தையும் பறைசாற்றிக் கொண்டார்கள்.
போர்த்துக்கேயர் யாழ்ப்பாண இராச்சியத்தில் தலையிட்ட போது பல்வேறு நெருக்கடிகளை யாழ்ப்பாண அதிகார வர்க்கம் சந்தித்தது. அரச குடும்பத்தில் ஆட்சியைக் கைப்பற்றும் போட்டியில் இரு மூத்த அரச குமாரர்கள் மரணத்தைத் தழுவ சங்கிலியன் ஆட்சிபீடத்தில் ஏறினான். பரநிருபசிங்கன் போர்த்துக் கேயர் பக்கம் சாய்ந்தான். முதலிகள் சங்கிலியன் சார்பானவர்கள். பரநிருபசிங்கன் சார்பானவர்களை இரு பகுதியாகப் பிரித்தார்கள். போர்த்துக்கேயரால் பரநிருபசிங்கனுக்கு அரச பதவியைப் பெற்றுக் கொடுக்க முடியாமல் போனாலும் கி. பி. 1591இல் யாழ்ப்பாண இராச்சியத்தை தங்கள் மேலாதிக்கத் துக்குள் கொண்டு வந்தபொழுது பரநிருபசிங்கன் வாரிசுகளுக்கு (பேரன்மாருக்கு) யாழ்ப்பாணத்தின் முக்கிய ஊர்களின் முதலி பதவிகளை வழங்கினார்கள். ஏற்கனவே முதலிகளாக இருந்தவர்கள் இதனால் அதிருப்தி அடைந்தார்கள். அரச குடும்ப முதலிகள் (மடப்பள்ளி வேளாளர்) ஓ வேள முதலிகள் முரண் இக் காலத்தில் உருவாகத் தொடங்கியது.
யாழ்ப்பாண இராச்சியம் முழுமையாக போர்த்துக்கேயர் கையில் கி. பி. 1619இல் விழுந்தபோது முடிக்குரிய அரச குடும்பம் நாடு கடத்தப்பட்டு கோவாவுக்கும் போர்த்துக்கல்லுக்கும் கொண்டு செல்லப்பட்டது. மற்றைய அரச குடும்பத்தவர்களுக்கும் நிர்வாகப் பதவிகள் வழங்கப்பட்டது. இவர்களும் இவர்கள் சார்ந்த குடும்பத்தவருமே பின்பு மடப்பள்ளி வேளாளர் என அழைக்கப்பட்டார்கள். இவர்களைச் சார்ந்து போர் மறவர்களான கள்ளர், மறவர், அகம்படியார், மலையாள அகம்படியார் (நாயர், தீயர், பணிக்கர்), கரையார், சிவியார் செயல்பட்டதாகத் தெரி கின்றது.
போர்த்துக்கேயர் காலம் யாழ்ப்பாண வரலாற்றில் பல மாறுதல்களை ஏற்படுத்தியது. தோம்புகள் எழுதப்பட்டு காணிகள் விற்கப்பட்டன. இதனைப் பொருளாதார பலமுள்ள சாதிகள் வாங்கின. இத்தோம்புகளை எழுத உதவியவர்கள் வேளான் முதலிகளே. இத்தோம்புகளிலேயே விவசாய நிலம் வைத்திருந்தவர்கள் ‘வேளாளர்’ என முதன்முதலில் குறிக்கப்பட்டார்கள். வேளாளர் தலைமையில் மடப்பள்ளி வேளாளருக்கு எதிரான குழுமம் அணி திரண்டது. பல்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் ‘வேளாளர்’ எனப் பதிவுரீதியில் அங்கீகரிக்கப்படல் இதன்மூலம் நடந்தது.
ஆரம்பத்தில் தோன்றிய இவ்வேளாள குழுமத்துக்குள் பாணர், மழவர், தேவர், உடையார், செட்டி, சீர்பரதர், வேளாள சாணார் போன்றோர் கலந்தனர். இவ்வேளாள குழுமம் ஒல்லாந்தர் வருகையை ஊக்குவித்தது. ஒல்லாந்தரும் இவர்கள் விசுவாசத் துக்குத் தக்கபடி பதவிகளை வழங்கினார்கள். இதனால்தான் மடப்பள்ளி வேளாளனான பூதத்தம்பி முதலி போர்த்துக்கேயருடன் இணைந்து சதி முயற்சியில் இறங்கினான். அது மேலும் ஆபத்தில் முடிந்தது. இருந்த பதவிகளும் பறிபோனது. இதனைத் தங்களுக்குச் சார்பாக்கிய வேளான் முதலிகள் மக்களைச் சுரண்ட ஒல்லாந்தருக்குத் துணை போனார்கள். மக்கள் நேரடியாக ஒல்லாந்தருடன் தொடர்பு கொள்ளும் வழிகளைத் தடுத்து தமது அதிகாரத்தினைப் பேணினர்.
மடப்பள்ளியினரும் மற்றவர்களும் தங்களுக்குப் பதவிகள் வேண்டுமெனக் கோரிக்கை வைத்தனர். வேளான் முதலிகளிடம் முழுப் பதவிகளும் இருப்பது ஆபத்தென உணர்ந்த ஒல்லாந்தர் கி. பி. 1694இல் மடப்பள்ளியினருக்கும் ஏனையோருக்கும் பதவிகளை வழங்கினர். இதனை எதிர்த்து வேளாளர் கிளர்ச்சி செய்தனர். கிளர்ச்சி அடக்கப்பட்டது. ஒல்லாந்தர் காலத்தில் கி. பி. 1694க்குப் பின்பு முதலி பகுவகித்த சாதிகள்:
1. வேளாளர், 2. மடப்பள்ளி வேளாளர், 3. செட்டிமார், 4. பரதேசி (கள்ளர், மறவர்), 5. மலையாளி (மலையாள அகம்படியார்), 6. கரையார், 7. தனக்காரர், 8. சிவியார்
இம் முதலி பதவி வகித்த சாதிகளுக்கும் நிலமானியங்கள் கிடைத்தன. இது இவர்கள் பின்பு வேளாள குழுமத்துக்குள் கலக்கக் காரணமாக இருந்தது. வேளாள ஒ மடப்பள்ளி வேளாள மோதல் ஆங்கிலேயர் கால முற்பகுதிவரை நீடித்தது. கி. பி. 1833இல் ககூல்புறூக் சீர்திருத்தம் அமுல்படுத்தப்பட்டபோது ஒன்றுபட்ட இலங்கை உருவானது. தனியார் பொருளாதாரம் ஊக்குவிக்கப்பட்டது. ஆங்கிலம் கற்றவருக்கு வேலைவாய்ப்பு, புரட்டஸ்தாந்து கிறிஸ்தவர் எனில் உத்தியோகங்களுக்கு முன் னுரிமை கொடுக்கப்பட்டது. பணப்பயிர் செய்கை ஊக்குவிக்கப் பட்டது. இது சமூக மட்டத்தில் பலத்த தாக்கத்தைச் செலுத் தியது.
ஒன்றுபட்ட இலங்கை, ஆங்கிலேயர் ஆளுகைக்கு உட்பட்ட தென்னாசிய, தென்கிழக்காசிய சூழல், முதலாளித்துவ சமூகக் கட்டுமானம் என்ற பின்புலத்தில் வேளாள ஒ மடப்பள்ளி வேளாள முரண் காணாமல் போனது. இவர்களுடன் கள்ளர், மறவர், அகம் படியார், மலையாள அகம்படியார், தனக்காரர், செட்டி, தவசிகள், சிவியார் (வேளாள சிவியார்) என்பவர்கள் இணைந்த வேளாளர் குழுமம் ஆங்கிலேயர் காலக் கடைசியில் தோன்றி இருந்தது. இதற்கு ஆங்கிலக்கல்வி முறைகளும் உத்தியோகங்களும் நிலஉடைமையோடு சேர்ந்து உதவியது.
மறுபுறத்தில் கி. பி. 1810இல் கொண்டு வரப்பட்ட இலவச சேணுமுறை தடைச்சட்டம், கி. பி. 1844இல் கொண்டு வரப்பட்ட அடிமைமுறை ஒழிப்புச் சட்டம் என்பன நடுத்தர தலித் மக்களை நகர வைத்தது. இவர்களும் ஆங்கிலக் கல்வியை உத்தியோக வாய்ப்புகளை நாடினர்.
