தமிழுக்கு அமுதென்று பேர், அந்ததமிழ், இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர் !

Monday, June 28, 2010

வண்ண விளக்குகளின் ரகசியம்


Light
ஒளி உமிழும் டையோடுகள் (LED) என்பவை மின்னோட்டம் பாயும்போது ஒளியை உமிழும் தன்மை உடையவை. இவை குறைமின்கடத்திகளால் ஆனவை. மின்னியல் சாதனங்களில் இந்த விளக்குகள் நீலநிற அல்லது பச்சைநிற ஒளியை உமிழ்கின்றன. பாஸ்பரஸ் பூச்சு பூசப்பட்டால் வெண்மை நிற ஒளியைத்தரக்கூடியவை. இந்த விளக்குகளில் காலியம் நைட்ரைடு (GaN) என்னும் வேதிப்பொருள் பயன்படுகிறது. முப்பது ஆண்டுகளுக்கு முன்புதான் காலியம் நைட்ரைடு உருவாக்கப்பட்டது.

இரண்டு அங்குல தடிமனுள்ள விலையுயர்ந்த நீலக்கல்லில் காலியம் நைட்ரைடு சேர்மத்தை பொதிந்து வளர்க்கும் தொழில்நுட்பம் இதுவரை நடைமுறையில் இருந்தது. இதனால் இந்த விளக்குகளின் விலை மிகவும் அதிகம். ஆனால் புதிய கண்டுபிடிப்பின்படி ஆறு அங்குல தடிமனுள்ள சிலிகான் தட்டில் பத்துமடங்கு காலியம் நைட்ரைடு சேர்மத்தை வளர்க்க முடியும். சிலிகான் விலைகுறைவான தனிமம் என்பதால் உற்பத்தி செலவு பத்தில் ஒரு பங்காக குறையும் வாய்ப்பு இருக்கிறது.

ஒளிஉமிழும் டையோடுகளை குறைந்தசெலவில் தயாரிக்கும் தொழில்நுட்பம் தற்போது கண்டறியப்பட்டுள்ளதால் இன்னும் ஐந்தாண்டுகளில் விளக்குகளுக்கான மின்கட்டணத்தில் முக்கால்பங்கு சேமிக்கலாம் என்கிறார் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பேராசிரியர் காலின் ஹம்ப்ரிஸ்.

ஒளி உமிழும் டையோடுகளின் விலை பத்தில் ஒரு பங்காக குறையும்போது ஒளி உமிழும் டையோடுகளைப் பயன்படுத்திய விளக்குகளின் விற்பனை நிச்சயமாக அதிகரிக்கும். விளைவாக, நமது மின்கட்டணத்தில் முக்கால் பங்கு குறைந்துபோகும் என்கிறார் காலின் ஹம்ப்ரிஸ்.

அதாவது மின்சார உபயோகத்தில் நான்கில் ஒருபங்கு சிக்கனம் ஏற்படுமாம். இப்போது உள்ள மின் உற்பத்தி நிலையங்களைக்கூட மூடவேண்டி வருமாம். நம்முடைய மின்வெட்டு அமைச்சருக்கு இது நிச்சயம் நல்ல செய்திதான். ஆனால் இந்தக்கனவு நனவாவதற்கு அவர் ஐந்து வருடங்கள் காத்திருக்கவேண்டுமே! யாருக்கு அந்த யோகம் அடிக்கப்போகிறது என்பதுதான் தெரியவில்லை.

காலியம் நைட்ரைடு சேர்மத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட ஒரு ஒளி உமிழும் டையோடு விளக்கு ஒரு லட்சம் மணிநேரத்திற்கு எரியக்கூடியது. அதாவது 60 ஆண்டுகள் வரை தொடர்ந்து அந்த விளக்கு எரியும். இவற்றில் பாதரசம் இல்லை. எனவே சுற்றுச்சூழலில் மாசு ஏற்படுத்தும் சிக்கலும் இல்லை. மேலும் காலியம் நைட்ரைடு ஒளி உமிழும் விளக்குகளை தேவைப்படும்போது பிரகாசமாகவோ, மங்கலாகவோ எரியச்செய்துகொள்ளலாம்.



Read more: http://therinjikko.blogspot.com/2009/05/blog-post_9593.html#ixzz0sCjJ4MwM

நிலாவில் குடியேறுவதில் என்ன சிக்கல்?

நூறு நபர்களை சந்திரனில் குடியமர்த்த என்ன செலவாகும்? 15 பில்லியன் டாலர்கள் செலவாகுமாம்.



ஒரு மனிதன் ஓர் ஆண்டில் சாப்பிடும் உணவின் எடை 450 பவுண்டுகள். 100 பேர்களுக்குத் தேவையான உணவை சந்திரனுக்கு கொண்டு செல்ல அதிகம் செலவாகும் என்பதால் சந்திரனிலேயே உணவை விளைவித்துக்கொள்ள முடியுமா? முடியும்.



விவசாயம் செய்வதற்கு கார்பன், நைட்ரஜன், ஆக்சிஜன், ஹைட்ரஜன், பொட்டாசியம், பாஸ்பரஸ் ஆகிய தனிமங்கள் தேவை. இந்த தனிமங்களை ஒருமுறை சந்திரனுக்குக் கொண்டு சென்று விவசாயம் செய்துவிட்டால் போதுமாம். சந்திரனில் குடியிருக்கும் மனிதர்களின் கழிவுகளில் இருந்து மறு சுழற்சி முறையில் அடுத்தடுத்த சாகுபடிகளுக்கு இந்த தனிமங்களை பெற்றுக் கொள்ளலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்



காற்றடைத்த குடியிருப்புகள்தான் தொடக்கத்தில் பயன்படுத்தப்படுமாம். செராமிக் மற்றும் உலோகங்களைப் பயன்படுத்தி வீடுகளை அமைக்க ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.



சந்திரனில் மின்சக்தி தட்டுப்பாடு இருக்காது போல் தோன்றுகிறது. சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் மின்சாரமும், ஹைட்ரஜன் ஆக்சிஜன் சேர்க்கையால் பெறப்படும் மின்சாரமும் தடையின்றி கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. சந்திரனில் கிடைக்கக்கூடிய யுரேனியத்திலிருந்து அணுமின்சக்தி பெறவும் வாய்ப்பு இருக்கிறது.



இவ்வளவு வசதிகள் இருந்தும் சந்திரனில் மனிதன் குடியேற இன்னும் என்ன தடை?



முதல் குடியிருப்பை தொடங்குவதில்தான் தடை.



சந்திரனுக்கு போகும் மனிதனின் எடை 200 பவுண்டுகள்.



முதன்முதலாக உணவிற்காக கொண்டு செல்லப்படும் தனிமங்கள் 500 பவுண்டுகள்.



தங்குமிடமும், கருவிகளும் 1,000 பவுண்டுகள்.



உற்பத்தி செய்யும் கருவிகள் 1,000 பவுண்டுகள்.



ஏறத்தாழ ஆள் ஒன்றுக்கு 3000 பவுண்டு வீதம் 100 பேருக்கு 300,000 பவுண்டு எடை சந்திரனுக்கு கொண்டு செல்லப்படவேண்டும். ஒரு பவுண்டு எடையை சந்திரனுக்கு சுமந்து செல்ல 50,000 டாலர்கள் செலவு பிடிக்கிறது. ஆக, 15 பில்லியன் டாலர் இருந்தால் சந்திரனில் நூறுபேர்கள் கொண்ட ஒரு காலனி அமைப்பதைப் பற்றி சிந்திக்கலாம்.



செலவுக்கணக்கு இத்துடன் முடிந்து விடவில்லை. விண்வெளி நிலையத்தை ஏற்றி இறக்குதல், ஆட்களைத் திரட்டுதல், பயிற்சியளித்தல், நிர்வாகம், விலைவாசி ஏற்றத்தாழ்வுகள், அனாமத்து செலவினங்கள் என்று எல்லா செலவுகளையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் பலநூறு பில்லியன் டாலர்கள் செலவழித்தால் தான் சாத்தியப்படும்.



அதனால்தான் தாமதம்.
Loading...
[*] [/*]

சோனியால் புளு ரே மார்க்கெட் உயரும்

சிடி, டிவிடிக்களை அடுத்து, இனி நம்மிடம் பரவலாகப் பயன்படுத்தப்படப் போவது புளு ரே டிஸ்க்குகளே. புளு ரே ஆடியோ விசுவல் சாதனங்களுக்கு இந்தியாவில் சரியான மார்க்கட்டைத் தரும் வகையில், சோனி இந்தியா நிறுவனம் தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்த சாதனங்களில் பல மாடல்களை அறிமுகப்படுத்துகிறது. இவற்றின் தொடக்க விலை ரூ.9,990 ஆக இருக்கும். இந்த சாதனங்களுடன் புளு ரே டிஸ்க்கில் 500க்கும் மேற்பட்ட மூவிக்களையும் சோனி தருகிறது.

 

புளு ரே டிஸ்க் பிளேயர்ஸ், ஹோம் தியேட்டர் சிஸ்டம்ஸ், பிளே ஸ்டேஷன் 3 மற்றும் VAIO ஆகியவை இந்த வரிசையில் நமக்குக் கிடைக்க இருக்கின்றன. இவை, ஹை டெபனிஷன் படங்களையும், தெளிவான ஆடியோக்களையும் தரும். மேலும் இவற்றைப் பயன்படுத்தி இன்டர்நெட் இணைப்பினையும் பெறலாம். எனவே படங்களைப் பார்த்து ரசிக்கும்போதும், இசையைக் கேட்டு பரவசப்படும் போதும், கேம்ஸ் விளையாடி மகிழும் போதும் மற்றும் இவை அனைத்தையும் ரெகார்ட் செய்து இயக்கிப் பார்க்கும் போதும், நமக்கு புளு ரே தொழில் நுட்பம் உடன் இருக்கும்.

அதன் மூலம் ஹை டெபனிஷன் உலகம் நமக்குக் கிடைக்கும். அடுத்த நிதி ஆண்டிற்குள், புளு ரே சாதனங்கள் மார்க்கட்டில் 60% பங்கினை, சோனி இந்தியா நிறுவனம் கைப் பற்ற முயற்சிகளை எடுக்கிறது. இவற்றை விற்பனை செய்திடும் 4,000 மையங்களை, இந்தியா முழுவதும் திறக்க இருக்கிறது.

கம்ப்யூட்டரில் வேலையா கவனம் தேவை

இன்றைய அன்றாட வாழ்க்கையில் கம்ப்யூட்டர்கள் நம் பணியினைப் பங்கு கொண்டு, நம் நடவடிக்கைகளை எளிதாக்கி வருகின்றன. இதனால் அவற்றுடனே நம் முழுப்பொழுதும் செலவழிகிறது.



அலுவலகம் ஒன்றின் சொகுசுப் பொருளாகக் கம்ப்யூட்டர் கருதப்பட்ட எண்ணம் மறைந்து, அடிப்படைச் சாதனமாக இது மாறிவிட்டது. எப்படி திருமணமான ஒருவர் தன் மனைவி அல்லது கணவனுடன் பல வழிகளில் அட்ஜஸ்ட் செய்து வாழப் பழகிக் கொள்கிறாரோ, அதே போல கம்ப்யூட்டர்கள், அவை அமைக்கப்பட்டுள்ள சூழ்நிலை ஆகியவற்றுடனும் நாம் அட்ஜஸ்ட் செய்து கொள்ள வேண்டியதிருக்கிறது. இல்லை என்றால் வாழ்க்கையில் பிரச்சினைகள் வருவது போல, நம் அன்றாட அலுவல் வாழ்க்கை மட்டுமின்றி, சொந்த நலனிலும் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இவற்றை எப்படி தவிர்க்கலாம் என்பது குறித்து இங்கு காணலாம்.

ஒரு நாளில் பெரும்பாலான நேரம் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து பணியாற்றுகிறோம். பணி முடிந்து வீட்டுக்குத் திரும்புகையில், சற்று சோர்வுடனே இருக்கிறோம். "உங்களுக்கென்ன ஏ.சி. அறையில் தானே வேலை பார்க்கிறீர்கள்' என்று மற்றவர்கள் சொன்னாலும், நம் உடம்பில் ஏற்படும் சோர்வும் வலியும் அதனால் தான் என்று என்றாவது உணர்ந்திருக்கிறீர்களா! உங்கள் மணிக்கட்டு வலியும், கண்களில் எரிச்சலும், முதுகில் எங்கோ சிறிய வலியும், இடுப்பிற்குக் கீழாக, உட்காரும்போதும் எழும்போதும் ஏற்பட்டு மறையும் தீவிரமான வலியும், கம்ப்யூட்டர் பயன்படுத்துவதால்தான் என்று உங்களுக்குத் தெரியுமா! நாம் அமைத்துக் கொள்ளும் கம்ப்யூட்டர் அலுவலகச் சூழ்நிலைகளே இதற்குக் காரணங்கள். இவற்றைக் கொஞ்சம் இங்கு கவனிக்கலாம்.