அதிகாரத்துவமும் கருத்தியலும்:
யாழ்ப்பாண வேளாளர் அதிகாரத்தைத் தொடர்ந்து பேணு வதற்கு பல காரணிகள் துணை நின்றன.
1. பொருளாதாரம் 2. எண்ணிக்கை 3. கலாச்சாரம் 4. சமயம் 5. சட்டம் 6. கோயில் 7. பள்ளிக்கூடம் 8. இலக்கியம் 9. அரசியல்
பொருளாதாரம்:
விவசாய நிலத்தைப் பொருளாதார மையமாகக் கொண்டு சுழலும் வேளாள குழுமம் பல்வேறு சாதிகளின் இணைவில் தோன்றி இருந்தாலும் இவர்களின் இணைவைச் சாத்தியமாக் கியது நிலமே ஆகும். இவர்களது மேலாதிக்கத்துக்கு காரண மாக உள்ளவற்றில் நிலத்துக்கு முக்கிய பங்கு உண்டு.
எண்ணிக்கை:
1957ம் ஆண்டு பாங்ஸ் கொடுத்த புள்ளி விபரத்தின்படி வேளாளர் எண்ணிக்கை 50% ஆகும். இது வேளாளரை எண்ணிக்கை அடிப்படையில் வலிமையானவர்களாக மாற்றுகின்றது. இது எப்போதும் இருந்த நிலைமையில்லை என்பதுவும் உண்மையாகும். கி. பி. 1690க்கு முன்பு யாழ்ப்பாணச் சனத்தொகையில் வேளாளர் வீதம் கிட்டத்தட்ட 10ம% ஆகும். கிபி 1990இல் 30ம% ஆகவும் 1830இல் 40% ஆகவும் 1950 அளவில் 50% ஆகவும் மாறியது. இது வேளாளர் பல சாதிகளை உள்ளிழுத்துக் கொண்டதனால் ஏற்பட்ட மாற்றம் என்பது வெள்ளிடைமலை. இதன் மூலம் வேளாளர் பாராளுமன்றம் முதல் உள்ளுராட்சிச் சபை வரை தமது ஆதிக்கத்தை ஏற்படுத்த முடிந்தது. வேளாள குழுமம் உள்ளுர எத்தனை முரண்பாடுகள் இருந்தாலும் அதனை வெளித் தெரியாமல் மறைப்பது இதனால்தான்.
கல்வி:
அரசர் காலம் தொடக்கம் போர்த்துக்கேய, ஒல்லாந்த, ஆங்கிலேயர் காலம்வரை கல்விபெற்ற சமூகமாக வேளாள குழுமமே இருந்தது. அத்துடன் கல்வியை மற்ற சமூகங்களுக்கு மறுத்தவர்களாகவும் வேளாளர்கள் உள்ளார்கள். கல்விமூலம் கிடைத்த பதவிகளைத் தக்க வைக்கும் சமூகமாகவே வேளாளர் இருந்தனர். வேளாளர் பாடசாலைகள் நிறுவியபோதும் ஆரம் பத்தில் மற்றவர்கள் அனுமதிக்கப்படவில்லை.
கலாச்சாரம்:
கலாச்சார ரீதியில் தீண்டாமையையும் புறம் ஒதுக்கலையும் மற்றைய சமூகங்களுக்கு வழங்கிய வேளாளர் கலாச்சாரத் தளத்தில் மற்றையவரை விளிம்புநிலையில் வைத்திருக்கவே விரும்பினர். உடை, பாவிக்கும் பொருட்கள், கலாச்சார சின்னங்கள் போன்றவற்றை மற்றையவர்களுக்குத் தடைசெய்தார்கள்.
சமயம்:
யாழ்ப்பாண வேளாள குழுமத்தை பொதுவாக சைவத்துடனும் தமிழுடனும் இணைத்துப் பார்க்கும் போக்கு உள்ளது. உண்மையில் இதுவும் கட்டமைக்கப்பட்ட ஒன்றுதான். இதனைக் கட்டமைத்தவர் ஆறுமுக நாவலர் (1822-1879). இந்துத்துவத் திற்கு எதிராக நாவலர் இதனைக் கட்டமைத்தார். இதன்மூலம் சைவ சித்தாந்தத்தையும் ஆகமநெறிகளையும் தூக்கிப் பிடித்தார். இது மறுபுறத்தில் சாதிய ஒடுக்குமுறை உக்கிரம் பெறவும் உதவியது.
போர்த்துக்கேயர் காலத்தில் கி. பி. 1638இல் யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்களில் பெரும்பான்மையானவர்கள் கத்தோலிக் கராக இருந்தார்கள். ஒல்லாந்தர் காலத்தில் கி. பி.1671இல் டச்சு அறிக்கையின்படி 142357 பேர் யாழ்ப்பாணக் குடாநாட்டில் வாழ்ந்ததாகவும் அதில் 141456பேர் புரட்டஸ்தாந்து கிறிஸ்தவர்களாக இருந்தார்கள். ஆங்கிலேயர் கால ஆரம்பத்தில் கி. பி. 1802க்குப் பின்பே பலர் இந்துமதத்திற்குத் திரும்பினர். எனினும் 1812க்குப் பின்பான மிசனரிமாரும் 1833க்குப் பின்பு புரட்டஸ்தாந்து கிறிஸ் தவர்களுக்கு உத்தியோகத்தில் முன்னுரிமை கிடைத்ததும் கல்விக்காவும் உத்தியோகத்துக்காகவும் பலர் மதம் மாறத் தொடங்கினர். இதற்கு எதிராக, கி. பி. 1842இல் சைவவேளாளரின் எதிர்வினையாக ‘சைவத்தமிழ்’ கருத்து வைக்கப்பட்டு அது வேளாளர் கருத்தியலாக மாறியது.
சைவவேளாளர் நவீனத்துவத்தை ஆதரித்தார்கள். ஆனால் அதனை மற்றையவர்களுக்குச் சுவற விடுவதற்குத் தயாராக இல்லை. இதுவே ஆறுமுக நாவலர் தொடக்கம் சேர் பொன் இராமநாதன்வரை தொடர்ந்தது. இதற்கு இவர்கள் தேசவழமைச் சட்டத்தை துணைக்கழைத்துக் கொண்டார்கள்.
சட்டம்:
போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் காலத்தில் வேளாளர் மேலா திக்கத்தைப் பேண வழிவகை செய்தது தேசவழமைச் சட்டமே. போர்த்துக்கேயர் காலத்தில் தேச வழமைகள் அங்கீகரிக் கப்பட்டு இருந்தது. ஒல்லாந்தர் காலத்தில் அவை தொகுக்கப்பட்டு எழுதப்பட்டது.
கோயில்:
யாழ்ப்பாண சமூக கட்டமைப்பைக் கட்டிக் காக்க அரசர் களுக்கும் பின்பு வேளாளருக்கும் கோயில்களும் உதவியது. ஒல்லாந்தர்கால நடுப்பகுதியில் கோயில்கள் தோன்றத் தொடங்கினாலும் ஆங்கிலேயர் காலத்திலேயே ஆகம முறைப் படுத்தல் முறையாக அமுல்படுத்தப்பட்டது. யாழ்ப்பாணத்தில் பல கோயில்களில் சாதிமுறையில் திருவிழா கொடுக்கப்பட்டது. இறங்கு வரிசைப்படி வெளிகள் பங்கீடு செய்யப்பட்டதும் நடைமுறையில் இருந்தது. இன்னும் இருக்கின்றது. இதனை எதிர்த்த நடுத்தர சாதிகள் தங்களுக்கு கோயில்கள் கட்டிக் கொண்டன. (கிறிஸ்தவர்களிலும் இது நடந்தது). கோயில்களில் நடந்த ஒதுக்கல்களுக்கு எதிராக பின்பு போராட்டங்கள் வெடித்தன. இன்னும் தலித்துக்கள் உள்நுழைய முடியாத கோயில்கள் யாழ்ப்பாணத்தில் உண்டு.
இலக்கியம்:
யாழ்ப்பாணத்தில் ஆரம்பத்தில் தோன்றிய இலக்கியங்கள் அரசை நிலைநிறுத்தும் இலக்கியங்களாகவும் அரசுக்கு கருத்து நிலை அந்தஸ்தை வழங்கும் இலக்கியங்களாகவும் இருந்தது. அவ்விலக்கியங்களில் வேளாளர்பற்றிய மிகைப்படுத்தப்பட்ட புலமைத்துவ விளையாட்டு உண்டு. ஒல்லாந்தர் காலத்தில் ஆக்கப்பட்ட யாழ்ப்பாண வைபவ மாலையும், தண்டி கனகராயன் பள்ளும், கரவை வேலன் கோவையும் வேளாளரைச் சிறப்பிக்கத் தோன்றியவையே.
அரசியல்:
ஒன்றுபட்ட இலங்கைக்குள் தரகு முதலாளிகளாக மாறிய யாழ்ப்பாண வேளாள ஆதிக்க சக்திகள் இலங்கை அரசியலில் முக்கிய சக்தியாகச் செயற்பட ஆரம்பித்தனர். இன்னொரு பக்கம் ஆங்கிலக் கல்வி கற்ற வேளாள குழுமம் இலங்கை, இந்தியா, தென்னாசியா, தென்கிழக்காசியா, தென்னாபிரிக்கா, மொறி சியஸ் போன்ற இடங்களில் ஆங்கிலேயரின் நம்பிக்கைக்குரிய சேவையாளர்களாக மாறினார்கள்.
சென்ற இடமெங்கும் அதிகாரத்தைப் பேணும் முயற்சியில் அதிகார வர்க்கத்தின் சுரண்டலுக்குத் துணைபோய் தங்கள் மேலாண்மையைப் பேணிக்கொண்டார்கள். இதன் சமூக, அரசியல் விளைவுகள் பின்பு பலமாகவே எதிரொலித்தது.
குறிப்பு 1:
வேளாளர் என்னும் குழுமத்திலே சோழர்காலம் துவக்கம் படைத் தளபதிகளாக, பிரதானிகளாக, நிர்வாகிகளாக வந்தவர்கள் படைவீரர்கள். போர்த்துக்கேய, ஒல்லாந்தர் காலங்களில் முதலிகளாக மாறி நிலமானியம் பெற்றவர்கள் என பல சாதிகள் இணைந்தனர். அவையாவன: மழவர், பாணர், தேவர், செட்டி, கள்ளர், மறவர், அகம்படி, மலையாள அகம்படி (நாயர், தீயர், பணிக்கர்) கணக்கர், மடப்பள்ளி வேளாளர், சீர்பரதர், பட்டினவர், தனக்காரர், தவசிகள், வேளாள சாணார், (சாணாரில் இருபகுதிகள் உண்டு) சிவியார் (சிவியாரில் இருபகுதிகள் உண்டு)
குறிப்பு 2:
கரையார்கள் தொடர்ந்து கடலோடு தொடர்பு கொண்டி ருந்ததால் அவர்கள் கடல் சார்ந்தவர்களாக மாறினார்கள். சில சாதிகள் கரையார் சமூகத்திலும் கலந்தனர். தேவர், சீர்பரதர், பட்டினவர். மயிலிட்டிக் கரையாரின் பூர்வீகம் தேவர்கள் என்று தெரிய வருகின்றது.
குறிப்பு 3:
யாழ்ப்பாண வேளாளரில் இப்போது உட்பிரிவுகள் உண்டு.
1. ஆதிசைவவேளாளர் - பிள்ளைமார்
2. கார்காத்த வேளாளர் - மழவர்
3. மடப்பள்ளி வேளாளர் - மடப்பள்ளி
4. செட்டி வேளாளர் - செட்டி
5. அகம்படி வேளாளர் - அகம்படியார்
குறிப்பு 4:
ஈழத்து வன்னிப தலைவர்களும் பல்வேறு சாதிகளில் இருந்து வந்தவர்களே. வன்னிபம் என்பது பதவிப் பெயரே. மலைய மான்கள், வன்னியர், முக்குவர், படையாட்சி, பாணர் தேவர் போன்றவர்களே வன்னிப பதவிகளை வகித்தனர்.
உசாத்துணை நுhல்கள்:
1. யாழ்ப்பாணக் குடியேற்றம் - முத்துக்குமாரசாமிப்பிள்ளை
2. வையாபாடல்
3. கைலாயமாலை
4. யாழ்ப்பாண வைபவமாலை - மயில்வாகன புலவர்
5. யாழ்ப்பாண வைபவ கெளமுது - க. வேலுப்பிள்ளை
6. யாழ்ப்பாண சரித்திரம் - தொகுப்பு : சி.க. சிற்றம்பலம்
7. யாழ்ப்பாணம் - சமூகம் - பண்பாடு - கருத்துநிலை - பேராசிரியர் கா. சிவத்தம்பி,
8. சிலோன் கசற்றியர்- சைமன் காசிச் செட்டி
9. இலங்கையில் தமிழர் - பேராசிரியர் கா. இந்திரபாலா
10. ஈழத்து இலக்கியமும் வரலாறும் - பேரா. சி. பத்மநாதன்
11. சமூக விஞ்ஞானம் - தொல்குடிகள் - ஆர். பூங்குன்றன்
12. தொல்லியல் நோக்கில் இலங்கைத் தமிழர் பண்பாடு - கலாநிதி வ. புஸ்பரட்ணம்
13. இலங்கையில் தமிழர் ஓர் முழுமையான வரலாறு - கலாநிதி முருகர் குணசிங்கம்
ச.தில்லைநடேசன்
புராதன இலங்கை சரித்திரம்
ப. கணபதிப்பிள்ளை
உள்ளடக்கம்
1.புராதன இலங்கை
2. தோற்றுவாய்
3. சிங்கள இனத்தின் தோற்றம்
4. பரதன் என்னும் தமிழ் அரசன்
5. தமிழ் கூறும் நல்லுலகம்
6. இலங்கையில் தமிழ் மன்னர்களின் ஆட்சி
7. இராவணனும் இராமாணமும்(raaman &raavanan)
புராதன இலங்கை
தற்காலத்தில் இலங்கையில் தமிழர் சிறுபான்மையினராக வாழ்கின்றனர். ஆனால் அதி பூர்வீக இலங்கையில் தமிழர்கள் மாத்திரமே வாழ்ந்து வந்தனர் என்பது வரலாற்று உண்மையாகும். அவர்களது சமயம் சைவசமயமாகவே இருந்தது. இராமாயணம் போன்ற இதிகாச இலக்கியங்கள் வாயிலாககும் புராணங்கள் வாயிலாகவும் இவ்வுண்மை அறியக் கூடியதாக இருக்கின்றது..எனவே இலங்கை தமிழரின் முதுசொத்து எனலாம். இதுயாராலும் மறைக்கவோ மறுக்கவோ முடியாத உண்மையாகும். இந்த உண்மையை வெளிப்படுத:துவதே இந் நூலின் நோக்கமாகும்.
புத்தூரில் பிரசித்த நொத்தாசிசாக விளங்கிய உயர் திரு. வ. நாதர் ஏன்பவரால் வெளியிடப்பட்டுள்ள அகத்தியர் இலங்கை என்னும் நூலில் இந்த உண்மை தெளிவாக்கப்பட்;டுள்ளது. இந்த நூலை மதுரையில் வாழ்ந்த உயர்திரு கந்தசாமிச் செட்டியரே தமக்கு வழங்கியதாக திரு. நாதர் அவர்கள் தமது பதிப்புரையில் குறிப்பிட்டுள்ளார்கள்.'அகத்தியா இலங்கை என்னும் இந்த நூலை உசாத்துணை நூலாகக் கொண்டு புராதன இலங்கை என்னும் இநதப் பக்கம் வெளிவருகின்றது.