முதலில் நாம் பார்க்க வேண்டியது, எப்போதும் நாம் உற்றுப் பார்த்துப் பணி புரியும் கம்ப்யூட்டர் மானிட்டர் தான். அது அமைக்கப்படும் விதம் தான். ஒரு மானிட்டர், அது சி.ஆர்.டியாக இருந்தாலும், எல்சிடி ஆக இருந்தாலும், உங்கள் முகத்திற்கு இணையாக அல்லது சற்றே தாழ்வாக இருக்க வேண்டும். மானிட்டரை பார்ப்பதற்காக உங்கள் தலையை சிறிது தூக்க வேண்டியதிருக்கையில் கழுத்தில் டென்ஷன் ஏற்படும்; உங்கள் முதுகுப் பகுதியின் மேல் புறத்தில் வலி உண்டாகும். இந்நிலை தொடரும் பட்சத்தில் நிச்சயமாய் இந்த வலிகள் நிலையாக இருக்கத் தொடங்கும். எனவே இதனை தவிர்ப்பதுடன் கீழ்க்காணும் நிலைகளையும் உருவாக்குங்கள். உங்கள் கண்களுக்கும் திரைக்கும் இடையேயான தூரம் 18 அங்குலமாக இருக்கட்டும். இது உங்கள் மானிட்டர் திரையின் அகலத்தைப் பொறுத்து சற்று ஏறத்தாழ இருக்கலாம்.

ஸ்கிரீனை சற்று சாய்த்துவைப்பதாக இருந்தால் அது உங்கள் கண்களின் பார்வைக் கோட்டில் இருக்க வேண்டும். திரையின் ரெசல்யூசன் உங்கள் பார்வைக்கு உகந்ததாக இருக்க வேண்டும். எனவே அதனை அவ்வப்போது மாற்றி எது கண்களுக்கு உகந்தது என்று தீர்மானித்து அதனையே வைத்துக் கொள்ளவும். மேலும் மானிட்டர் திரையில் எதற்காக அத்தனை ஐகான்கள். சற்று குறைக்கலாமே. அவ்வப்போது தேவைப்படாததை, பயன்படுத்தாததை நீக்கலாம்; அல்லது ஒரு போல்டரில் போட்டு வைக்கலாம். ஸ்கிரீன் மீது வைத்துப் பயன்படுத்தப்படும் ஸ்கிரீன் பில்டர் உங்கள் கண்களில் எரிச்சல் உண்டாக்குவதைத் தடுக்கும். உங்கள் சிஸ்டத்தில் நீங்கள் பயன்படுத்தும் கலர் ஸ்கீம் மிக முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. பலவகையான வண்ணக் கலவைகளை அமைத்துப் பார்த்து எது உகந்ததாக உள்ளதோ அதனை அமைக்கவும். வண்ணம் மட்டுமின்றி எழுத்துவகையினையும் உறுத்தாதவகையில் அமைக்கவும்.

மானிட்டரைப் பார்த்துவிட்டோம். இனி உங்கள் கைகளுக்குள் கம்ப்யூட்டருக்கான மந்திரக் கோலாகத் தவழும் மவுஸைப் பார்க்கலாம். எளிதில் அதனை அடைந்து கைகளுக்கு வலி எடுக்காவண்ணம் பயன்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். உடம்பைச் சாய்க்காமல் அதனை சுழற்றிப் பயன்படுத்தும் வகையில் அருகே அதிக இடத்துடன் இருக்க வேண்டும். கீ போர்டு வைக்கப்பட்டிருக்கும் சிறிய இழுவை டிராவில் வைப்பதனை அறவே தவிர்க்கவும்.
மவுஸ் கையாளும் அதே அளவில், அல்லது அதற்கும் மேலாக நாம் கீ போர்டினைப் பயன்படுத்துகிறோம். உங்கள் கீ போர்டினைச் சரியாக அமைப்பது உங்கள் மணிக்கட்டு மற்றும் முழங்கை வலியை வரவிடாமல் தடுக்கும். கீ போர்டில் டைப் செய்கையில் உங்களுடைய மணிக்கட்டு நேராக இருக்க வேண்டும். முழங்கைகள் 90 டிகிரி கோணத்தில் வளைந்திருக்க வேண்டும். இது உங்கள் நாற்காலியின் நிலையைச் சார்ந்து அமைக்கப்பட வேண்டும்.

இவை எல்லாம் கம்ப்யூட்டருடன் இணைந்தவை. இவற்றை நீங்கள் எங்கிருந்து இயக்குகிறீர்கள். நிச்சயமாய் உங்கள் நாற்காலிகள் தான். பல ஆயிரம் அல்லது லட்சம் செலவழித்து கம்ப்யூட்டர்களை வாங்கி, அவற்றை ஏசி அறையில் வைத்திடும் அலுவலகங்கள், அதனை இயக்குபவர்கள் பழைய வகை நாற்காலியிலேயே அமரட்டும் என விட்டுவிடுவார்கள். அங்குதான் பிரச்சினையே தொடங்குகிறது. நீங்கள் அமரும் நாற்காலி எப்படி இருக்க வேண்டும்? உங்களுடைய பாதம் தரையில் நன்கு பதிந்திருக்கும் வகையில் நாற்காலி அமைக்கப்பட வேண்டும். இதனால் உங்கள் தொடைகளின் பின்புறத்தில் வலி ஏற்படாமல் இருக்கும். நாற்காலியின் குஷன் மிருதுவாக மட்டுமின்றி உறுதியாகவும் இருக்க வேண்டும். அமரும் சீட் தரைக்கு இணையாக இருக்க வேண்டும். சரியாக அமருவதற்காக முன்பக்கம் அல்லது பின்பக்கம் சாயக்கூடாது. நாற்காலி நன்றாக தரையில் அமர்ந்திட நான்கு அல்லது ஐந்து கால்களில் இருக்க வேண்டும்.

அடுத்ததாகச் சுற்றுப்புறச் சூழ்நிலை. ஒரேயடியாக வெளிச்சம் அல்லது குறைவான வெளிச்சம் என இருவகைகளில் ஒளியூட்டப்பட்ட கம்ப்யூட்டர் அறைகளே இப்போது உள்ளன. எங்கு பாய்ண்ட் இருக்கிறதோ அங்கு மின்விளக்குகளை அமைத்துவிடுகின்றனர். இது தவறு. இருக்கின்ற விளக்கு ஒளி போதும் என்ற எண்ணம் எப்போதும் ஏற்படக்கூடாது. முடிந்தால் குழல் விளக்கு ஒளி இருக்க வேண்டும். விளக்கொளி உங்கள் தோள் மற்றும் தலைக்கு மேலாக இருக்க வேண்டும்; ஆனால் சரியாக உங்கள் பின்னாலிருந்து ஒளி வரக்கூடாது. உங்கள் மானிட்டர் திரைக்குப் பின்னாலிருந்து ஒளி வரும் வகையில் அமைக்கக்கூடாது. பொதுவாக நிலையாக அமைக்கப்பட்டிருக்கும் விளக்குகளை மாற்றுவது கடினம். எனவே மானிட்டரின் நிலையை மாற்றலாம். மானிட்டரை சிறிது இறக்கி ஏற்றலாம். அல்லது விளக்கு ஒளியை வடி கட்டி கிடைக்குமாறு ஷேட்களை அமைக்கலாம். ஒளியைப் படிப்படியாகக் குறைக்கும் டிம்மர் ஸ்விட்ச் கொண்டு ஒளியைத் தேவைப்படும் அளவிற்குக் குறைத்து அமைக்கலாம். நேரடியாக ஒளி கிடைக்காமல் மறைமுகமாகக் கிடைப்பது இன்னும் நன்றாக இருக்கும்.

பொதுவாக நம்மைப் பார்க்க வருபவர்கள் இல்லாமல், பக்கத்து சீட் நண்பர்களிடம் பேசாமல் பணியாற்ற கம்ப்யூட்டர் உதவுகிறது. இருப்பினும் பல கம்ப்யூட்டர் அறைகளில் தேவையற்ற சத்தம் இருந்து கொண்டே இருக்கிறது. கம்ப்யூட்டருடன், அதன் புரோகிராமுடன் நாம் ஒரு சவாலுடன்தான் பணியாற்று வோம். அந்நிலையில் கூடுதலாகச் சத்தம் இருந்தால் நம் பணி ஒழுங்கு முறை கெட்டுவிடும். சரியான ஒலி நமக்கு பணியில் உற்சாகத்தைக் கொடுக்கும். சிறிய அளவில், மனதிற்கு அமைதி அளிக்கும் இசையை, அறையில் கசிய விடலாம். அல்லது அவை எதுவும் இல்லாமல், அமைதியைப் பேணலாம். இது அங்கு பணியாற்றுபவர்களின் விருப்பத்தைப் பொருத்து அமைக்கப்பட வேண்டிய விஷயமாகும்.

செலவு மிச்சம் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பல அலுவலகங்களில் ஏர் கண்டிஷனிங் இல்லாமல் மின்விசிறி மட்டும் கொண்டு சில கம்ப்யூட்டர் அலுவலகங்கள் இயங்குகின்றன. இந்தியாவின் நம்பர் ஒன் என்று பெயரெடுத்த சாப்ட்வேர் நிறுவனத்தில், செலவைக் குறைப்பதற்காக இன்றும் இரவில் ஏர் கண்டிஷனர் இயங்குவதை நிறுத்திவிடுவதாக என் நண்பர் ஒருவர் கூறினார். இது மோசமான ஒரு நிலையை அங்கு பணியாற்றுபவர்களுக்கு மட்டுமின்றி, மேற் கொள்ளப்படும் வேலைக்கும், அங்கு பயன் படுத்தப்படும் கம்ப்யூட்டர்களுக்கும், அதில் கையாளப்படும் டேட்டாவிற்கும் உருவாக்கும். எனவே வெப்பம் மிகுதியான நம் ஊரில் கூடுமானவரை கம்ப்யூட்டர்கள் பயன்படும் இடத்தில் குறைந்த வெப்பம், அல்லது சற்று மிதமான குளிர் சீதோஷ்ண நிலை இருப்பது உகந்தது.

அதே நேரத்தில், அறைக்குள் வெளியிடப்படும் குளிர் காற்று நேரடியாகக் கம்ப்யூட்டர்கள் மீதோ, அல்லது அவற்றை இயக்குபவர் மீதோ படுவதனையும் தவிர்க்க வேண்டும். இறுதியாகவும் மிகவும் முக்கியமானதாகவும் நாம் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம், நீங்கள்தான். நேராக நிமிர்ந்து உட்காருங்கள். முதுகை வளைத்து மானிட்டரை உற்று நோக்கி உட்காராதீர்கள். சரியாக அமர்வது பின் முதுகு வலியைத் தவிர்ப்பது மட்டுமின்றி உங்கள் மூளைக்கு ஆக்ஸிஜனைச் சீராக அனுப்பும். வசதியான ஆடைகளை அணியுங்கள். உடம்பைப் பிடிக்கும் ஆடைகள் உங்கள் வேலைப் பண்பினை மாற்றி தொய்வை ஏற்படுத்தும். அதே போல உங்கள் செருப்பு மற்றும் ஷூக்கள் கால்களைக் கடிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

இறுதியாக நீங்கள் வேலை வேலை என்று அலைந்து கம்ப்யூட்டரே கதி என்று கிடப்பவரா? அப்படியானால் சற்று சோம்பேறியாக இருப்பதில் தவறில்லை. இடை இடையே நாற்காலியிலிருந்து எழுந்து வெளியே வந்து சற்று உடம்பை வளைத்து நிமிர்த்தி அதனை உற்சாகப்படுத்துங்கள். இதனால் உங்கள் மூளைச் சோர்வு நீங்கி உற்சாகம் ஏற்படும். உணர்ச்சிப் பாதிப்பு ஏற்படாது.