இனவெறி பிடித்த சிங்கள ஆட்சியாளர்கள், இலங்கை முழுவதும் தங்களுக்கே உரியதென்றும் தமிழர்கள் கூலிவேலை செய்வதற்காகத் தென்னிந்தியாவில் இருந்து இங்கு கொண்டு வரப்பட்டவர்கள் என்றும் பொய்யான கதைகளைச் சிங்களப் பொதுமக்கள் மத்தியில் பிரச்சாரஞ் செய்து அதன் மூலம் சிங்கள இனவெறியை அவர்களுக்கு ஊட்டி இலங்கையில் உள்ள தமிழர்களை அடக்கி ஒடுக்கி அழித்து விடத் திட்டமிட்டுச் செயற்படுகின்றனர். இவ்வாறான பொய்ப்பிரசாரத்தின் மூலம் இலங்கைத் தமிழர்களை அழித்து ஒழிப்பதைத் தவிர்க்கவும் இலங்கை வாழும் தமிழர்களுக்குச் சிங்களவர்களிலும் பார்க்க உரிமை கூடுதலாக உண்டு என்பதை எமது மக்கள் ஆதாரபூர்வமாக அறிய வைப்பதற்கும் இது போன்ற பக்கங்கள் வெளிவருவது மிக மிக அவசியமாகும். இந்த அவசியத்தை உணர்ந்தே இந்தச் சிறிய இணைய பக்கத்தையும் வெளியிட முன்வந்துள்ளேன். எனவே இந்த இணையப் பக்கத்தை ஈழத்தமிழ் மக்களாகிய நாங்கள் விழிப்படைவோமாகுக... எழுச்சியடைவோமாகுக.
தோற்றுவாய்
அகத்திய முனிவர் இலங்கையின் பூர்விகம் பற்றி இராமனுக்குச் சொல்லுகின்ற பாங்கிலே இதன் மூல நூல் அமைந்தமையால் அதற்கு "அகத்தியர் இலங்கை" எனப் பெயர் சூட்டப்பட்டது.
இந்த நிலப்பரப்பில் பல கண்டங்கள் இருந்தன. அவற்றுள் ஒன்றுதான் தமிழர் கண்டம் என்பதாகும். இதுவே பிற்காலத்தில் தமிழகம் என அழைக்கப்பட்டது.. மிகப் புராதன காலத்தில் தமிழகத்தில் வாழ்தவர்கள் தமிழர்கள் மட்டுமே. ஆட்சி புரிந்த அரசர்கள் தமிழர். அவர்களது நெறி சைவநெறி. மொழி தமிழ். அக்காலத்திலுருந்தே தமிழர்கள் மிக முன்னேற்றமுள்ளவர்களாக விளங்கினார்கள். கமத்தொழில், கைத்தொழில் இரண்டையுமே இரு கண்களாகப் போற்றி வாழ்ந்தார்கள்.
அரசர்களோ நீதி வழுவா நெறிமுறையில் ஆட்சி புரிந்தனர்.மக்களும் தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஓக்கல், தான் என்னும் ழும்பலமும் ஓம்பி வாழ்ந்து வாந்தனர். பிராமணர்கள், அரசர்கள், வைசியர் எனப்படும் வர்த்தகர்கள், வேளாண்மக்கள் எனப்படும் கமக்காரர் ஆகியோர் தம்தம்க்குரிய கடமைகளின்றும் வழுவாது ஒழுகிவந்தனர். அரசனது ஆணைகள் இவற்றுக்கு வழிவகுப்பதாய் அமைந்திருந்தன. இதன் பலனாக மாதம் மூன்று மழை பெய்தது. நீர்வளம் பெருகியது. நிலவளமும் பெருகியது.. அதைதியும் நிலவியது. உணவு உடை உறையுள் ஆகிய மனிதனின் அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டன. பசியால் மெலிபடைபவர்களோ, பிணியால் நலிவடைபவர்களோ மிக மிக அரிதாகவே காணப்பட்டனர். இத்தகையதோர் ஒப்பற்ற சமுதாயம் நிலவிய தமிழகத்தை அவ்வப்போது ஆட்சி புரிந்த தமிழரசர்கள் உருவாகினர்ர்கள்.
இவ்வாறு தமிழகத்தைச் சிறப்பாக ஆட்சி புரிந்த அரசர்களுள் மனு என்னும் அரசனும் ஒருவனாவன். இவன் தமிழன். இந்த மனு அரசனுக்கு தமிழர் வரலாற்றில் முதன்மையானதும் முக்கியத்துவம் வாய்ந்த ஓர் தனி இடம் உண்டு. ஒரு காலத்தில் நெப்போலியன் போர்ன்பாட் என்பவனால் உருவாக்கப்பட்ட சட்டவாக்கங்கள், பிற்காலத்திலும் இக்காலத்திலும் எழுந்த சட்டவாக்கங்களுக்கு எவ்வாறு அடித்தளமாக அமைந்தனவோ அது போலவே புராதன காலத்தில் மனு அரசன் எழுதிய சட்டவாக்கமும் அவனைத் தொடர்ந்து வந்த ஆட்சியாளர்களுக்கும் அவர்களின் சட்டவாக்கங்களுக்கும் அடித்தளமாக அமைந்துள்ளது எனலாம்.
மனுதர்ம சாத்திர நூலும் இவ்வகையில் உருவானதே எனலாம். இந்த மனுசக்கரவர்த்தியானவன் தானுருவாக்கிய நீதி நெறியின் படியே ஆட்சியும் புரிந்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. சாதி வேறுபாடு காட்டுதல் போன்ற அநாகரிகமான சட்டங்கள் அவனது நீதிநூலில் இடம் பெறவில்லை என்பதும், ஆனால் சுயநலவாதிகளும் சாதியின் பெயரால் தம்மைப் பெரியவர்களாகக் காட்டிக் கொண்டவர்களும் அதனால் தம்மை வளர்த்துக் கொண்டவர்களுமே இந்த அநாகரிகமான சட்டத்தை இந் நூலில் புகுத்தி இந் நூலுக்கு இழுக்குத் தேட முற்பட்டனர். இந்த உண்மையை நாம் உணர்ந்து தெளிவு பெற வேண்டும். இந்த மனு சக்கரவர்த்தி தமிழகத்தை நாற்பத்து நான்கு வருடங்கள் ஆட்சி புரிந்தான்.
இந்த மனுசக்கரவர்த்திக்கு 'சமன்" என்னும் புத்திரனும் 'ஈழம்" என்னும புத்திரியும் பிறந்தார்கள். மனுவின் பின் தமிழகம் இந்த இருவராலும் ஆட்சி செய்யப்பட்டு வந்தது;. தென்னகத்தை மகனாகிய சமனும், அவனது சந்ததியினரும், வடபாகத்தை மகளாகிய ஈழமும் அவளது சந்ததியினரும் ஆண்டு வந்தனர். மனுவின் மகளாகிய ஈழம் என்பவளுக்கு குமரி என்று வேறு பெயரும் உண்டு. குமரி என்று அழைக்கப்பட்ட இந்த மனுவின் மகள் ஆட்சி புரிந்த பகுதி குமரிக் கண்டம் எனப்பட்டது. இந்தக் குமரிக் கண்டத்திலேயே இலங்கை நாடு, பாண்டி நாடு, சேர நாடு, சோழ நாடு முதலிய நாடுகள் அடங்குகின்றன. ஈழம் என்னும் அரசி அட்சி புரி;ந்த பகுதியே அவளின் பெயரால் ஈழம்நாடு என்று அழைக்கப்பட்டுக் காலக்கிரமத்தில் ஈழநாடு ஆகியது. இந்த நான்கு மண்டலங்களும் ஒரு காலத்தில் ஒரே நிலப்பரப்பாகவே இருந்தன. இடையில் ஏற்பட்ட கடல்கோள்களே ஈழநாடு என்று அழைக்கப்பட்ட ஈழ மண்டலத்தை ஏனைய மூன்று மண்டலங்களிருந்து பிரித்து விட்டன.
எனினும் ஈழமண்டலமாகிய இலங்iயில் தமிழரே வாழ்ந்து வந்தனர். பிற்காலத்தில்தான் தமிழலரல்லாதோர் இங்கு வந்து குடியேறினர் என்பதனை நாம் மறந்து விடக் கூடாது. வரலாற்றுக்காலத்துக்கு முன்பிருந்தே தமிழர்கள் இலங்கையில் மிகவும் முன்னேற்றம் அடைந்தவர்களாகவும் நாகரீக வளர்ச்சி பெற்றவர்களுமான ஓர் இனமாக வாழ்ந்து வந்தனர்.
தமிழர்கள் பாரம்பரியமாக வாழ்ந்துவந்த குமரிக் கண்டத்தில் உள்ள ஒரு நகரில் கன்னியாகிய குமரி (ஈழம்) ஆட்சி புரிந்தமையால் அந்நகரம் கன்னியாகுமரி என்று அழைக்கப்பட்டது. இக்கன்னியாகுமரி என்னும் பட்டினம் குமரிகண்டத்துக்குச் சிலகாலம் தலை நகராகி விளங்கியது. பிற்காலத்தில் குமரிக்கண்டத்தின் பெரும் பகுதி கடல் கொள்ளப்பட்டது. இக்கடல் கோல்களினால் நிலப்பரப்பு மாத்திரமன்றிப் பல தமிழ் சங்க மண்டபங்கள், அவைகளில் இருந்த இலக்கண இலக்கிய நூல்கள் எல்லாம் சமுத்திரத்துள் ஆழ்ந்து விட்டது;. சமன் ஆண்ட பிரதேசமும் கடலுள் அமிழ்ந்தி விட்டது. மிகுதியான நிலப்பரப்பு பாரத கண்டம் இலங்கை முதலிய பல தேசங்களாக பிரிந்தது.
விஜயன் இலங்கையில் காலடி வைத்த பின்பே இலங்கையில் சிங்கள இனம் தோன்றியது. இந்த விஜயன் யார் ? இவன் இலங்கைக்கு எவ்வாறு வந்தான் என்பன ? பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகின்றது.
சிங்கள இனத்தின் தோற்றம்
வட இந்தியாவில் "லாலா" என்று ஒரு நாடு அதனைச் சிங்கபாகு என்பவன் ஆட்சி புரிந்தான். இவனது தந்தை சிங்கன் என்பவன் ஆவான். சிங்கனைப் பற்றிய பலவித புனை கதைகள் உண்டு. மிருக இராசவாகிய சிங்கமே இவன் என்பது அவற்றுள் ஒன்று. சிங்கத்தில் இருந:து வந்த சந்ததியினரே சிங்களவர் என்றும் சொல்லப்படுகின்றது. இதனாலேயே சிங்கள மக்களின் தேசியக்கொடி சிங்கமாக இருக்கினறதென்றும் சொல்வாரும் உளர். இவையெல்லாம் ஆதாரமற்ற வெறும் ஐதிகங்களே என இவற்றை இவ்வளவில் விட்டு விடுவோம்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள சிங்கபாக ஆசியவம்சத்தை சார்ந்தவன். வடஇந்தியாவில் இமயமலை அடிவாரம் வரை ஒரு காலத்தில் திராவிட இனம் வாழ்ந்து வந்தது என்றும் அந்தத் திராவிடரைத் துரத்திவிட்டு வந்து குடியேறிய நாடோடி மக்களே ஆசியராவர். இவர்கள் மெல்லிய சிவந்த மேனியைக் கொண்டிருந்தனர்.இந்த ஆசியர்கள் ஒரு காலத்தில் இமயபமைப்ப வடக்தே நாடோடிகளாய் கூட்டங் கூட்டமாய் குதிரைகளில் சவாரி செய்து அலைந்து திரிந்தவர்களாவர்.
இவர்களுக்கு நிரந்தரமான வதிவிடங்களோ நிலங்களோ இருக்கவில்லை. இவாகள் அடிக்கடி கைபர்கணவாய் வழியாகத் திடீர் திடீரென இமய மலையின் தென்பகுதிக்குள் நுழைந்து அங்கு வாழ்ந்து வந்த திராவிட மக்களுக்குத் தொல்லை கொடுக்கு அவர்களுது பொருட்களையும் உணவுப்பண்டங்களையும் மந்தைகளையும் அபகரித்து சென்று அதன் மூலம் வாழ்க்கையை நடாத்தி வந்தவர்கள். இவர்களது தொல்லை பொறுக்க முடியாமலே வட இந்தியாவில் வாழ்ந்து வந்த திராவிடமக்கள் மெது மெதுவாகத் தெற்கு நோக்கி நகரத் தொடங்கினர். ஆரியர் திராவிட மக்களைத் துரத்தி விட்டு அவர்கள் வாழ்ந்த பகுதிகளில் வந்து குடியேறினர். தம்மை ஆரியர் எனக்கூறி சிங்களவரும் இதனைத்தான் இங்கு செய்கின்றனர். இந்த அநாகரீகமான மக்களே ஆரியர்.
இத்தகைய ஆரிய வம்சத்தைச் சார்ந்தவன்தான் சிங்கபாகு ஆவான். அவனின் மைந்தனே விஜயன் ஆவான்.விஜயனின் சந்ததியினரே சிங்களவர்கள். எனவே சிங்களவரும் ஆரியர்களே. தமிழர் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள். இந்த வகையிலேதான் இலங்கையில் வாழ்கின்ற ஆரியர்களாகிய சிங்களவர்களுக்கும் திராவிடர்களாகிய தமிழர்களுக்கும் ஒத்துப் போவதில்லை என்பது புலனாகின்றது.
சிங்கபாகுவின் மைந்தனாகிய விஜயன் இனவரசனாக இருந்த பொழுது அவனுக்கு எழுநூறு பேர் தோழர்கள் இருந்தார்களாம். விஜயன் இழவரசனாக இருந்தமையால் அவனுக்கு எல்லா வசதிகளும் கிடைத்தன. அதனாலே அவனுக்கு எழுநூறு பேர் தோழராயினர். இந்த விஜயனும் இந்த தோழர்களும் நினைத்தவற்றையேல்லாம் செய்தார்கள். நாகரீக சமுதாயத்திற்கு ஒவ்வாத காரியங்களை எல்லாம் இவர்கள் மிகமிக விருப்பமாகச் செய்தார்கள்.
கண்டதே காட்சி கொண்டதே கோலம் என ஆள்வாரிலி மாடுகளாகத் திரிந்தார்கள். தட்டிக் கேட்க யாரும் இல்லை. தந்தை சிங்கபாகுதான் தட்டி கேட்க வேண்டியவன். அவனாலும் தட்டிக் கேட்க முடியவில்லை. அவன் அந்த நாட்டின் அரசனாக இருந்தமையினால் அந்த நாட்டின் மக்களின் நன்மைக்காகத் தன் மகனேன்றும் பராது அவனையும் அவனது தோழர்கள் எழுநூறு பேரையும் நாடுகடத்த விரும்பினான். அவர்கள் அனைவரையும் ஒரு பாய் கப்பலில் ஏற்றி வங்கக் கடலில் அலையவிட்டான். அக்கப்பல் காற்றினால் அள்ளுண்டு அவர்களைக் கொணடு வற்து எனது ஈழத்திருநாட்டில் மாந்தை நகரில் ஒதுக்கிவிட்டது.
வந்தாரை வரவேற்று உபசரிக்கும் தமிழர்களின் பண்பாட்டுக்கமைய வந்தாரை வாழவைத்தாள் ஒருத்தி. அவள்தான் இலங்கையில் அந்நாள் அரசி குவேனி என்பாள். அவள் ஒரு தமிழ் அரசி, அவள் வந்தவர்களுக்கு வேண்டிய வசதிகளையும் செய்து கொடுத்தாள். விஜயனின் அழகில் மயங்கி தன்னையே கொடுத்து விட்டாள். அத்தோடு இலங்கையில் தமிழர்க்கு இருந்த இறைமையையும் கூடவே தரைவார்த்துக் கொடுத்து விட்டாள். இத் தொடர்பினால் விஜயன் இலங்கையின் இலங்கையின் ஆட்சியுரிமையை இலகுவில் பெற்றுக் கொண்டுவிட்டான். ஆட்சியுரிமையை தந்திரமாக கைப்பற்றிக் கொண்ட விஜயன் தன் காரியம் முடிந்ததும், தனது அதிகாரதுக்கு உதவிய மனைவி குவேனியையும் பிள்ளைகளையும் அடித்து துரத்திவிட்டான்.