மாறிவரும் வாழ்க்கைச் சூழ்நிலைகளில் சிலவற்றை நம்மால் மாற்ற முடியாது. மின்சார ட்ரெயினில் கூட்டத்தில் பயணிப்பதைத் தவிர்க்க முடியாது. சிறிது நேரமாவது பஸ் நிறுத்தத்தில் நிற்பதை மாற்ற முடியாது. பயணம் செய்கையில் அடுத்தவர் மூச்சு நம் தோள்களிலும் கழுத்திலும் படுவதை விரட்ட முடியாது. கண் தெரியாத பிச்சைக்காரர் டப்பா மைக் வைத்துக் கொண்டு கர்ண கடூரமாக பாடுவதைத் தடுக்க முடியாது. இரு சக்கர வாகனத்தில் செல்கையில் முன் செல்லும் வாகனப் புகையை சுவாசிப்பதைத் தடுக்க முடியாது. சுட்டெரிக்கும் வெயிலில் பச்சை விளக்குக்காய் சிக்னலில் காத்திருக்கும் சிக்கலை தவிர்த்திடவே முடியாது. ஆனால் கம்ப்யூட்டரில் பணியாற்றுகையில் மேலே சொன்ன அனைத்து வழிகளையும் கடைப் பிடித்து நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ள முடியும். செய்வோமா!

இலங்கையில் தொகுக்கப்பட்ட அகராதிகள்


6/11/2010

பத்தொன்பதாம் நூற்றாண்டில் இலங்கையிலே பல அகராதிகள் தொகுக்கப்பட்டன. இதற்குக் காரணம் புரட்டஸ்தாந்து மதப்பிரசாரகர்களின் வருகையாகும். தமிழைக் கற்றுக் கொள்வதற்கு அகராதிகள் அதிகம் தேவைப் பட்டன. செய்யுள் வழக்கை மட்டுமன்றி பேச்சுத் தமிழையும் புரிந்துகொள்ள வேண்டிய தேவை பிறநாட்டுத் தொண்டர்களுக்கு இருந்தது.

அகராதியின் வளர்ச்சியை மூன்று நிலைகளிற் காணலாம். முதலில் தமிழ்ச் சொற்களுக்குத் தமிழிலேயே பொருள் கூறும் அகராதி. அடுத்து ஆங்கிலச் சொற்களுக்கு தமிழில் பொருள் கூறும் அகராதி. இறுதியாக தமிழ்ச் சொற்களுக்குத் தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் கூறும் அகராதி.

மேனாட்டவரின் அகராதிப் பணி இலங்கைத் தமிழ் அறிஞர்களையும் இத்துறையில ஆர்வம் கொள்ளச் செய்தது. தமது சொந்த முயற்சியால் அகராதிகளைத் தொகுத்து தமிழ் கற்கும் மாணவர்களுக்கு துணைபுரிந்தனர்.

அருஞ்சொல் அகராதிகள் பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே ஆரம்பமாகிவிட்டன. டாக்டர். எஸ். எவ். கிறீன் என்னும் அமெரிக்க சமயத் தொண்டர் முதன்முதலாக ஆங்கில மருத்துவப் பதங்களை நிரைப்படுத்தி விளக்கமளித்தார். பின்னர் பல்வேறு துறைகளுக்கு அருஞ்சொல் அகராதிகள் தொகுக்கப்பட்டு வருகின்றன. பத்தொன்பதாம் நூற்றாண்டில் அகராதிக் கலை யாழ்ப்பாணச் சமுதாயத்தில் செல்வாக்குப் பெற்று விளங்கியது என்பதனையும் இன்றுவரை அது வளர்ந்து வருகின்றது என்பதனையும் விளக்குவதாக இவ்வாய்வுரை அமையும்.
.

தமிழ் மருத்துவமும் சித்தர்களும்


6/11/2010

தமிழ் மருத்துவத்தில் முக்கியமாக சித்தர்கள் கருதப்படுகிறார்கள். இவர்கள் வடமொழியில் இருந்த மருத்துவக்கருத்துக்களை தமிழில் மாற்றியமைப்பதில் வல்லமை பெற்றிருந்தனர். சித்த மருத்துவம் தமிழ் மருத்துவமாக மாறுவதற்கு காரணமான சித்தர்களை சித்தமருத்துவ நூல்கள் பட்டியலிடுகின்றன. இந்நூல்களில் சில சித்தர்கள் விடுபட்டும், சிலர் சேர்க்கப்பட்டும் மொத்தமாக பதினெண் சித்தர்கள் என வகைப்படுத்தியிருக்கிறார்கள். இதனை பதினெண்சித்தர் நாடிசாஸ்திரம், பதினெண்சித்தர் ஞானக்கோவை, பதினெண்சித்தர் மூலிகை அகராதி என்பன சுட்டிக்காட்டுகின்றன. சித்தர்கள் குரு சீட பரம்பரையாக தமிழ் மருத்துவத்தை மனவழியில் போதித்தனர். இதில் பாடல்களே கூடுதலாகக் காணப்படுகின்றன.

பிற்காலத்தில் சித்தமருத்துவர்கள், பண்டிதர்களால் பனையோலையில் எழுதப்பட்டு தற்போது நூலுருவிலும், இலத்திரனியல் ஊடகங்களிலும் மாற்றப்பட்டு வருகின்றன. இச்சித்தர்கள் அரசஆதரவையோ அல்லது தழிழ்ச்சங்களின் ஆதரவையோ பெறாமல் தமது ஆத்மீக பலத்தை நம்பி மனித சமுதாயத்துடன் இணைந்து வாழாமல் காட்டில், மலைக்குகைகளில் வாழ்ந்து தமிழ் மருத்துவத்தை வளர்தெடுத்தனர். பதினெண்சித்தர்களில் அகத்தியர் முருகனிடம் தமிழ் கற்றவர் என அறியப்படுகிறது. அகத்தியர் 21000, அகத்தியர் பரிபூரணம், அகத்தியர் ஆயுர்வேதம், அகத்தியர் நயனவிதி, அகத்தியர் குணபாடம், அகத்தியர் இரத்தினச்சுருக்கம் -300, அகத்தியர் வைத்தியகாவியம் 1200 எனப் பல்வேறு நூல்களை இயற்றியுள்ளார். இலங்கையில் அகத்தியரின் வைத்தியமுறைகளைப் பரப்பியவர் புலத்தியர் சித்தர் எனவும் அவர் யாழ்ப்பாணத்தில் சமாதியானார் எனவும் கூறப்படுகிறது. இலங்கையில் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய இடங்களில் தமிழ் பரம்பரை வைத்தியர்கள் தமது மருத்துவ மூலநூலாக அகத்தியர் மருத்துவ காவியங்களை இன்றும் பயன்படுத்துகிறது ஆய்வு மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

போகர் எனும் சித்தர் முருகப்பெருமானின் அருள் பெற்றவர். போகர்-700,போகர் நிகண்டு, போகர் சரக்கு வைப்பு- 800 எனப் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். இரசவாதக்கலையில் வல்லுனரான இவர் பழனியில் பாடாணங்களைக் கொண்டு பழனிசாமியை பிரதி~;டை செய்வித்தார். இலங்கையில் கதிர்காமத்திலும் முருகனுக்கு இயந்திரம் செய்வித்தார்.

இதன் பலனான இலங்கையில் கதிர்காமம், நல்லூர், செல்வச்சந்நிதி ஆகிய இடங்களிலும் ஈழத்துச் சித்தர் பரம்பரை உருவாக வழிவகுத்தது. யாழ்ப்பாணம் நல்லூர் தேரடியில் செல்லப்பாவுசுவாமிகள், யோகசுவாமிகள் என்போhரின் அருள் பாலிப்பால் யாழ்ப்பாணத்து தமிழ்மருத்துவம் சிறப்பிடம் பெறுகிறது. யோகசுவாமிகள் அருள் வாக்குப்பெற்று கந்தர்மடம், வண்ணார்பண்ணை, கஸ்தூரியார் வீதியில் பல சித்த வைத்தியர்கள் பிரபல்யமாக வைத்திய சிகிச்சை புரிந்தார்கள். இதில் கஸ்தூரி முத்துக்குமாரு வைத்திய பரம்பரை முக்கியமானதாகும்.

இன்றும் நல்லூர் கோவிலை அண்டிய பகுதியில் குடையிற்சுவாமிகள் வைத்திய நிலையம் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. திருமூலரால் எழுதப்பட்ட திருமந்திரத்தில் சித்த மருத்துவக்கருத்துக்கள் உடலின் தோற்றம், கருவுற்பத்தி, ஆரோக்கிய வாழ்வு என தமிழ் மருத்துவகருத்துக்களை எழுதியுள்ளார். இன்றும் விஞ்ஞான ஆராய்ச்சியில் கண்டு கொள்ள முடியாத மருத்துவ சிந்தனைகளைக் கூறியிருப்பது அவரின் மெய்ஞான, விஞ்ஞான அறிவின் வளர்ச்சியை கோடிட்டுக் காட்டுகிறது. இராமதேவர் அரேபியா சென்று தமிழ் மருத்துவத்தைப் பரப்பியதால் அதிலின்று மேலைத்தேய மருத்துவம் வளர்வதற்கு அடிகோலினார். யூகி முனிவர் ஒரு மருத்துவ மேதையாவார் யூகிசிந்தாமணி, யூகிவாதகாவியம் என்ற 3000 பாடல்களைப் பாடியுள்ளார். இவ்வாறு புலிப்பாணி என்பவர் புலிப்பாணி 500, புலிப்பாணி பலதிரட்டு என பல்வேறு நூல்களை இயற்றியுள்ளார்.

முடிவாக சித்தர்கள் சமஸ்கிருத மொழியில் இருந்த வைத்திய காவியங்களை தமிழில் எழுதுவித்ததார்கள். வைத்தியத்தில் மருந்துகளை கண்டுபிடித்து நோய்ப்பிணி தீர்ப்பதில் வல்லுனர்களாக விளங்கினார்கள். பாடல்களாக ஆரோக்கிய வாழ்விற்கு நோய்அணுகாவிதிகளை பாடியுள்ளார்கள். இந்தியா,இலங்கை, ஆபிரிக்கா, சீனா, எகிப்து,அரேபியா நாடுகளில் தமிழ்மருத்துவத்தை பரப்பியுள்ளார்கள். குருசிஷ்ய முறையினூடாக சிஷ்யர்களுக்கு மருத்துவத்தைப்புகட்டி மருத்துவ வளர்ச்சிக்கு உதவியுள்ளார்கள். மருத்துவ முறையில் காயகற்பமுறைகளை கண்டு பிடித்து நரை,மூப்பு,பிணி வராது பாதுகாப்பதில் வெற்றியும் கண்டுள்ளார்கள். முடிவாக தமிழ்மருத்துவ வளர்ச்சியில் சித்தர்கள் பெரும்பங்காற்றியுள்ளார்கள்.

விளக்கச்சொல்:- காயகற்பம், நரை, மூப்பு, பிணி

மருத்துவர்:- மிதிலைச்செல்வி -ஸ்ரீகாந்தன் சிரேஷ்ட விரிவுரையாளர் தரம்-1, சித்த மருத்துவப்பிரிவு, திருகோணமலைவளாகம்,

கிழக்குப் பல்கலைக்கழகம்., இலங்கை.

தமிழ் மருத்துவமும் சித்தர்களும்


6/11/2010

தமிழ் மருத்துவத்தில் முக்கியமாக சித்தர்கள் கருதப்படுகிறார்கள். இவர்கள் வடமொழியில் இருந்த மருத்துவக்கருத்துக்களை தமிழில் மாற்றியமைப்பதில் வல்லமை பெற்றிருந்தனர். சித்த மருத்துவம் தமிழ் மருத்துவமாக மாறுவதற்கு காரணமான சித்தர்களை சித்தமருத்துவ நூல்கள் பட்டியலிடுகின்றன. இந்நூல்களில் சில சித்தர்கள் விடுபட்டும், சிலர் சேர்க்கப்பட்டும் மொத்தமாக பதினெண் சித்தர்கள் என வகைப்படுத்தியிருக்கிறார்கள். இதனை பதினெண்சித்தர் நாடிசாஸ்திரம், பதினெண்சித்தர் ஞானக்கோவை, பதினெண்சித்தர் மூலிகை அகராதி என்பன சுட்டிக்காட்டுகின்றன. சித்தர்கள் குரு சீட பரம்பரையாக தமிழ் மருத்துவத்தை மனவழியில் போதித்தனர். இதில் பாடல்களே கூடுதலாகக் காணப்படுகின்றன.