குவேனியைத் துரத்திய பின் இவனும் இவனது தோழர்கள் ஏழுநூறு பேரும் பாண்டிய நாட்டிலுள்ள நாயக்க வம்சத்தைச் சேர்ந்தவர்களும் அழகுடையவர் ஆகிய தமிழ்ப்பெண்களை வரவழைத்துத் திரமணஞ் செய்த கொண்டனர். இவர்களது சந்ததியினரே இன்று இலங்கையில் வாழ்கின்ற சிங்களவர் ஆவர். இம்மட்டில் இவர்கள் நின்று விட வில்லை. அன்று அதிகாரத்தைத் தம்வசம் வைத்திருந்த விஜயனும் அவனது தோழர்களினது சந்ததியினரும் ஏற்கனவே இங்கு வாழ்ந்து கொண்டிருந்த தமிழர்களோடு திருமணம் செய்து கலந்து கொண்டனர்.
இவர்களது சந்ததியாரும் சிங்களவராயினர். இவ்வகையிலும் இலங்கையில் தமிழர் சிறுபான்மையினராகப்பட்டனர். இவ்வாறு தமது தனித்துவத்தையும் பண்பாட்டையும் கைவிட்டுச் சிங்களவர்களாக மாறிய தமிழர்களே தமது தனித்துவத்தையும் கலாச்சாரத்தையும் விட்டுக் கொடுக்காமல் வாழ்ற்து வருகின்ற உண்மையான தமிழர்களுக்கு எதிராகத் கிளம்பி இலங்கை சிங்களவருக்கு மாத்திரமே உரியதென்று விதண்டாவாதம் பேசுகின்றனர். கூப்பாடு போடுகின்றனர். எஞ்சிய தமிழர்களையும் சிங்களவர் ஆக்க முனைகின்றனர். இந்த உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இலங்கையின் பூர்வீக குடிகள் தமிழர்கள். இலங்கையின் சுதேசிகள் தமிழர்கள். விஜயன் வழி வந்தவர்கள் அந்நியர். பரதேசிகள். இத்தகையோர் இலங்கைக்குத் தாம் மாத்திரமே உரிமையுடையோம் என்றும், தமிழர்களுக்கு எவ்வித உரிமை இல்லை என்றும், சிங்களப் பொது மக்களிடையே பிரச்சாரஞ் செய்து வருகின்றனர். தமிழர்கள், சிங்களவர்கள் பகைவர்கள் என இள உள்ளங்களில்லாம் அழுத்தமாக உறையும்படி பிரசாரம் செய்கின்றனர். துட்டகைமுனுவின் தாயாகிய விகாரமகாதேவியும் இதனையே செய்தாள். இதனால்தான் துட்டகைமுனு தமிழருக் கெதிராகக் கிளர்ந்து எழுந்தான்.
தமிழர் படையுடன் நேர் நின்று யுத்தம் புரிய முடியாத துட்டகைமுனு கபட நாடகமாடி மனுநீதி தவறாது செவ்வனே ஆட்சி புரி;ந்த தமிழரசனாகிய எல்லாளனைக் கொன்றான். இளைஞனாகிய துட்டகைமுனு கிழவனாக இருந்த எல்லாளனைத் தனிப் போருக்கு அழைத்துப் போர்புரியும் வேளை எல்லாளனது பட்டத்து யானை போரில் கால் தடுக்கி விழ ஈட்டியால் குத்திக் கொன்றான். இத்தகைய வாரலாற்று உண்மையை இன்றைய எம் நிலைகளோடு ஒப்பிட்டு நோக்கிச் செயற்பட வேண்டியது ஈழத்தமிழராகிய எம் கடனாகும்.
பரதன் என்னும் தமிழ் அரசன்
குமரியின் சந்ததியில் தோன்றிய தமிழ் அரசர்களுள் பரதனும் ஒருவன். இந்தப் பரதன் குமரிகண்;டத்தை நாற்பது வருடங்களாக ஆட்சி புரிந்தான். ஒரு தாயானவள் தனது பிள்ளைகளை எல்வளவு கரிசனையுடனும் அன்புடனும் பராமரிப்பாளோ அது போலவே பரதனும் தனது குடிமக்களையும் பராமரித்தான். இதனால் அவனது குடிமக்கள் அவளை மிகவும் நேசித்தார்கள். அது மாத்திரமன்றி இக் குமரிகண்டமானது பரதனது திறமையான ஆட்சி முறையினால் பலவகைகளிலும் சிறப்புற்று விளங்கிற்று. இக்காரணங்களினால் அவன் ஆட்சி புரிந்த நிலப்பரப்பாகிய குமரிக் கண்டமே பரதகண்டமென வழங்கப்படலாயிற்று.
இப்பரத கண்டத்தில் வாழ்ந்த தமிழ் மக்களை அந்நி நாட்டினர் பலவாறு அழைத்தனர் அவை பரதர், நாகர், இயக்கர், அரக்கர், இராட்சதர், பூதர், அசுரர், அவுணர், இடிமபர், கருடர், முனிவர், சித்தர்;, கந்தருவர், வானரர் என்பனவாகும். இராமாயணத்தில் தமிழர்களை வானரர் (குரங்குகள்) என்றும் இராட்சதர் என்றும் பழித்துரைத்தனர். அனுமான் சுக்கிரீவன் வாலி போன்ற பலம் பொருந்திய திறமைமிக்க போராளிகளை குரங்குகளின் அரசர்கள் என்றும் இலங்கையை ஆண்ட ஒப்புயர்வற்ற சிறந்த அரசனாகிய இராவணன் தமிழன் என்ற காரணத்தால் அவனையும் அவனது இனத்தினரையும், நரமாமிசம் புசிக்கின்ற இராட்சதர் என்றும் பழித்துரைத்தனர். உண்மை அவ்வாறு அன்று. இராமன் இலக்குமணன் போன்ற திராவிடர்கள் (தமிழர்கள்) பலசாலிகளாகவும் அறிவாளிகளாகவும் சித்துக்களில் வல்லவர்களாவும் விளங்கினர் என்பதே உண்மை.
உண்மையில் இவர்கள் அவர்கள் குறிப்பிடுவது போன்று குரங்குகளோ, இராட்சதர்களோ அல்லர். சிறப்புற்று விளங்கிய தமிழர்களோயாவர். இவ்வாறு அநிநியர்களால் பல்வேறு பெயர்கள் கொண்டு அழைக்கப்பட்ட போதிலும் எல்லோரும் சமத்துவம் உடைய தமிழர்களோயாவர்.
அன்று வாழ்ந்த தமிழ் மக்கள் தம்மிடையே உயர்வு தாழ்வு காட்டுவதில்லை. ஒருவருடைய பிறப்பினைக் கொண்டு அவரின் உயர்வு தாழ்வுகளைக் கணிக்காது அவரவரின் சிறப்பினைக் கொண்டே, செயற்பாடுகளைக் கொண்டே கணித்தனர்;. 'இட்டார் பெரியோர், இடாதார் இழிகுலத்தோர்"என்னும் ஒளவை வாசகஙகளும் இவ்வகையில் எழுந்தனவே. செயற்கரினவற்றைச் செய்பவர்கள் பெரியோர் என்னும் செயறகரயன செய்ய முடியாதவர்கள் சிறியோர் என்றும் வள்ளுவன் வாய்மொழியும் இதனையே தெளிவுபடுத்துகின்றது.
தமிழ் கூறும் நல்லுலகம்
மனித இனம் முதன் முதலாக தோன்றிய இடம் குமரிக் கண்டம் என்று அறியக்கிடக்கின்றது. இந்தக் குமரிக் கண்டத்தில் வாழ்ந்த மக்கள் பேசிய மொழி தமிழ் என்றும் அவர்களிடமிருந்தே எனைய இனத்தவர்கள் சீர்திருத்ததைக் கற்றுக் கொண்டனர் என்றும் கூறுவர்; அக்காலத்தில் வாழ்ந்த தமிழர்கள் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டிருந்தார்கள் என்றும் அவற்றில் அவர்கள் வல்லவர்களாக இருந்தார்கள் என்றும் சொல்லப்படுகின்றது.
அவையாவன: வீடு கட்டுதல், கோயில் கட்டுதல், சிற்ப வேலை செய்தல், குளம் வெட்டுதல், நூல் நூற்றல், சிலை செய்தல், குடைசெய்தல், கோயில்த்தேர், போர்த்தேர், வாயுத்தேர்;, அக்கினித்தேர், ஆகாயவிமானம், கப்பல், முதலியன செய்தல், ஆகாயமார்க்கமாகச் செல்லுதல், பாடசாலை, வைத்தியசாலை தமிழ்ச்சங்கம் முதலியன அமைத்தல், இலக்கியம், இலக்கணம், வானசாத்திரம், நீதி சாத்திரம், தொலைவிலுணர்தல், கடவுள் வணக்கம், தவம், கற்பு, விரதம், வியாபாரம், பஞ்சாயம், நீதிமன்றம், குடியாரசாட்சி, தெரிவுச்சீட்டு, கணிதம், சோதிடம், கூடுவிட்டுக் கூடுபாய்தல், ஒரு மனிதன் போல் தேகம் எடுத்தல், ஆகாய யுத்தம், கடல் யுத்தம் முதவியவற்றை நன்றாக அறிந்திருதார்கள். தமிழ் மொழியில் மிகவும் சிறந்த இலக்கிய நூல்களும் இலக்கண நூல்களும் கணித நூல்களும், தமிழ் வேதங்களும் தமிழ் சரித்திர நூல்களும் இன்னும் பல சிறந்த நூல்களும் ஆரம்பத்திலேயே இருந்தன.
பாண்டிநாடு சோழநாடு, சேரநாடு முதலிய தமிழ் நாடுகளில் உள்ள தமிழர் முற்காலத்தில் இலங்கையில் பிறந்து வாழ்ந்தபடியால் இலங்கை அந்த நாடுகளின் தமிழருக்குச் சொந்தம். இலங்கை மலைவளமுடைய நாடாக இருந்தமையால் போதிய மழை பொழிந்து பல ஆறுகள் பாய்கின்ற ஆற்று வளமுடையதாக விளங்கியமையால் செழிப்பான தேசமாக விளங்கியது. பெருமளவு நெல் விளைவிக்கப்பட்டது.
அத்துடன் பொன், முத்து இரத்தினம், சங்கு ஆகியவையும் அதிகம் காணப்பட்டன. இவ்வாறு சிறப்பாக விளங்கிய இலங்கையில் முற்காலத்தில் வாழ்ந்த தமிழர்கள் மிகவும் செல்வந்தராயிருந்தனர். இதனால் ஏனைய நாடுகளில் வாழ்ந்த தமிழர்கள் இலங்கையில் வசிக்க மிகவிரும்பினார்கள்.
இடவசதியற்ற பொழுதெல்லாம் அவர்கள் இலங்கையில் வந்து குடியேறிக் கொண்டே வந்தார்கள். இலங்கைத் தமிழர் பாண்டியநாடு முதலிய மற்றைய தமிழ் நாடுகளின் தமிழரோடும் அதிபூர்வ காலந்தொடங்கி இன்றுவரைக்கும் ஆலயதரிசனம், தீர்த்தமாடுதல், கல்வி பிறப்பு இறப்புச் சம்பந்தமான கொண்டாட்டங்கள், திருவிழா, கலியாணம் மற்றுவிவாகம் முகலிய வைபவங்களைக் கொண்டாடிக் கொண்டும், போக்குவரவு பண்ணிக் கொண்டும் வருகிறார்கள். பாண்டியநாடு முதலிய தமிழ்த் தேசங்களின் தமிழர்கள் திருக்கேதீச்சரம், திருக்கோணேச்சரம், நகுலேஸ்வரம், கதிர்காமம் முன்னேசுவரம் முதலிய சைவாலயங்களைத் தரிசிப்பதற்கும் தீர்த்தமாடுவதற்கும் விவாகத்திற்கும் இலங்கைக்குப் போக்குவரவு செய்து கொண்டேயிருக்கின்றார்கள்.
சுரரை ஆண்ட அரசன் சுரேந்திரன். அசுரரை ஆண்ட அரசன் அசுரேந்திரன். இதனால் சயம்பனுக்கு அசுரேந்திரன் என்னும் வேறொரு பெரும் இடப்பட்டது. தமிழரசனாகிய இச்சயம்பன் இலங்கையை முப்பத்து மூன்று வருடங்களாக ஆண்டிருந்தான். சயம்பனுக்குப் பின்பு அவனுடைய மருமகனாகிய யாளிமுகன் என்னும் தமிழன் அரசனாகி பத்து வருடங்கள் ஆட்சி புரிந்து இறந்தான். இவனுக்கு பின்பு பல தமிழரசர்கள் நெடுங்காலமாக இலங்கையை ஆண்டனர். இவர்களது ஆட்சிக் காலத்தில் திரிகோணமலை, இலங்காபுரம், சிங்கன்நகர், பணிபுரம், திருகோயில், முருகன்துறை கலியாணி முதலிய நகரங்கள் தலைநகரங்களாக விளங்கின.
யாளிமுகனுக்குப்பின் ஏதி என்னும் தமிழரசன் முருகபுரத்தைத் தலைநகராக்கி அங்கிருந்து இலங்கை முழுவதையும் ஆண்டான். முருகபுரம் என்னும் நகரில் முருகன் என்னும் தமிழ்ச்சேனாததிபதியின் வீரர்களில் ஒருவனாகிய விசயன் என்பவன் மாணிக்கங்கையில் முருகேசுவரம் என்னும் முருகனாலயத்தைக் கட்டுவித்தான். முருகேசுரத்துக்கு, கதிர்காமம், கதிர்வேலன்மலை, கார்த்திகேயபுரம், ஏமகூடம், மாணிக்கநகர்., கந்தவேள்கோயில் என்னும் மறுபெயர்களும் உண்டு.
பயை என்னும் தமிழரசகுமாரத்தியை ஏதி விவாகஞ் செய்து வித்துக்கேசன் என்னும் புத்திரனைப் பெற்றான். இவன் இருபத்தெட்டு வருடங்கள் ஆட்சி புரிந்தான். வித்துகேசன் சிவனோளிபாதத்தைத் தலைநகராக்கி, நாகதீவு முழுவதையும் ஆண்டான். முருகள் என்னும் சேனைத்தலைவன் காங்கேசன்துறையில் ஒரு சிவன்கோவிலைக் கட்டுவித்தான்.
வித்துசேசன் இருபத்தொன்பது வருடங்களும், மூன்று மாதங்களும் இலங்கையை ஆண்டான். இவனுக்குப் பின் இவனது மகன் சுகேசன் என்பவன் மணிபுரம் என்னும் கதிரவன் மலையைத் தலைநகராக்கி இலங்கையை ஆட்சி புரிந்தான். ஆதிகாலத்தில் மயனால் கட்டப்பட்ட திருக்கேதீசுவரம், முனீசுவரம், நகுலேசுவரம் என்னும் சிவாலயங்களை இவன் பழுது பார்த்து அவற்றுக்கு அநேக நகைகளையும் நிலங்களையும், கொடுத்தான். மாந்தை நகருக்கு அருகில் உள்ள பாலாவியாற்றங்கரையில் திருக்கேதீசுவரம் மாயவன் ஆற்றுக்குச் சமீபத்தில் முனீசுவரம், காங்கேசனுக்கு அண்மையில் நகுலேசுவரம் ஆகிய சிவாலயங்கள் கட்டப்பட்டன.
இலங்கையில் தமிழ் மன்னர்களின் ஆட்சி
சுகேசனின் ஆட்சி
சுகேசன் தெய்வதி என்னும் அரச குமாரியை விவாகஞ் செய்து மாலியவான், மாலி என்னும் புத்திரர்களைப் பெற்றான். சுகேசனின் ஆட்சி மிகவும் மெச்சத்தக்தாக அமைந்திருந்தது. இவன் கிராமங்கள் தோறும் ஆலயங்களை அமைப்பித்தான். பல வீதிகளைப் புதிதாக உருவாக்கினான். பழைய வீதிகளைப் புதிப்பித்தான், காடுகளை அழித:து நாடுகளாக்கினான். விவசாயத்தை விருத்தியடையச் செய்தான்.