பிற்காலத்தில் சித்தமருத்துவர்கள், பண்டிதர்களால் பனையோலையில் எழுதப்பட்டு தற்போது நூலுருவிலும், இலத்திரனியல் ஊடகங்களிலும் மாற்றப்பட்டு வருகின்றன. இச்சித்தர்கள் அரசஆதரவையோ அல்லது தழிழ்ச்சங்களின் ஆதரவையோ பெறாமல் தமது ஆத்மீக பலத்தை நம்பி மனித சமுதாயத்துடன் இணைந்து வாழாமல் காட்டில், மலைக்குகைகளில் வாழ்ந்து தமிழ் மருத்துவத்தை வளர்தெடுத்தனர். பதினெண்சித்தர்களில் அகத்தியர் முருகனிடம் தமிழ் கற்றவர் என அறியப்படுகிறது. அகத்தியர் 21000, அகத்தியர் பரிபூரணம், அகத்தியர் ஆயுர்வேதம், அகத்தியர் நயனவிதி, அகத்தியர் குணபாடம், அகத்தியர் இரத்தினச்சுருக்கம் -300, அகத்தியர் வைத்தியகாவியம் 1200 எனப் பல்வேறு நூல்களை இயற்றியுள்ளார். இலங்கையில் அகத்தியரின் வைத்தியமுறைகளைப் பரப்பியவர் புலத்தியர் சித்தர் எனவும் அவர் யாழ்ப்பாணத்தில் சமாதியானார் எனவும் கூறப்படுகிறது. இலங்கையில் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய இடங்களில் தமிழ் பரம்பரை வைத்தியர்கள் தமது மருத்துவ மூலநூலாக அகத்தியர் மருத்துவ காவியங்களை இன்றும் பயன்படுத்துகிறது ஆய்வு மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

போகர் எனும் சித்தர் முருகப்பெருமானின் அருள் பெற்றவர். போகர்-700,போகர் நிகண்டு, போகர் சரக்கு வைப்பு- 800 எனப் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். இரசவாதக்கலையில் வல்லுனரான இவர் பழனியில் பாடாணங்களைக் கொண்டு பழனிசாமியை பிரதி~;டை செய்வித்தார். இலங்கையில் கதிர்காமத்திலும் முருகனுக்கு இயந்திரம் செய்வித்தார்.

இதன் பலனான இலங்கையில் கதிர்காமம், நல்லூர், செல்வச்சந்நிதி ஆகிய இடங்களிலும் ஈழத்துச் சித்தர் பரம்பரை உருவாக வழிவகுத்தது. யாழ்ப்பாணம் நல்லூர் தேரடியில் செல்லப்பாவுசுவாமிகள், யோகசுவாமிகள் என்போhரின் அருள் பாலிப்பால் யாழ்ப்பாணத்து தமிழ்மருத்துவம் சிறப்பிடம் பெறுகிறது. யோகசுவாமிகள் அருள் வாக்குப்பெற்று கந்தர்மடம், வண்ணார்பண்ணை, கஸ்தூரியார் வீதியில் பல சித்த வைத்தியர்கள் பிரபல்யமாக வைத்திய சிகிச்சை புரிந்தார்கள். இதில் கஸ்தூரி முத்துக்குமாரு வைத்திய பரம்பரை முக்கியமானதாகும்.

இன்றும் நல்லூர் கோவிலை அண்டிய பகுதியில் குடையிற்சுவாமிகள் வைத்திய நிலையம் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. திருமூலரால் எழுதப்பட்ட திருமந்திரத்தில் சித்த மருத்துவக்கருத்துக்கள் உடலின் தோற்றம், கருவுற்பத்தி, ஆரோக்கிய வாழ்வு என தமிழ் மருத்துவகருத்துக்களை எழுதியுள்ளார். இன்றும் விஞ்ஞான ஆராய்ச்சியில் கண்டு கொள்ள முடியாத மருத்துவ சிந்தனைகளைக் கூறியிருப்பது அவரின் மெய்ஞான, விஞ்ஞான அறிவின் வளர்ச்சியை கோடிட்டுக் காட்டுகிறது. இராமதேவர் அரேபியா சென்று தமிழ் மருத்துவத்தைப் பரப்பியதால் அதிலின்று மேலைத்தேய மருத்துவம் வளர்வதற்கு அடிகோலினார். யூகி முனிவர் ஒரு மருத்துவ மேதையாவார் யூகிசிந்தாமணி, யூகிவாதகாவியம் என்ற 3000 பாடல்களைப் பாடியுள்ளார். இவ்வாறு புலிப்பாணி என்பவர் புலிப்பாணி 500, புலிப்பாணி பலதிரட்டு என பல்வேறு நூல்களை இயற்றியுள்ளார்.

முடிவாக சித்தர்கள் சமஸ்கிருத மொழியில் இருந்த வைத்திய காவியங்களை தமிழில் எழுதுவித்ததார்கள். வைத்தியத்தில் மருந்துகளை கண்டுபிடித்து நோய்ப்பிணி தீர்ப்பதில் வல்லுனர்களாக விளங்கினார்கள். பாடல்களாக ஆரோக்கிய வாழ்விற்கு நோய்அணுகாவிதிகளை பாடியுள்ளார்கள். இந்தியா,இலங்கை, ஆபிரிக்கா, சீனா, எகிப்து,அரேபியா நாடுகளில் தமிழ்மருத்துவத்தை பரப்பியுள்ளார்கள். குருசிஷ்ய முறையினூடாக சிஷ்யர்களுக்கு மருத்துவத்தைப்புகட்டி மருத்துவ வளர்ச்சிக்கு உதவியுள்ளார்கள். மருத்துவ முறையில் காயகற்பமுறைகளை கண்டு பிடித்து நரை,மூப்பு,பிணி வராது பாதுகாப்பதில் வெற்றியும் கண்டுள்ளார்கள். முடிவாக தமிழ்மருத்துவ வளர்ச்சியில் சித்தர்கள் பெரும்பங்காற்றியுள்ளார்கள்.

விளக்கச்சொல்:- காயகற்பம், நரை, மூப்பு, பிணி

மருத்துவர்:- மிதிலைச்செல்வி -ஸ்ரீகாந்தன் சிரேஷ்ட விரிவுரையாளர் தரம்-1, சித்த மருத்துவப்பிரிவு, திருகோணமலைவளாகம்,

கிழக்குப் பல்கலைக்கழகம்., இலங்கை.

செம்மொழி மாநாட்டில் காமன்கூத்து கலைஞர்கள்


6/18/2010

எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை தமிழகத்தின் கோவையில் இடம் பெறுவுள்ள உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் 24 ஆம் திகதி இடம் பெறவுள்ள கலாசார நிகழ்வில் மலையகத்தின் நாட்டுக்கூத்தான காமன்கூத்து இடம் பெறவுள்ளது. மலையக மக்கள் கலை அரங்கின் ஏற்பாட்டில் இடம் பெறவுள்ள இந்தக்காமன் கூத்தில் மலையகத்தைச்சேர்ந்த 14 கலைஞர்கள் பங்கு பற்றவுள்ளனர்.

உலகத்தமிழ்ச்செம்மொழி மாநாட்டின் ஆய்வரக்கத்தலைவர் பேராசிரியர் கா.சிவத்தம்பியின் ஆலோசனைக்கேற்ப மலையகக்கவிஞர் சு.முரளிதரனின் சிபாரிசுக்கேற்ப மலையகத்தைச்சேர்ந்த ஆசிரியர் பிரான்ஸிஸ் ஹெலனின் நெறியாள்கையில் காமன் கூத்து இந்தச்செம்மொழி மாநாட்டில் மேடையேற்றப்படவுள்ளது.

இந்த நிகழ்வில் பங்குபற்றவுள்ளவர்களின் அறிமுகத்தினையும் அவர்களின் இங்கு தொகுதி வழங்குகின்றேன்.

பிரான்ஸிஸ் ஹெலன்

நோர்வூட் போற்றி தோட்டத்தில் ஓர் கலைக் குடும்பத்தில் பிறந்த பிரான்சிஸ் ஹெலனின் தந்தை சிறந்தநாடக ஆசிரியரும், கலைஞருமாவார். தனது தந்தையாரின் நாடகங்களில் அதிகம் ஈடுபாடு கொண்ட இவர் 1977 ம் ஆண்டு தனது தந்தை தயாரித்த 'வேண்டாம் அடிமை வாழ்வு" என்ற நாடகத்தில் குழந்தை நட்சத்திரமாக மிக சிறு வயதில் நடித்ததன் ஊடாக இவரின் கலை வாழ்க்கை தொடங்கிற்று. 1970,1980 களில் கத்தோலிக்க வாலிபர் இயக்கம், மறுமலர்ச்சி மன்றம் போன்றவற்றில் தனது தந்தை மேற்கொண்ட கலைப்படைப்புகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டவர்.

பெ.விஜயகோபால்

சாமிமலை கவரவில தமிழ் மகா வித்தியாலயத்திலே ஆசிரியராக கடமைபுரியும்.பெ.விஜயகோபால் 1997-07-01 ல் வழங்கப்பட்ட தோட்டபுற பாடசாலை ஆசிரியர்களுக்கான நியமத்திலே தெய்வகந்த தமிழ் வித்தியாலயத்திற்கு முதன் முதல் நியமனம் பெற்றார்.சாமிமலை மாநெலி தோட்டத்தை பிறப்பிடமாக கொண்ட இவர் 1975-07-31 ஆந் திகதி திரு.பெரியசாமி திருமதி.புஸ்பவதி தம்பதியனருக்கு மகளாகப் பிறந்தார் இளமை காலத்திலேயே பஜனைப் பாடல்களை பாடும் திறன் பெற்றவர்.

வே.இராமர்

சாமிமலை அவரவத்தை தோட்டத்தை சேர்ந்த வேலாயுதம் நல்லம்மா அவர்களின் மூத்த புதல்வரான வே.இராமர் ஆரம்ப கல்வியை தெய்வகந்தை தமிழ் வித்தியாலயத்திலும் உயர் கல்வியை மஸ்கெலியா சென் ஜோசப் தமிழ் மகா வித்தியாலயத்திலும் மேற்கொண்டவர். மேலும் இளம் கலைமானி பட்டத்தையும் முதுகலைமாணி (தமிழ்) பட்டத்தையும் பேராதனைப் பல்கலைகழகத்திலும் பட்டப்பின் கல்வி டிப்ளோமாவை இலங்கை திறந்த பல்கலைகழகத்திலும் பூர்த்தி செய்தவர்.

என்.சாம்பசிவமூர்த்தி

நோர்வூட் தென்மதுரையை பிறப்பிடமாகவும், ஹட்டன் ஹில்வூட் கிராமத்தை வசிப்பிடமாகவும் கொண்டவராகிய சாம்பசிவமூர்த்தி;. தனது ஆரம்பகல்வியை பொகவந்தலாவை ஹொலிரோசரி தமிழ் மகா வித்தியாலயத்திலும், உயர் கல்வியை ஹட்டன் ஹைலன்ட்ஸ் கல்லூரியிலும் பயின்றார். 1991ம் ஆண்டு ஆசிரியராக சேவையில் உள்வாங்கப்பட்டார்.சிறு வயது முதலே மேடைகளில் பாடத் தொடங்கிய ,வர் கலைத்துறையில் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபடுபவர்.

எஸ்.பிரேம்குமார்

மலையக மக்கள் கலை இலக்கிய செயற்பாட்டில் அதிக ஈடுபாடை கொண்ட சோலை சுப்ரமணியம் பிரேம்;குமார் மஸ்கெலியா கிராப்பு தோட்டத்தை பிறப்பிடமாகவும், பொகவந்தலாவை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்ரமணியம் பாப்பாத்தி ஆகியோரின் மகனுமாவார். சென்மேரிஸ் தமிழ் மகா வித்தியாலயத்தில் ஆரம்ப கல்வியையும் தரம் ஐந்து புலமை சித்தியின் பெயரால் கொழும்பு இந்து கல்லூரியில் இடைநிலைக்கல்வியையும், தொடர்ந்தார். 1995 மீண்டும் பொகவந்தலாவை சென்மேரிஸ் மத்திய கல்லூரியில் தமது கல்வியை தொடர்ந்தார். உயர் கல்வியை பொகவந்தலாவை ஹொலிரோசரி தமிழ் மகா வித்தியாலயத்தில் தொடர்ந்தார். தனது மாணவப் பருவத்திலேயே கலை இலக்கிய அரங்கவியல் செயற்பாட்டில் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டார்.

எம்.தியாகராஜா

2010ம் வருடம் இ,ந்தியாவில் இடம்பெறவிருக்கும் உலக செம்மொழி மாநாட்டில் ,லங்கை சார்பாக மலையக மக்கள் 'கலை அரங்கு" வழங்கும் காமன் கூத்து நிகழ்வில் பங்கேற்கும் மற்றுமொறு கலைஞர் மா. தியாகராஜா ஆவார் இவர் நோர்வூட் போற்றி தோட்டத்தை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டவர். இவரது பெற்றோர் மாரி, செல்லத்தாயி ஆகியோர் தோட்டத் தொழிலாளர்களாவர்.

போல்பெரேரா

பொயிஸ்டன் டிக்கோயா தோட்டத்தைச் சேர்ந்த சின்னையா ஜெபமாலை அவர்களின் புதல்வரான.போல் பெரேரா ஒரு தோட்ட தொழிலாளியாவார். இவர் வாழும் ஊரில் ஐம்பது வருடத்திற்கு மேலாக காமன் கூத்து நடைபெற்று வருகிறது. இத்தகைய சூழலில் வளர்ந்த ,வர் தனது பாடசாலைக் காலத்தில்பல நாடகங்களில் நடித்தும் இசை கருவிகள் இசைப்பதையும் தன் திறமையால் மெருகூட்டிக் கொண்டவர்.

திருமதி .பிரேம்குமார் ஜெயநந்தினி

பலாங்கொடை சீ.சீ தமிழ் மகா வித்தியாலயத்தில் ஆரம்ப கல்வியையும் தமிழ் வித்தியாலயத்தில் இடைநிலை கல்வியையும் கற்றார். பாடசாலை காலத்தில் கலை இலக்கிய துறையில் அதிக நாட்டம் கொண்ட இவர் சிறுகதை ஆக்கம் போட்டியில் அகில இலங்கை ரீதியாக பரிசில்களை வென்றவர்.

ஸ்ரீநிவேதா

சிறு வயதிலேயே கலை ஆர்வம் மிக்க ஸ்ரீ நிவேதா ,ரவீந்திரன் வினோதினி தம்பதியினரின் மகளாவார். இவர் புளியாவத்தை நகரத்தை வசிப்பிடமாக கொண்டவர். தனது ஆரம்பக் கல்வியை புளியாவத்தை தமிழ் மகா வித்தியாலயத்திலும், இடைநிலைக் கல்வியையும், உயர்நிலைக்கல்வியையும் ஹட்டன் ஹைலன்ஸ் மத்திய கல்லூரியிலும் கற்று வருகின்றார்.

இவர்களுடன் உடையலங்காரத்தினை திருமதி வசந்தி ஹெலன் ,திருமதி கிறிஸ்டிலா இராமர் ஆகியோர் மேற்கொள்ளவுள்ளனர்.ஒப்பனையை செல்வி .பழனியாண்டி டலாதேவியும் மேற்கொள்ளவுள்ளனர்.
..

கம்பியூட்டருடன் இணைந்த தமிழ்!


6/26/2010

இந்த நூற்றாண்டின் பயன்பாட்டுக்கு வந்த 'கம்பியூட்டரு'ம் 'இன்டர்நெட்'டும், மனித சமுதாயத்தின் சிந்தனைப் போக்கினையே மாற்றி அமைத்தன என்றால் அது மிகையாகாது.

கம்பியூட்டருக்குப் பின்னர், காலம், மனிதன் நினைத்தபடி ஓடத் தொடங்கியது. உலக உருண்டை அவன் கரங்களுக்குள் இருந்து உருளத் தொடங்கியது. உலகின் எந்த மூலையையும் அவனால் பார்க்க முடிந்தது. எந்த முகவரிக்கும் அடையாளம் காட்ட முடிந்தது.

இதுவரை மொழி மட்டுமே, சமுதாயத் தொடர்பிற்கு ஒரு வழியாய் இருந்த நிலையில், கம்பியூட்டர் வழித் தொடர்பு அனைத்து தடைகளையும் தகர்த்தது.

ஒவ்வொரு மனிதனும், தன் மொழி கம்பியூட்டரில் வர வேண்டும் என எண்ணி, அதற்கான முயற்சியில் இறங்கினான். உலகம் முழுவதும் பரவி இருந்த தமிழ்ச் சமுதாயம் இந்த முயற்சியில் முழு மூச்சாய் இறங்கியது. பரவிக் கிடந்த தமிழர்கள் ஆங்காங்கே அவரவர் ஆர்வத்தில் தமிழைக் கம்ப்யூட்டரில் கொண்டு வரும் முயற்சியில் இறங்கினார்கள்.

இதனால் பல்வேறு வகைகளில், நிலைகளில் அவர்களின் முயற்சிகள் இருந்தன. இந்த முயற்சிகள், தமிழ்ச் சமுதாயத்தினைப் போலவே, ஒருங்கிணைந்த முயற்சியாய் இல்லாமல், தெருவீதிக் கோவில்கள் போல, பலவகை வெளிப்பாடுகளாய் வெளிச்சத்திற்கு வந்தன.

1980 ஆம் ஆண்டுவாக்கில், கம்பியூட்டர் பயன்பாடு பெருகத் தொடங்கிய காலத்தில், 'டாஸ்' இயக்கம் செழிப்பான ஒரு நிலையை அடைந்த காலத்தில், கனடாவில் வசித்த தமிழரான சீனிவாசன், 'டாஸ்' இயக்கத்தில் 'ஆதமி' என்ற சிறிய தமிழ் எடிட்டரைக் கொண்டு வந்தார். இலவசமாக அனைவருக்கும் விநியோகித்தார்.

அப்போதே, 'வேர்ட் லார்ட்' என்ற 'டாஸ்' இயக்க 'வேர்ட் சாப்ட்வேர்' மூலம் பல மேல்நாடுகளில் பிரபலமான, பெங்களூர் 'சாப்ட்வேர்' நிறுவனம், தமிழுக்கு பாரதி என்றொரு தமிழ் 'சாப்ட்வேர்' தொகுப்பினைக் கொண்டு வந்து பிரபலப்படுத்தியது.

விண்டோஸ் புழக்கம்

தினமலர் ஆசிரியர் தன் சொந்த முயற்சியில், 'புனே மொடுலர்' நிறுவனத்தின் துணையுடன் பல எழுத்து வகைகளை உருவாக்கி, பத்திரிக்கையாக்கத்திற்குப் பயன்படுத்தினார். 'விண்டோஸ்' புழக்கத்திற்கு வந்த பின்னர் சீனிவாசன் ஆங்கிலம் + தமிழ்+விண்டோஸ் பெயர் இணைத்து 'ஆதவிண்' என்றொரு தமிழ் 'சாப்ட்வேர்' தொகுப்பினை உருவாக்கி இலவசமாகத் தந்து உதவினார்.

இதே காலக் கட்டத்தில் மலேசியா மற்றும் சிங்கப்பூரினைச் சேர்ந்த அறிஞர்கள் மற்றும் வல்லுநர்கள் 'துணைவன்', 'கணியன்' மற்றும் 'முரசு அஞ்சல்' ஆகிய தொகுப்புகளைக் கொண்டு வந்தனர்.

ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் பாலா பிள்ளை 'தமிழ் நெட்' என்ற வலை அமைப்பினை ஏற்படுத்தி, தமிழர்களிடையே இந்த முயற்சிகளுக்கான ஒரு இணையத் தளத்தை உருவாக்கினார்.

தமிழில் மின்னஞ்சல்கள் உருவாவதில் இவரின் முயற்சி முதலாவதாகவும் முன்னுதாரணமாயும் இருந்தது. பின்னர் சிங்கப்பூர் மாகோ உருவாக்கிய 'குளோபல் தமிழ்', மலேசிய ஜேபி அமைத்த அகத்தியர், சிங்கப்பூர் பழனி கட்டமைத்த 'தமிழ் உலகம்' ஆகிய மின்னஞ்சல் குழுக்களை, தமிழ் மின்னஞ்சல் குழுக்களின் முன்னோடிகள் எனலாம்.

இப்போது இணையத்தில் தமிழ் பயன்படுத்தும் குழுக்கள் பல இயங்குகின்றன. எந்த அஞ்சல் குழுவிலும் எந்த மொழியையும் பயன்படுத்தும் நிலை வந்துவிட்டது.

மலேசிய கம்பியூட்டர் ஆராய்ச்சியாளர் முத்து நெடுமாறன் உருவாக்கிய 'முரசு அஞ்சல்' என்னும் தொகுப்பு இலவசமாக, இணையம் வழியாக வழங்கப்பட்டது. இது கம்பியூட்டர் மற்றும் இணையத்தில் தமிழைப் பயன்படுத்துவதில் ஒரு மைல் கல்லாக அமைந்தது.

இதன் எளிமை, திறன், பயன்படுத்த வழங்கப்பட்ட இடைமுகம் அனைத்தும், தமிழ் மக்களைக் கவர்ந்திட, அதுவே தமிழின் 'சாப்ட்வேர்' தொகுப்பாக உலகத் தமிழரிடையே உலா வந்தது. இன்றும் முன்னேறிய நிலையில் பலவகைகளில் மேம்படுத்தப்பட்டு இத்தொகுப்பினை இலவசமாகவும், கட்டணம் செலுத்தியும் பயன்படுத்தலாம்.

இணையத்தில் மட்டுமின்றி மின் அஞ்சல்களிலும், 'இன்ஸ்டண்ட் மெசேஜ் விண்டோக்க'ளிலும் தமிழைக் கொண்டு வந்த பெருமை முரசு அஞ்சலையே சேரும். இதனை அடுத்து இணையத்தில் பயன்படுத்த வந்த தொகுப்புகளில், கனடாவைச் சேர்ந்த கலையரசன் உருவாக்கி, இலவசமாகத் தந்த, குறள் தமிழ்ச் செயலி பலராலும் மின்னஞ்சல்கள், மற்றும் பிற பயன்பாடுகளில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது.

'சாப்ட்வேர்' தொகுப்புக்கள்

தொடர்ந்து பல தமிழ் 'சாப்ட்வேர்' தொகுப்புகள் தமிழகத்திலிருந்தும், மற்ற நாடுகளிலுருந்தும் வெளியாகின. இந்திய அரசின் 'சி–டாக்' நிறுவனம், வட இந்திய மொழிகளுக்கான கட்டமைப்பில், தமிழையும் கொண்டு வந்தது. ஆனால் அது மக்களிடையே வரவேற்பைப் பெறவில்லை.

வர்த்தக ரீதியிலும் பல நிறுவனங்கள் தமிழ் 'சாப்ட்வேர்' தொகுப்புகளை வெளியிட்டன. இதில் புனேயைச் சேர்ந்த மொடுலர் நிறுவனத்தின் 'லிபி' சொல் தொகுப்பு, தமிழை அச்சுப் பணிகளில் பயன்படுத்துவோருக்கு மிகவும் உதவியாக இருந்தது; இருந்து வருகிறது.

ஆனால் இவற்றிற்கிடையே எழுத்து வகை, அதனை கம்பியூட்டருக்கென அமைக்கப்படும் 'என்கோடிங்' எனப்படும் கட்டமைப்பு வகையில் ஒற்றுமை இல்லாததால், தமிழில் அமைக்கப்பட்ட ஆவணங்கள், தாங்கள் உருவாக்கப்பட்ட எழுத்து வகைகளுடன் வந்தால் தான் படித்து அறிய முடியும் என்ற நிலை தொடர்ந்து தமிழுக்கான தடுப்புக் கட்டையாக இருந்து வந்தது.

தமிழ்நெட் 99

1999 ஆம் ஆண்டில், தமிழக முதல்வராய் இருந்த கருணாநிதி அவர்களின் முயற்சியால் கூட்டப்பட்ட இணைய மாநாடு 'தமிழ்நெட் 99'. இதற்கு ஒரு தீர்வுகாணும் முயற்சியில் தீவிரமாக இறங்கியது. அந்த மாநாட்டுக் கருத்தரங்கத்தில் அமைக்கப்பட்ட குழு, 'டாம்' மற்றும் 'டாப்' என்னும் கட்டமைப்பில் உருவான எழுத்துவகைகளைப் பரிந்துரை செய்தது.

வெளிநாட்டில் வாழும் தமிழர்களால்,'திஸ்கி' என்ற வகையும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் உடன் இருந்தது. ஆனால் இந்த முடிவுகளை எல்லாம் பற்றிக் கவலைப்படாத தமிழ் உலகத்தினர் தொடர்ந்து தாங்கள் கொண்டிருந்த எழுத்து வகைகளிலேயே, இணைய தளங்களை உருவாக்கி, அவற்றைப் படிக்க தங்களின் எழுத்துருக்களை இறக்குவதனைக் கட்டாயமாக வைத்திருந்தனர்.