குளங்கள், கால்வாய்கள் பல வெட்டியும் புதுப்பித்தும் பயிர்ச் செய்கைக்கு உதவியளித்தான். நூல் நூற்றல், ஆடை நெய்தல் ஆகிய கைத்தொழில்களையும் விருத்தி பண்ணினான். வைத்தியரையும் வைத்திய நூல்களையும் ஆதரித்ததோடு பல வைத்தியசாலைகளிலும் நிறுவினான். பல பாடசாலைகளை அமைத்தான். பல தமிழ்ச்சங்கங்களையும் உருவாக்கினான். இவன் காலத்தில் தமிழ் மொழியில் எல்லாத் துறைகளிலும் நல்ல நல்ல நூல்கள் எழுந்தன. நீதி பரிபாலனமும் செவ்விதாய் அமைந்திருந்தது. சுகேசன் நாற்பத்தொரு வருடங்களும் ஏழுநாட்களும் ஆட்சி புரிந்த பின் தனது மூத்த புத்திரனாகிய மாலியவானை இலங்கைக்கு அரசனாக்கி, காட்டுக்கு சென்றான்.
மாலியவான் ஆட்சி
தமிழ் அரசனாகிய மாலியவான் நாகதீவுக்கு அரசனாகி இலங்காபுரம் என்னும் நகரத்தை அழகாக கட்டுவித்து, அதைத் தலைநகராக்கி அங்கிருந்து இலங்கை என்னும் நாகதீவை ஆண்டான். இவன் கட்டுவித்த அரண்மனைகளும் மாடமாளிகைகளும் கூட கோபுரங்களும் விலையுர்ந்த இரத்தினக் கற்களாலும் தங்கத்தாலும் அலங்கரிக்கப்பட்டன. இவனது முடியின் மீது பத்துக் கிரீடங்கள் அமைந்திருந்தன. இவனுடைய சிங்காசனமும் வாளும் முடியும் செங்கோலும் கட்டிலும் நவரத்தினங்களாலும் முத்துகளாலும் தங்கத்தாலும் அலங்கரிக்கப்பட்டு விளங்கின. அக்காலத் தமிழர்களில் பலர் எல்லா வசதிகளும் ஒருங்கே அமைந்த பல அடுக்கு மாளிகைகளில் வாழ்ந்தனர்.
இவனது முடியை அலங்கரித்துக் கொண்டிருந்த பத்து கிரீடங்களும் பத்து நாடுகளுக்கு இவன் அதிபதி என்பதை எடுத்து காட்டுகின்றன. இவன் இருபத்தொரு வருடங்கள் இலங்கையை மகோன்னதமாக ஆட்சி புரிந்து வந்தான். மாலியவான் இறந்த பின்பு அவனுடைய தம்பியாகிய சுமாலி என்பவன் ஆட்சி புரிந்தான். இவன் மாந்தையிலிருந்தும் இலங்காபுரத்தில் இருந்தும் அரசான்டான். சுமாலி கேதுமதியை மணந்து ஒரு மகளைப் பெற்றேடுத்தான். அவளின் பெயர் கைகேசி என்பதாகும். சூரியப் பிரகாசம் என்னும் ஆகாய விமானத்தை அவன் வைத்திருந்தான்.
சுமாலியின் ஆட்சி
முன்னையவர்களது ஆட்சி போன்று அத்துனை சிறப்பாக அமையாமையால் அவனால் ஐந்தரை வருடங்களும் முன்றரை மாதங்களுமே ஆட்சி புரிய முடிந்தது. மக்கள் கிளர்ச்சி செய்து அவனை சிங்காசனத்தில் இருந்து நீக்கி விட்டனர். இவனது ஆட்சியில் வெறுப்படைந்த தமிழ்மக்கள் பாண்டி நாடு, சேரநாடு, சோழ நாடு முதலிய தமிழ் நாடுகளில் சென்று குடியேறினர். சுமாலிக்குப்பின் அரசாட்சிக்குரிய கைகேசி சிறு குழந்தையாய் இருந்த படியால் இலங்கையை ஆழ அரசனில்லாதிருந்தது. இதனால் வச்சிரவாகு என்பவன் தனக்கும் இயக்கப் பெண்ணாகிய தேவகன்னி என்பவளுக்கு பிறந்த புத்திரனாகிய வைச்சிரவணானை இலங்கைக்கு அரசனாக்கினான். வச்சிரவாணனுக்கு குபேரன் என்னும் மறு பெயரும் உண்டு.
குபேரன் ஆட்சி
குபேரன் அரசானான பின்பு அவனது தாய் வழியைச் சேர்ந்த பல இயக்க குடிகள் இலங்கையில் வந்து குடியேறினார்கள். இவர்களும் தமிழர்களே. நாகரிகத்திலும் கல்வியிலும் இயக்கர் என்னும் தமிழர் மிகவுஞ் சிறந்தவர்களாய் இருந்தார்கள். இயக்கரும் தமிழரும் பேசிய மொழி தமிழேயாகும். பண்டைக்காலத்தில் வரன் என்பவன் புலத்தியவனைப் பெற்றான். புலத்தியன் குணவதியை மணந்து வச்சிரவாகுவைப் பெற்றான். இந்த வச்சிரவாகு குபேரனுடைய தந்தையவான். இந்தக் குபேரன் இலங்கையை நீதியாக ஆண்டான். இவன் புட்பக விமானம் என்னும் ஆகாய ஊர்தியை வைத்திருந்தான்.
இராவணனும் இராமாணமும்
இராவணன் வரலாற்றில் ஒரு விதமாகவும் இலக்கியத்தில் ஒரு விதமாகவும் எடுத்து காட்டப்படுகின்றான். இலக்கியத்தை ஆக்குகின்ற புலவர் தமது விருப்பு வெறுப்புக்களையும் கொள்கைகளையும் அவ்விலக்கியத்தில் புகுத்திவிடுவது வழக்கம். கற்பனையில் கதாபத்திரங்களை அமைத்து அதில் கருத்துகளை புகுத்துவதில் எவ்வித தவறும் இல்லை. ஆனால் வரலாற்றில் நல்ல குண இயல்பு உடைய ஒருவனை இலக்கியத்தில் தீய குண இயல்பு உடையவனாக திரித்து இலக்கியம் ஆக்கும் போதுதான் சிக்கல் ஏற்படுகின்றது. வெறும் இலக்கிய இரசனையோடு இலக்கியத்தைப் படிப்பவர்களுக்கு இந்த கபடங்கள் புலப்படுவதில்லை.
அவ் இலக்கியத்தில் வருகின்ற அணிகள், நயங்கள், கற்பனைகள் இவைகளே புலப்படுகின்றன. இவ்வாறு இலக்கிய ஈடுபாடு கொண்டவர்கள் இலக்கிய ஆசிரியர் ஒரு பாத்திரத்தை எவ்வாறு சிருட்டிக்கிறாரோ, அவ்வாறே அதனை உண்மையாக ஏற்றுக் கொள்கின்றார்கள்.
அத்தகைய நிலமைதான் எமது இராவணனுக்கும் ஏற்பட்டுள்ளது. இராமாணத்தை நன்கு சுவைத்த ஒருவரிடம் போய் இராவணன் நல்லவன் காமுகன் அல்லன் என்று கூறினால் ஏற்றுக் கொள்ளவே மாட்டார். உண்மை இதுதான். வடக்கே வாழ்ந்த ஆரியருக்கும், தெற்வே வாழ்ந்த திராவிடற்கும் இருந்த இயல்பான பகையுணர்வே இராமாயணமாகும். இராமாயண காலத்தில் எல்லா வகையிலும் திரவிடராகிய தமிழர் மேம்பட்டு விளங்கினர்.
எனவே அவர்களை அழிக்க அல்லது அடக்க நடந்த போரே இராம இராவண யுத்தமாகும். தமிழகத்தில் இயல்பாக இருந்த குறைபாடாய் பதவி ஆசை, காட்டிக்கொடுத்தல் ஆகிய குணங்களால் இவர்களுக்குள்ளேயே ஒருவரை ஒருவர் மோதவிட்டு இறுதியில் தாம் பயணடைந்த கதையே இராமாயணம். எனவே தமிழராகிய நாம் இராமாயணத்தை ஏற்றுக் கொள்ளவும் கூடாது. படிக்கவும் கூடாது. இராவணேஸ்வரன் என்று போற்றப்படுகின்ற சிறந்த சிவபக்தனான இராவணனை தூஷிப்பது சிவ தூஷனையாகும். இத்தகைய இராமாயணத்தை சைவக் கோவில்களிலோ, தமிழ் மக்கள் மத்தியிலோ பிரசங்கிக்க கூடாது. தமிழர் பாடநூலில் இராமாயணம் இடம்பெறலாகாது.