தொடர்ந்து வந்த கம்பியூட்டர் அறிவியல் வளர்ச்சி, இந்த சிக்கல்களுக்குத் தானாக ஒரு முடிவினைக் கண்டது. இது உலகின் அனைத்து மொழிகளுக்குமான ஒரு தீர்வாக இருந்தது. அதுவே 'யூனிகோட்' ஆகும். ஏற்கனவே இருந்த எழுத்து கட்டமைப்புகள் எல்லாம் '8 பிட்' என்னும் குறுகிய அமைப்பில் இருந்து வருகையில், 'யூனிகோட் 32 பிட்' கட்டமைப்பில் உருவானதால், எழுத்துக்களை நாம் விரும்பிய வகையில் அமைக்கின்ற வசதி, நமக்குக் கிடைத்தது.

தமிழ் யூனிகோட்

இதில் கிடைத்த தமிழ் எழுத்து அமைப்பு முறை, பலரால் குறை சொல்லப்படும் வகையில் இருந்தாலும், இன்றைய நிலையில், அனைத்து தமிழரையும் இணைக்கும் பாலமாக தமிழ் யூனிகோட் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் காரணமாகவே, தமிழ்ப் பயன்பாடு இணையத்திலும், கம்பியூட்டர்களிலும் பெரும் அளவில் பெருகி உள்ளது. இன்றைக்கு இருக்கின்ற 'வலைமனைகள்' என்னும் 'பிளாக்கு'களே இதற்கு எடுத்துக்காட்டுக்களாகும்.

'கூகுள்', 'யாஹூ'சேவைகள்

மேலும் 'கூகுள்', 'யாஹூ' போன்ற இணையத்தில் இயங்கும் நிறுவனங்கள் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து, தமிழைத் தங்கள் வலையகங்களில் பயன்படுத்த வசதி செய்து கொடுத்து வருகின்றன. தமிழிலேயே தங்களின் தளங்களைத் தந்துள்ளன. பயன்படுத்துபவர்கள் தமிழைப் பயன்படுத்த இடைமுகங்களை ஏற்படுத்தித் தந்துள்ளனர்.

தமிழக அரசு, கம்பியூட்டர் கல்வியைக் கற்பதில் மொழி ஒரு தடையாக இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில், +1,+2 வகுப்புகளில் கம்பியூட்டர் பாடங்களை அனைத்து தமிழ் மாணவர்களும், குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற இலக்குடன் தமிழ் வழியில் கம்பியூட்டர் பாடங்களைக் கற்றுக் கொடுக்கத் தொடங்கியது. இதற்கானப் பாட நூல்களை தமிழக அரசின் பாட நூல் கழகம் தமிழில் 1996 முதல் வெளியிட்டு வருகிறது.

தமிழில் பல கம்பியூட்டர் நாளிதழ்கள் வெளி வந்தன. முதன்முதலாக கம்பியூட்டர் பயன்பாட்டினை மக்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற இலக்குடன், 1992 முதல் கம்பியூட்டர் குறித்து,'தினமலர்' நாளிதழ், தமிழில் கட்டுரைகளைத் தந்தது.

கம்பியூட்டர் இன்று உலக மக்களை நேயத்துடன் இணைக்கும் பாலமாக மாறி வருகிறது. அதில் தமிழ் பயன்படுத்தப்படுகையில், கம்பியூட்டர் தமிழ் தனது மக்களைப் பாசத்துடன் சேர்க்கும் கருவியாக மாறுகிறது.

இனி கம்பியூட்டர் என்பது தமிழ் மக்களுக்குத் தமிழில் தான் அமையும் என்ற நிலை விரைவில் உருவாகும் என்பதில் ஐயமேதும் இல்லை. இந்த முயற்சியில் இப்போது நடைபெற்று வரும் செம்மொழி மாநாடு போன்ற நிகழ்வுகள் நிச்சயம் கை கொடுக்கும்.

கம்பியூட்டரில் தமிழைக் கொண்டு வரும் முயற்சியில் பாடுபட்ட, தொடர்ந்து உழைத்துவரும் ஆர்வலர்கள் அனைவருக்கும் உற்சாகம் தந்து உரமூட்டுவோம்.

- டாக்டர் பெ.சந்திர போஸ், சென்னை.

Monday, May 24, 2010

airtel super singer junior 2

SRINISHAALKKA
NITHYASRI
ROSHAN
SRIKANTH
SRIKANTH
SRAVAN,SRIKANTH,ROSHAN,SRATH&PRASANNASUNDAR
PRIYANKA,SAHAANA,ALKKA,SRINISHA&NITHYASRI

Sunday, May 23, 2010

வாருங்கள் என் கல்லூரிக்கு…


வந்தனம் உங்களுக்கு!
இது தான் என் கல்லூரி
இது ஒரு காதல் கோட்டை
காதல் தேசத்தின் தலைமைப்பீடம்
காதல்கள் விற்கப்படும் கலைக்கூடம்
இதற்கு
பல சாஜகான்களும்
இடைநடுவில் இறந்துபோகாத மும்தாஜுகளும்
உரிமை கோருகிறார்கள்…
இது ஒரு சமாதியல்ல…

உள்ளே வாருங்கள்
இதோ இடப்பக்கம் இருப்பது தான்
“கொமன் றூம்”
ஓய்வு அறை
இங்கே காதலர்கள் ஓய்வெடுத்துக்கொள்வார்கள்
காதல் புகுந்து விளையாடும்
புதுமை பெறும்…
இது காதலின்
கதவு சாத்தாத கருமபீடம்…

இந்த வழியில் இருப்பது
“கொட்ராங்கிள்”
முற்றம் என்று வைத்துக்கொள்ளுங்கள்
இங்கே திசைமாறி திரும்பிய
காதல் பறவைகள்
மீண்டும் கைகோர்த்துக்கொளும்
இங்கு இறக்கைகள் சரிபார்க்கப்படும்
அவை மீள இயக்கம் பெறும்…

இதோ பாருங்கள்
இதை பச்சை மரம் என்பார்கள்
காதலிப்பவர்கள் மீது
எச்சமிடாத காகங்களை மட்டும்
அது வளர்க்கிறது…

இந்த மூன்று திசைகளிலும்
விரிவுரை மண்டபங்கள்.
அங்கே அடிக்கடி
தாமரைப்பூக்களும் ரோஜாச்செடிகளும்
மாறிமாறி அடுக்கப்படும்
இடையிடையே
கண்படாமல் இருப்பதற்கும்
கல்லெறி வாங்குவதற்கும்
சிலர் அமர்ந்திருப்பார்கள்
அவர்கள்
முள்ளை பற்றிக்கொண்டு
மலர்களை ரசித்திருப்பார்கள்…

சரி
இந்த வாசலிலிருந்து
இடப்பக்கமாக இருநூறு அடி நடந்தால்
உணவுச்சாலை
காதலர்கள்
இங்கே ஒன்றாக அமர்ந்து
தேநீர் கோப்பையில் தேன் பருகுவார்கள்
தெகிவளை சோற்றை வெள்ளவத்தை உண்ணும்
வெள்ளவத்தைச்சோற்றை தெகிவளை உண்ணும்
கம்பஹா சோற்றை காலி உண்ணும்
காலிச்சோற்றை கம்பஹா உண்ணும்…
காதலால்
ஊர்களுக்கிடையில் உணவுச்சேர்க்கை…
காதலிக்காதவர்கள்
தேநீர் கோப்பையில் தேநீர் குடிப்பார்கள்…

வாருங்கள் மேலே போகலாம்
இதோ இருப்பது தான் நூலகம்
உலகின் பல பாகங்களிலும்
காதலிக்க முடியாதவர்கள்
காதலித்தவர்களை கரம்பிடிக்க முடியாதவர்கள்
எழுதி வைத்த புத்தகங்கள்
அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன…
இது காதல் தோல்விகளின் கல்வெட்டு!
இங்கே
தேவதைகளும் “தேவதையன்களும்”
ஒரே புத்தகத்துள் ஒளிந்திருப்பார்கள்
காதல்
மீட்சி பெறும்
மோட்சம் பெறும்
சில வேளைகளில்
சாட்சியின்றி சலனம் பெறும.;...

அது சரி
நூலகம் வரை வந்துவிட்டீர்கள்
இது வரை என்னைப்பற்றி
எதுவுமே கேட்கவில்லையே
நான் தான்
அந்த மரத்து காகங்களினால்
தேடித்தேடி எச்சமிடப்படுபவன்…

-காரையம்சன்-

Wednesday, May 12, 2010

அன்புக்கு ஓர் கவிதை...




அம்மா,
இன்று அன்னையர் தினமாம்
உன்னை நினைக்கச்சொல்லி
எனக்கின்று ஓர் தினமாம்...

உண்டு களித்து உறங்கியிருப்பாய் இந்நேரம்
கண்டு களித்து கவிதை வரைய
கண்முன் வேண்டும் உன்முகம்…
கவிதை ஒன்றைத்தவிர
வேறெதையும் சிந்திக்க முடியாத
இரவு இன்றெனக்கு…

அம்மா நீ,
என்பு சதைகொண்ட அன்பு
எண்ணற்ற பேர்களில்
என்னை ஆரம்பித்துவைத்தவள் - உன்னில்
வாய் மூக்கு செவி போன்று
வளர்ந்த ஓர் அங்கம் நான்…
உதிர்ந்து நான் விழுந்தபோதும்
உதிரத்தை பாலாக்கியவள் நீ

நீ எனக்கு
கருவறைதந்த கண்ணியவாள்…
எத்தனையோ கண்டுபிடிப்புக்களில்
என்னை கண்டுபிடித்தவள்
உலகத்தை எனக்கும்
என்னை உலகத்திற்கும்
அறிமுகப்படுத்தியவள்…

அம்மா நீ என்னை
கட்டியணைத்து கதை சொன்னவள் - நான்
தொட்டிலில் கிடந்து
துன்பம் தந்தவன்…

நீ ஒரு மெழுகுவர்த்தி
நீ உருகி வழிய
உண்டானவன் நான்…
உருக்குலைந்தவள் நீ
உருப்பெற்றவன் நான்…


அம்மா
கருவறையில் காவலிருந்த தெய்வமுண்டு - நீ
கருவறையில் எனை வைத்து
காவலிருந்த தெய்வமல்லவா

என்
மூக்கு பிடித்துவிட்டது முதல்
முழங்கால் புண்வரை
முன்னின்று கவனித்தவள் நீ…

கருவானேன் தரித்துக்கொண்டாய்
சிசுவானேன் சுமந்துகொண்டாய்
முத்தமிட்டேன் முந்திக்கொண்டாய்
கண்ணீர் விட்டேன் கட்டியணைத்தாய்
கட்டியணைத்தேன் கண்ணீர் விட்டாய்

தொண்டை நாக்கை விழுங்கினாலும்
தொப்புளில் தழும்பு மறைந்திடுமா
அண்டைவெளிகள் அணைந்தாலும்
அளவில் உன் அன்பு குறைந்திடுமா

ஏழு கடல் தாண்டினாலும்
எட்டாவது கடலில் மாண்டாலும்
ஊட்டி வளர்த்தவளே
உன்னுடன் இருக்கும் ஓர் வழியை
காட்டிக்கொடுத்து விடு
காலமெல்லாம் காயம் ஆறும்.

-காரையம்சன்

Tuesday, May 4, 2010

"தமிழருக்கான மருத்துவ ஊழியர் சாமுவேல் ஃபிஸ்க் கிறீன்

விஞ்ஞான மருத்துவத் தமிழ் முன்னோடி

"புத்தம் புதிய கலைகள் பஞ்சபூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும் மெத்த வளருது மேற்கே - அந்த மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை.." - பாரதி.

அன்று பாரதி அறியாத ஒரு சாதனை யாழ்ப்பாணத்திலே, ஈழத்தமிழகத்திலே நடந்து முடிந்ததை பாரதி அறியவில்லை. 1847ஆம் ஆண்டிற்கும் 1872ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்திலே, குறிப்பாக அந்தக் கால் நூற்றாண்டு காலத்தில், புத்தம் புதிய கலைகள், குறிப்பாக, மேனாட்டு மருத்துவக்கலை - அமெரிக்க மிஷன் ஊழியரின் முயற்சியால் யாழ்ப்பாணத்திலே வளர்க்கப்பட்டது. இதற்கு அச்சாணியாக இருந்து செயற்பட்டவர் டாக்டர் சாமுவேல் ஃபிஸ்க் கிறீன் (Dr Samuel Fisk Green) என்ற அமெரிக்க வைத்தியரும் கிறிஸ்தவ மத ஊழியருமாவார். யாழ்ப்பாணத் தமிழரையும் சென்னையில் இருந்த கிறிஸ்தவ மத ஊழியரையும் தவிர, பிறர் இந்த முன்னேற்றத்தைப் பற்றி அறியவில்லை.

அமெரிக்க மிஷன் ஊழியராக யாழ்ப்பாணம் வந்து ஊழியஞ் செய்த அப்பெருமான், மேனாட்டு மருத்துவக் கலையை நம்மக்களிடையே படிப்படியாக அறிமுகப்படுத்தினார். மானிப்பாயிலே மருத்துவமனை நிறுவி, மருத்துவம் செய்ததுடன் அன்னார் நின்று விடவில்லை. தொடர்ந்து, சுதேசிகளுக்கு மேனாட்டு மருத்துவப் பயிற்சி அளித்தார்.
காலப்போக்கில், தமிழிலே மருத்துவக் கல்வியை ஆரம்பித்தார். ஆங்கில மொழி மூலம் 29 மருத்துவர்களுக்குப் பயிற்சி அளித்தார். தமிழ்மொழி மூலம் 33 மருத்துவர்களுக்குப் பயிற்சி அளித்தார்.


தமிழ் மக்களிடையே பணியாற்றச் செல்கிறேன் என அறிந்தபடியால், வருமுன்பே சிலரிடம் ஓரளவு தமிழ் பயின்றார், வந்தபின், கிரமமாகத் தமிழ் பயின்று, மேனாட்டு மருத்துவ நூல்களைத் தமிழாக்கம் செய்வதில் ஆர்வம் கொண்டார். அதனால், தமிழருக்குக் கிடைத்த மருத்துவ நூல்கள் எத்தனை?
கட்டரின் அங்காதிபாதம், சுகரணம் (1857)
மோன்செல்ஸ் மாதர் மருத்துவம் (1857)
துருவிதரின் இரணவைத்தியம் (1867)
கிறேயின் அங்காதிபாரதம் (1872)
மனுஷ சுகரணம் (1883)
வைத்தியாகரம் (1872)
கெமிஸ்தம் (1875)
வைத்தியம் (1875)
கலைச் சொற்கள்

இவைதவிர, பெண்கள் குழந்தைகளுக்கான மருத்துவ நூல்களும் பதார்த்த சாரம், சிகிச்சம், மருத்துவம் முதலிய வேறுபல சிறு கைநூல்களும் அவரால் வெளியிடப்பட்டன.

யாழ்ப்பாணத்திலே தமது மிஷ்னரிச் சேவையை ஸ்திரப்படித்திய அமெரிக்க மிஷன் மருத்துவ சேவையையும் துவங்குவதென 1819ஆம் ஆண்டிலே தீர்மானித்தது. அதன்படி 1820ஆம் ஆண்டிலே பண்டத்தரிப்பில் முதலாவது மருத்துவ நிலையம் நிறுவப்பட்டது. சமயப் பணிக்காகவும் கிறிஸ்தவ மத போதனைக்குமென வந்த மிஷனரிமார் சமூக சேவையும் மனிதாபமான வழிகளையும் தொடர்ந்ததை இது உணர்த்துகிறது. இறைவனை 'மக்களிலே காணவேண்டும்' என்ற லட்சியத்தை அவர்கள் நடைமுறைப்படுத்தினர்.

மருத்துவச் சேவையை 1820-களிலே துவக்கி வைத்தவர் டாக்டர் ஸ்டேர். அவரைத் தொடர்ந்து பணியாற்ற வந்தவர் டாக்டர் நேதன் உவாட். அவர் தம் சேவைக் காலம் முடிவடைய வந்து பணியை ஏற்றவர் தான் டாக்டர் சாமுவேல் கிறீன். இவர் அமெரிக்க நாட்டிலே, மசச் சூசஸ்ட் மாநிலத்திலே "வூஸ்டர்" என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். நீராவிக் கப்பல் மூலம் வந்த கிறீன், சென்னையில் தங்கி, பின்பு 1847 ஒக்டோபர் ஆறாம் திகதி பருத்தித்துறையை வந்தடைந்தார். வட்டுக்கோட்டையிலே தமது பணியை ஆரம்பித்து பின்னர் 1848 இலே மானிப்பாய்க்கு மாற்றம் பெற்றார். அங்குதான் கிறீனின் சாதனை யாவும் இடம்பெற்றன. மருத்துவக் கல்வி, தமிழியற் கல்வி, நூலாக்கம், கலைச் சொல்லாக்கம் - இவ்வண்ணம் பல்வேறு முயற்சிகள்.



1855ஆம் ஆண்டிலே 'கொலரா' நோயால் பலர் பீடிக்கப்பட்டனர். அவர்களுடன் டாக்டர் கிறீனும் ஒருவர். கிறீனின் சகோதரி, அவரை அமெரிக்கா திரும்புமாறு வேண்டிக் கொண்டார். ஆனால் அவரோ, மனவுதியுடன், "தாம் தொடங்கிய தமிழில் மருத்துவம் தரும் பணியை" இடையிலே நிறுத்திவிட்டுத் திரும்புவதற்கு மறுத்துவிட்டார். "எனது 10 ஆண்டுகளையும் இங்கு நிறைவு செய்யவே நான் விரும்புகிறேன்" என்று முடிவாகக் கூறினார்.

தமது பத்தாண்டுச் சேவை முடிந்தபின் அமெரிக்கா திரும்பி ஓய்வுபெற்ற கிறீன், திருமணஞ் செய்துகொண்டு, ஐந்து ஆண்டுகளின் பின் மீண்டும் யாழ் திரும்பி, தமிழில் மருத்துவங் கற்பித்தல், நூல்கள் எழுதுதல் ஆகிய பணிகளைத் தொடர்ந்தார்.

கல்வி வசதி பெற்ற யாழ்ப்பாணத்தவரின் வாழ்க்கை முறை பற்றி கிறீன் என்ன கருதினார்? 1864ஆம் ஆண்டிலே, அவரே கூறுகின்றார்:
"வேட்டி காற்சட்டையாகவும், சால்வை மேற்சட்டையாகவும், தலைப்பாகை தொப்பியாகவும், தாவர போசனம் மாமிச போசனம் ஆகவும், குடிசை வீடாகவும் மாறுகின்றன. எனவே, நான் எண்ணுகிறேன்... ஐரோப்பியரின் நடையுடை பாவனைகளைப் பின்பற்றும் இந்துக்களை விடக் கிறிஸ்தவ இந்துக்களையே காண ஆசைப்படுகிறேன்." கிறிஸ்தவராதல் என்றால் தேசியத்தை இழப்பதல்ல என்பதைத் தெளிவாகக் கூறியுள்ளார்.

மருத்துவக்கல்வியை மானிப்பாயிலே தமது கல்லூரியில் தமிழில் கற்பதென்று 1855ஆம் ஆண்டிலேயே தீர்மானித்தார். அப்போது மாணவர் சிலர் அம்மாற்றத்தை விரும்பவில்லை என உணர்ந்தார். அவ்வேளையிலே தமது கருத்தை வெளிப்படையாகக் கூறினார்.
"எதிர்காலத்திலே வைத்தியர்கள் தமது சொந்தக் கிராமங்களிலே சேவையாற்றல் வேண்டும். தமது கிராமங்களிலே வாழ்ந்து மக்கட் பணியாற்றலே நோக்கமாகும். அதற்கு இணங்க மறுப்பவர்கள், வேறு தொழிலைத் தேடிக் கொள்ளலாம். ஈழத்தில் தமிழில் கற்க இணங்குபவர் மீண்டும் தமது கல்வியைத் தொடரலாம்." இவ்வண்ணம் உறுதியாகக் கூறிய கிறீன், தமிழில் மேனாட்டு மருத்துவதைத் துவங்கிய முன்னோடியாவார். தமிழ்மொழி மூலம் 33 மேனாட்டு வைத்தியரைக் கற்பித்த பின்பே, அவர் அமெரிக்கா திரும்பினார். எனினும், அங்கிருந்தும் தமிழ் நூல்களை வெளியிடும் பணியைத் தொடர்ந்தார். அன்னார் மருத்துவத் தமிழ் எனவும் அறிவியல் தமிழ் முன்னோடி என்றும் தமிழரால் கௌரவிக்கப்படல் தவறில்லையே?

தாம் இறந்தபின் ஒரு நினைவுக்கல் இருக்குமாயின் "தமிழருக்கான மருத்துவ ஊழியர் (Medical Evangelist to the Tamils)" என அதில் பொறிக்குமாறு வேண்டிக் கொண்டார். 1884இல் டாக்டர் கிறீன் அவர்கள் இறந்தபோது அவ்வேண்டுகோள் நிறைவேற்றப்பட்டது. வூஸ்டர் கிராம அடக்கசாலையில் அந்நினைவுக்கல் கிறீனை நினைவு படுத்தி இன்றும் நிமிர்ந்து நிற்கின்றது

யாழ் நூல் தந்த சுவாமி விபுலாநந்தர்


சுவாமி விபுலாநந்தர் பிறந்து சுமார் 114 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றது. சுவாமி விபுலாநந்தரின் கல்விப் பணியும் அவர் ஆற்றிய தமிழ்ப் பணியும், அவர் உருவாக்கிய தாபனங்களும் காலத்தால் மறையாது. இலங்கையில் தமிழ்த் திறனாய்வுத்துறை வளர்ச்சி பெறுவதற்கு முதற்படியை அமைத்துக் கொடுத்தவர் சுவாமி விபுலாநந்தரே என்றால் அது மிகையாகாது. இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழ் இருக்கும் வரை முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தரின் திருநாமமும் வாழ்ந்து கொண்டே இருக்கும்.


சுவாமி விபுலாநந்தரின் இயற்பெயர் மயில்வாகனன் ஆகும். இவர் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் காரைதீவு என்னும் ஊரில் 27-03-1892 இல் சாமித்தம்பி, கண்ணம்மையார் தம்பதிகளுக்கு பிறந்தார்.

இவருடைய ஆரம்பக் கல்வி கல்முனை மெதடிஸ்த ஆங்கிலப் பாடசாலையிலும் மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியிலும் இடம்பெற்றது. Cambridge Senior பரீட்சையில் சித்தியடைந்த பின்னர், அவர் புனித மைக்கல் கல்லூரியில் ஆசிரியராகச் சிலகாலம் பணி புரிந்து, அதன் பின் கொழும்பில் உள்ள ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு விரிவுரையாளராயிருந்த தென்கோவை கந்தையா பிள்ளையிடம் பண்டைய தமிழ் இலக்கியங்களைக் கற்றார்.

ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் 1912ஆம் ஆண்டு பயிற்றப்பட்ட ஆசிரியர் என்ற சான்றிதழுடன் மீண்டும் மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியில் ஆசிரியராக இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தார். 1915ஆம் ஆண்டு கொழும்பு அரசினர் தொழிநுட்பக்கல்லூரியில் சேர்ந்து விஞ்ஞானம் பயின்று 1916இல் விஞ்ஞானத்தில் டிப்ளோமா பட்டத்தையும் பெற்றார். அத்துடன் மதுரைத் தமிழ்ச்சங்கம் நடத்திய தேர்வில் தோற்றி பண்டிதர் பட்டத்தையும் பெற்றார். இலங்கையிலிருந்து இப்பட்டத்தை முதன்முதல் பெற்றவர் சுவாமி விபுலானந்தரே. கொழும்பு அரசினர் தொழினுட்பக் கல்லூரியில் இரசாயன உதவி விரிவுரையாளராக பணியாற்றினார் மயில்வாகனனார். அவரின் விரிவுரைகள் மாணவர் மத்தியில் பெரும் சிறப்பைத் தேடிக் கொடுத்தன. அதனால் 1917ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் (சென் பற்றிக்ஸ்) கல்லூரிக்கு விஞ்ஞான ஆசிரியராக விரும்பி அழைத்தனர். அதனை பெருவிருப்புடன் ஏற்றுக் கொண்டார். அத்துடன் 1920 ஆம் ஆண்டு லண்டன் பல்கலைக்கழகம் நடத்திய BSc தேர்வில் தோற்றி சித்தியடைந்தார். மயில்வாகனனாரின் மொழிப்புலமையையும் ஆற்றலையும் அறிந்த மானிப்பாய் இந்துக்கல்லூரி முகாமையாளரும், திருப்புகழுக்கு உரை எழுதியவருமான வழக்கறிஞர் திருவிளங்கத்தாரின் வேண்டுகோளுக்கிணங்கி மானிப்பாய் இந்துக்கல்லூரியின் அதிபர் பதவியை ஏற்றுக்கொண்டார்.

இயல்பாகவே இறை நாட்டம் கொண்டிருந்த மயில்வாகனன் 'ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன்', சமயத்திற்காக ஆற்றி வரும் பணிகளை அறிந்து, தம்மையும் அந்த அமைப்புடன் ஈடுபடுத்திக் கொள்ளலாமென எண்ணியிருந்த வேளையில், யாழ்ப்பாணத்துக்கு 1917ஆம் ஆண்டில் சுவாமி சர்வானந்தர் வருகை புரிந்தார். சர்வானந்தரின் தொடர்பு மயில்வாகனனின் உள்ளத்துள் 'திறவுத் தூய்மை' எனும் திருவிளக்கை ஏற்றி வைத்தது.

தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக 'யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம்' என்ற கழகத்தை அமைத்து தமிழை வளர்க்கலானார். இந்தச் சங்கத்தின் மூலம் பிரவேசப் பண்டிதர், பாலபண்டிதர், பண்டிதர் என மூன்று தேர்வுகளை ஏற்படுத்தினார். மயில்வாகனனாரின் இந்த முயற்சி எத்தனையோ பண்டிதமணிகளை ஈழநாட்டிற்கு அளித்துள்ளது.

மனத்தை ஈர்ந்து வந்த துறவுணர்வு, நாளும் பொழுதும் பெருகி, ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷனில் சங்கமிக்கத் துடித்துக் கொண்டிருந்தார். ஆசிரியப் பதவியைத் துறந்து 1922 ஆம் ஆண்டில் ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷனில் இணைந்து சென்னைக்குப் புறப்பட்டார், மயில்வாகனன். சென்னையில் மயிலாப்பூர் மடத்தில் சுவாமி சிவானந்தரினால் பிரபோத சைத்தன்ய பிரிவில் பிரமச்சரிய தீட்சையும், சந்நியாச தீட்சையும் வழங்கப்பட்டன. இரண்டு வருடங்கள் அங்கு பயின்ற அவர், இராமகிருஷ்ண மிஷன் நடத்திய 'இராமகிருஷ்ண விஜயம்' என்ற தமிழ்ச் சஞ்சிகைக்கும், 'Vedanta Kesari' என்ற ஆங்கில சஞ்சிகைக்கும் ஆசிரியராகவிருந்து பல அரிய கட்டுரைகளை எழுதினார். மதுரைத் தமிழ்ச்சங்கம் நடத்திய பண்டித பரீட்ஷையின் பரீட்ஷார்த்தகராக நியமிக்கப்பட்டார். தமிழ்ச்சங்க வெளியீடான 'செந்தமிழ்' எனும் சஞ்சிகையில் இலக்கியக் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி வந்தார். ஷேக்ஸ்பியரின் நாடகங்களை அடிப்படையாகக் கொண்டு அவர் பல திறனாய்வுக் கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறார். இக்கட்டுரைகள், 'மதங்க சூளாமணி' என்ற தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.

1924ஆம் ஆண்டு சித்திரை மாதம் பௌர்ணமி தினத்தில் சுவாமி சிவானந்தரால் "சுவாமி விபுலாநந்தர்' என்ற துறவறப்பெயர் வழங்கப்பட்டது. அதன் பின்னர், அவர் இலங்கை திரும்பி, இராமகிருஷ்ண மிஷன் மேற்கொள்ளும் கல்விப் பணிகளை ஒருங்கமைத்தார்.

செட்டி நாட்டாரசர் வேண்டுகோளின் படி, சுவாமி விபுலாநந்தர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் 1931 ஆம் ஆண்டு தமிழ்ப் பேராசிரியர் பணியை ஏற்று, பல்கலைக்கழக வரலாற்றில் என்றென்றும் நினைத்து போற்றக்கூடிய தம் தமிழ்த் தொண்டைப் பதிவு செய்தார். அக்காலப் பகுதியில் தான் அவருடைய இசை சம்பந்தமான ஆராய்ச்சி ஆரம்பமாகியது. புராதன தமிழர் இசை பற்றி அவர் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். 1934 ஆம் ஆண்டில், அண்ணாமலை பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் பதவியில் இருந்து விலகி இலங்கை திரும்பிய அடிகளார், இங்கு இராமகிருஷ்ண மிஷன் மேற்கொண்டு வந்த கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.

இராமகிருஷ்ண மிஷன் இமயமலைப் பகுதியில் உள்ள Almorah என்ற இடத்தில் மாயாவதி ஆசிரமத்தில் இருந்து வெளியிடும் 'பிரபுத்த பாரத (Prabuddha Bharatha)' என்ற சஞ்சிகையின் ஆசிரியராக 1934 ஆம் ஆண்டில் விபுலாநந்த அடிகள் நியமிக்கப்பட்டார். அங்கு தான், இசைத் தமிழ் பற்றிய முழுமையான ஆய்வு செய்யப் பெற்று, அரிய நூலாகிய 'யாழ் நூல்' உருவாக்கம் பெற்றது.

1943 ஆம் ஆண்டில், இலங்கையில் பல்கலைக்கழகம் இயங்கத் தொடங்கியபோது தமிழ்த் துறையின் முதலாவது பேராசிரியராக பலரின் வேண்டுகோளிற்கிணங்க பணிபுரிய இணங்கினார். தமிழ் ஆய்வுத்துறை எவ்வழியில் செல்லவேண்டும் என்ற திட்டங்களை சுவாமி விபுலாநந்தரே வகுத்தார் என்பது நினைவில் இருக்கத்தக்கது. அவரைத் தொடர்ந்தே பேராசிரியர் கணபதிப்பிள்ளை, பேராசிரியர் செல்வநாயகம், பேராசிரியர் வித்தியானந்தன், பேராசிரியர் சதாசிவம் போன்ற அறிஞர்கள் தமிழ்த் துறையை விருத்தி செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சுவாமி அவர்களின் தமிழ் தொண்டால் தலை சிறந்து விளங்குவது அவருடைய "யாழ்நூல்" ஆராய்ச்சியாகும். சுவாமி அவர்கள் பதினைந்து ஆண்டு காலம் ஆராய்ந்து கண்டுணர்ந்த யாழ்நூலினைக் கரந்தை தமிழ்ச் சங்கத்தின் ஆதரவுடன் திருக்கொள்ளம் பூதூர்த் திருக்கோயிலில் நாளும் செந்தமிழ் இசைபரப்பிய ஞானசம்பந்தனின் சந்நிதானத்தில் இசை விற்பன்னர்கள் வியக்க, கற்றோரும், மற்றோரும் பாராட்ட தேவாரப்பண்களை தாமே அமைத்து 1947 ஆம் ஆண்டு ஆனித் திங்களில் அரங்கேற்றினார்.

முதல் நாள் விழாவில் திருக்கோயில் வரிசைகளுடன் இயற்றமிழ்ப்புலவர்கள், அறிஞர்கள் சூழ்ந்து வர சுவாமி அவர்களை தெற்குக் கோபுர வாயிலின் வழியாக திருக்கோயிலுக்கு அழைத்து வந்தார்கள். சுவாமி அவர்கள் தானே ஆராய்ந்து கண்டுபிடித்த வரைபடத்துடன் விளக்கிய பின்னர், அவர் தயாரித்த முளரியாழ், சுருதி வீணை, பாரிசாதவீணை, சதுர்த்தண்டி வீணைகளைத் தாங்கி சிலர் சென்றார்கள். நாச்சியார் முன்னிலையில் சுவாமி இயற்றிய 'நாச்சியார் நாண்மணிமாலை' வித்துவான் அவ்வை துரைசாமிப்பிள்ளை அவர்களால் படிக்கப்பட்டு அரங்கேறியது. பாராட்டுரைகளுக்குப் பின்னர் சங்கீதபூஷணம் க.பெ. சிவானந்தம் பிள்ளை சுவாமிகளால் கண்டுணர்ந்த யாழ்களை மீட்டி இன்னிசை பொழிய முதல் நாள் விழா இனிதாக நிறைவேறியது.

இரண்டாம் நாள் விழாவில் நாவலர் சோமசுந்தர பாரதியார், 'குமரன்' ஆசிரியர் சொ. முருகப்பா, தமிழ்ப்பேராசிரியர் தெ. பொ. மீனாட்சிசுந்தரம் பிள்ளை, சென்னைப் பல்கலைக்கழக சாம்பமூர்த்தி ஐயர், இசைப் பேராசிரியர் சுவாமிநாத பிள்ளை, கரந்தக் கவியரசு வேங்கடாசலம் பிள்ளை, அறிஞர் டி.எஸ். அவிநாசிலிங்கம் செட்டியார், சொல்லின் செல்வர் ரா.பி. சேதுப்பிள்ளை, சுவாமி சித்பவாநந்தர், புரவலர் பெருமான் பெ. ராம. ராம. சித. சிதம்பரம் செட்டியார், மற்றும் பலர் ஆய்வுரை நிகழ்த்தினார்கள். பின்னர் சுவாமி விபுலாநந்தர் யாழ் பற்றிய அரிய தகவல்களை எடுத்துவிளக்கினார். வித்துவான் வெள்ளைவாரணர் யாழ்நூலின் பெருமைகளை எடுத்து விளக்கினார். பின்னர் "யாழ்நூல்" அரங்கேற்றப்பட்டது.

சிலப்பதிகாரத்தின் அரங்கேற்றுக் காதையில், யாழ் ஆசிரியன் அமைதி கூறும் இருபத்தைந்து அடிகளுக்கு இயைந்த விரிவுரையாகவும், விளக்கமாகவும் அமைந்தது யாழ் நூல்! ஆயிரம் ஆண்டுகளாக வழக்கற்று மறைந்த இசைத்தமிழின் அருமையைத் தமிழர் உணர்ந்து பெருமை கொள்ளச் செய்தது இந்த நூல்.

யாழ்நூல் அரங்கேற்ற விழாவில் கலந்து கொள்வதற்கு புறப்படும் முன்னர் சுவாமி அவர்கள் உடல் நலம் குன்றி இருந்தார். பயணம் செய்யக் கூடாதென்ற வைத்தியர்களின் ஆலோசனையையும் கேளாது நீண்ட நெடும் நாட்களாக தாம் கண்ட இலட்சியக்கனவை நனவாக்க தமிழர்களின் பழம் பெருமையை எடுத்தியம்ப, மறைந்துபோன யாழிசையைப் பரப்ப பயணமானார். ஓய்வு உறக்கமின்றி செயல்பட்டதால், உடலும் உள்ளமும் பாதிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் தளராத நம்பிக்கையே அவரை வழிநாட்த்தியது. அதனால் கடுமையான நோயின் பாதிப்புக்குள்ளானர்.

யாழ் நூல் அரங்கேற்றத்துக்கு பின்னர் பாதிக்கப்பட்ட நிலையில் நாடு திரும்பினார். கொழும்பில் மருத்துவ விடுதி ஒன்றில் தங்கி சிகிச்சை பெறலானார். 1947 ஆம் ஆண்டு ஆடித்திங்கள் 19ஆம் நாள் சனிக்கிழமை இரவு சுவாமி விபுலாநந்தர் அமரத்துவம் அடைந்தார். சுவாமி அவர்களின் பூதவுடல், சுவாமி அவர்கள் கண்ணும் கருத்துமாக உருவாக்கிய மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலயத்தின் முன்னாலுள்ள மரத்தின் கீழ் அமைக்கப்பட்ட கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.

சுவாமி அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை மேல் சமாதி ஒன்று எழுப்பப்பட்டது. அதில் சுவாமி அவர்கள் யாத்த:

"வெள்ளைநிற மல்லிகையோ?
வேறெந்த மாமலரோ?
வள்ளல் அடியிணைக்கு

வாய்த்த மலரெதுவோ?
வெள்ளைநிறப் பூவுமல்ல!
வேறெந்த மலருமல்ல!
உள்ளக் கமலமடி

உத்தமனார் வேண்டுவது!"

என்ற உயிர்த்துடிப்புமிக்க கவிதா வரிகள் பொறிக்கப்பட்டுள்ளன.